தேவலோக மூலிகை வெற்றிலை
வெற்றிலை ஒரு மங்களகரமான தெய்வீக மூலிகை.
கோயில்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்படும், சுப நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் புனிதக்
கலசங்களில் கூட மாவிலையும் வெற்றிலையும் மங்கலப் பொருட்களாக வீற்றிருக்கும். திருமணம்
போன்ற புனிதக் காரியங்களில் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.
முதன் முதலாய் நம் வீடுகளுக்கு வரும் விருந்தினரை
நன்கு உபசரித்து, விருந்தளித்து, கடைசியில் வெற்றிலையுடன் தாம்பூலம் தந்து, பிரியாவிடை
கொடுத்தனுப்பவது நமது பழக்கம்.
மங்களகரத்தின் மறுசொல் வெற்றிலை என்றே சொல்லலாம்.
வெற்றிலையை தாம்பூலமாக உபயோகிக்கும்போது, அதனுடன் பார்க்கும் சுண்ணாம்பும் சேரும்.
தாம்பூலம் போடும்போது வெற்றிலையின் காம்பு, நுனி, வெற்றிலையின் நடு நரம்பு ஆகியவற்றை
நீக்கியே உபயோகிக்க வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை
மெல்லும்போது வாயில் முதலில் ஊறும் நீர் நஞ்சு. எனவே அதை உமிழ்ந்து விடவேண்டும். இரண்டாவது
நீர் மனதை பேதலிக்க செய்யும். எனவே அதையும் உமிழ்ந்துவிட வேண்டும். மூன்றாவது நீர்
அமிர்தம். நான்காவது நீர் அதிக இனிப்பு. ஐந்தாவது, ஆறாவது நீர் உடம்புக்கு மிக்க கேடு
உண்டாகும். அதாவது பித்தம், மந்தம், பெருவயிறு போன்ற நோய்கள் உண்டாகும்.
தாம்பூலம் தரிப்பதில் சில உடல் சார்ந்த நெறிமுறைகளையும்
நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். காலையில் பாக்கை அதிகமாகச் சேர்த்து தாம்பூலம் போட்டால்
மலம் தாராளமாய் போகும். பகலில் சுண்ணாம்பு அதிகப்படுத்தினால் நல்ல பசியை உண்டாக்கும்.
மாலையில் வெற்றிலையை அதிகப்படுத்தினால் வாய் மணம் கமழும்.
மருத்துவம் என்பது ஆன்மீகத்தின் ஒரு பகுதியே
என்பதை வெற்றிலை வழி அறியலாம்.
மருத்துவ பலன்கள்
·
வெற்றிலை, திருநீற்றுப்
பச்சிலை ஆகிய இரண்டையும் சிறிது உப்புக்கல் வைத்துக் காய்ச்சினால் சாறு வரும். இதில்
சில துளிகள் மூக்கில் உறிஞ்ச, தலைபாரம், தலைவலி உடனே தீரும்.
·
இளம் வெற்றிலையை
மூன்று கல் உப்பு வைத்து மடித்து, நன்கு மென்று விழுங்கி, ஒரு டம்ளர் வெந்நீரில் மூன்று
சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அருந்தினால் வயிற்று வலி பரக்கும்.
·
சமீபத்திய ஆய்வுகளில்
வெற்றிலைக்குப் புற்று நோயைத் தடுக்கும் தன்மை உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். புற்றுநோய்
செல்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிலைக்கு நிகர் எதுவுமில்லை எனலாம்.
Comments
Post a Comment