கிரகணங்கள்
கிரகணம் என்ற சொல்லுக்குப் பிடீத்தல், பிடித்தல், பற்றிக் கொள்ளுதல் என்றெல்லாம்
தமிழகராதி கூறுகிறது. சோதிடச் சாத்திரத்தில் சூரிய கிரகணத்திற்காகக் கோள்நிலைகள் பற்றி
பெரும்பான்மையானச் சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன. இக்கிரகணம் குறித்து வானியல்களும்
துல்லியமாகக் கூறுகின்றன. வானியல் துறை மற்றும் சோதிடத்துறைகளில் இந்நிகழ்வுக்கானக்
கணிதங்கள் உள்ளன. இக்கிரகணம் கற்பனையான ஒன்றல்ல. முற்றிலும் அறிவியல் ரீதியானது. வானியலார்
இக்கிரகணத்தை சோலார் எக்கிளிபிடிக்ஸ் என்றும் லூனார் எக்கிளிபிடிக்ஸ் என்றும்
இரண்டு வகையாக நெறிப்படுத்தியுள்ளனர். சோதிட நூல்களும் சூரிய கிரகணம் என்றும் சந்திர
கிரகணம் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.
பூமி, சூரியனை ஆதாரமாகக் கொண்டுச் சுற்றி
வருகின்றது. இப்பூமியின் துணைக்கோள் சந்திரனாகும். எல்லா துணைக் கோள்களும் தனது தாய்க்கோளினை
சுற்றி வருகின்றன என்பது வானியல் உண்மையாகும். எனவே சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது.
பூமி சூரியனைச் சுற்றி வரும்போது சந்திரனும் சூரியனைச் சுற்றி வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவை ஒவ்வொன்றும் தத்தமக்கென்றுள்ளச் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. இச்சுழற்சியின்
பௌதீக நிகழ்வாக இராசி மண்டலத்தில் சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்
போது ஒரு கோளின் நிழல் மற்றொரு கோளின் மேல் படுவதனால் கோள்கள் மறைக்கப்படுகின்றன.
பூமியிலிருந்து நோக்கும்போது ஒளிமறைவு ஏற்படுகின்றது.
இந்த ஒளிமறைவு அதிகமாவதும் குறைவதுமான நிகழ்வே கிரகணங்களாகும். இந்நிகழ்வுகள் பாம்பு
கோள்களைப் பிடிப்பதாகவும் பிடித்த்தை விடுவிப்பதாகவும் தற்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.
இந்தக் கிரகணஙகள் குறித்து சங்கப் புலவர்கள் தெளிவான அறிவைப் பெற்றுள்ளனர் என்பது அவர்தம்
பாடல்களால் அறியமுடிகிறது.
சூரிய கிரகணம்
இராசி மண்டலத்தின் சூரியன், பூமி, சந்திரன்
ஆகிய மூன்றும் ஓரே நேர்க்கோட்டில் வரும்பொழுது அதாவது சூரியன் சந்திரனுக்கு இடையே ஓரே
நேர்க்கோட்டில் பூமி சஞ்சரிக்கும்போது, சூரியனுக்கும் பூமிக்கிடையே சந்திரன் வரும்பொழுது
சூரிய ஒளி சந்திரனால் மறைக்கப்பட்டு பூமியிலுள்ளவர்களுக்குச் சூரியன் புலப்படுவதில்லை. அதனால் பூமியில் உள்ளவர்களுக்குப் பகலிலேயே இருள்
சூழ்ந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இந்நிகழ்வே சூரியகிரகணம் எனப்படுகின்றது. இந்த சோதிடக்
கூறினைக் குறித்துச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.
சந்திர கிரகணம்
இராசி மண்டலத்தில் சூரியன், பூமி, சந்திரன்
ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது அதாவது சூரியன் சந்திரனுக்கு இடையே ஒரே
நேர்க்கோட்டில் பூமிச் சஞ்சரிக்கும்போது சூரியனுடைய ஒளி பூமியினால் மறைக்கப்பட்டு சந்திரனுக்கு
சூரிய ஒளி கிடைக்காத நிலை ஏற்படுகின்றது. இந்நிகழ்வுச் சிறிது சிறிதாகக் காலளவில் அஃதாவது
நாழிகை கடிகை முறையில் நடைபெறுகின்றது. எந்தப் பொருள் மேல் ஒளிப்படுகின்றதோ அந்தப்
பொருள்கள் பூமியிலுள்ளவர்கள் கண்களுக்குப் புலப்படும்.
ஒளிப்படாதப் பகுதி நம் கண்களுக்குப் புலப்படாது.
இஃது பௌதீக உண்மை. இதன்படி சந்திரனுக்குச் சூரியஒளி முற்றிலும் மறைக்கப்படும் போது
பூமியிலுள்ளவர்கள் விழிகளுக்குச் சந்திரனும் தெரிவதில்லை. இதுவே சந்திர கிரகணம் எனப்படும்.
நற்றிணை குறிஞ்சித்திணைப் பாடலில் நற்சேத்தனார்
என்ற புலவர் சந்திரகிரகணம் குறித்தச் சோதிடக்கூறினை,
”பகல்எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி சுரப்பவும்”
இப்பாடலில்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி சுரப்பவும் என்றும், மேலும் குறுந்தொகை பாலைத்திணைப்
பாடலில்,
”அரவு நுங்கு மதியினுக்கு இவணோர்
போல
களையார் ஆயினும்”
என்ற சொற்றொடரில்
சந்திர கிரகணம் பற்றிக் கூறியுள்ளமை கருதத்தக்கதாகும்.
Comments
Post a Comment