பூக்கொள்நிலை
சங்கப் பாடல்கள் போர் பற்றிய செய்திகளை
அதிகமாக உணர்த்துகின்றன. போருக்குச் செல்லும் முன் அப்போருக்குரிய பூவினை மன்னன் வழங்குதல்
மரபு. இது பூக்கொள் நிலை எனப்படும். இதுபற்றித் தொல்காப்பியர் ஒன்றும் குறிப்பிடவில்லை.
ஆனால் ஐயனாரிதனார் காஞ்சிப் படலத்தின் ஒரு துறையாகப் பூக்கொள் நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.
”காரெதிரிய கடற்றானை
போரெதிரிய பூக்கொண்டன்று” (பு.வெ.மா.70)
என்பது இலக்கணம்.
இவ்வாறு பூக்கொள்ளுதலை இழிசினன் தண்ணுமை கொட்டி அறிவிக்கின்றான். கழாத்தலையார்,
”பாசறைப்
பூக்கோ ளின்றென் றறையும்
மடிவாய்த் தண்ணுமை யிழிசினன்”(புறநா.289)
என்பர். சங்க
காலத்தில் காணப்பட்ட இம்மரபினையொட்டி ஐயனாரிதனார் பூக்கொள் நிலை என்னும் துறை வகுத்துள்ளார்
எனலாம்.
Comments
Post a Comment