சிசுபாலன்
ஐவகை வடிவாய் எங்குமாய் நின்ற பங்கயக் கண்ணன் திருமாலைக்
காண துருவாச முனிவர் வைகுந்தம் சென்றான். சென்றவனைக் கோயில் வாயில் காப்போரான துவார
பாலகர் தடுத்து நிறுத்தினர். தன்னை விலக்கிய அவர்களை நோக்கி, கோயில் வாயில் காவல் ஒழிந்து
பூமியில் பிறப்பீராக என்று சாபமிட்டான். துளப மாலையான் முனிவனை எதிர்கொண்டு, துவார
பாலகர் சாபம் கடப்பது எந்நாள் என்று கேட்டான். கேட்ட திருமாலுக்கு முனிவன், உன் அன்பராய்
எழுமுறை பிறந்து வருதல் அல்லது உன் பகைவராய் மும்முறை தோன்றுதல் ஆகிய இவற்றுள் ஒரு
வகையால் சாபம் தீரும் என்றான். உடனே திருமால் துவார பாலகரை நோக்கி, எவ்வழியில் நும்
சாபம் கடக்க விரும்புகின்றீர் என வினவினார். துவாரபாலகர் திருமால் திருவடியைத் தொழுது,
வான்பிறப்பு ஏழை வேண்டோம். உனக்கு வெம்பகையாய் மும்முறை தோன்றி எம் சாபம் நீங்க விரும்புகின்றோம்.
திருமால் அவர்கள் வேண்டிய வரம் அருளினான்.
துவாரபாலகர்
முதலில் இரணியன், இரணியாக்கதன் என்ற பெயருடன் தோன்றி உலகில் கொடுமை பல செய்து வருங்கால்,
திருமால் நரசிங்கமாய்த் தோன்றி இரணியனையும், வராகமாய்த் தோன்றி இரணியாக்கத்தனையும்
அழித்தான். இருவரும் இரண்டாம் முறையாக இராவணனும் கும்பகருணனுமாகப் பிறந்தார். திருமால்
தசரதமனாகத் தோன்றி அவதாரமான கண்ணனுக்கு உறவினராய்த் தோன்றினர். மாமனாகவும், அத்தை மகனாகவும்
பிறந்தார். மாமன் கம்சன் அத்தை மகன் சிசுபாலன். கம்சன் சிசுபாலன் இருவரும் கொடுமை பல
செய்து வந்தனர். கம்சனை ஒழித்தான் கண்ணன்.
பாண்டவர்
நடாத்தும் இராசசூய யாகத்திற்கு வந்தான் சிசுபாலன். அவன் சேதி நாட்டை ஆண்டு வந்தான்.
அகர பூசனைக்குக் கண்ணன் உரியவன் என்று வியாச முனிவன் கூறியதைக் கேட்டு சிசுபாலன் வெகுண்டான்.
கண்ணனைப் பலவாறு பழித்துரைத்தான். அதனைக் கேட்டு வெகுண்ட கண்ணன் அவனைப் போருக்கு அழைத்தான்.
நடந்த போரில் கண்ணன் திகிரிப் படையால் சிசுபாலன் அழிந்தான்.
Comments
Post a Comment