விரதம்
அமாவாசை விரதம், கார்த்திகை விரதம், சனிக்கிழமை விரதம் என்று
சில விரதம் என்று சில விரதங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். மதக்கோட்பாட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு
காரணத்திற்காக உண்ணாவிரம் இருக்கின்றனர்.
‘விரதம்’
என்ற சொல்லுக்கு உறுதியாக இருத்தல், ‘உண்ணாவிரதம்’ என்றால் உண்ணாமையில் உறுதியாய் இருத்தல்
என்று பொருள்.
விரத காலங்களில்
ஒரு வேளை மட்டுமே உண்பர். இரு வேளை உண்ணாதிருப்பர். வாரம் ஒருமுறையேனும், மாதம் ஒருமுறையேனும்
ஒரு வேளை உணவை உண்ணாதிருந்தால் அது உடலுக்கு நல்லது. இதை உணர்ந்தவர்கள் அதைக் கடைப்பிடிக்கவேண்டும்
என்பதற்காக அமாவாசை, கார்த்திகை என்ற நாட்களோடு சேர்த்து வைத்தனர்.
அந்த நாட்களில்
விரதம் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு வேளை நம் வசதிப்படி உண்ணாமல்
இருக்கலாம்.
குறிப்பாக
செரிமானம் சரியாக இல்லாதபோது ஒருவேளை தண்ணீரைத் தவிர வேறு எதையும் உண்ணாமல் இருப்பது
நல்லது. விரத வேளையில் காலை வேளையில் உண்ணாமல்
இருப்பது உகந்ததன்று. இரவு முழுக்க பட்டினியாக
இருக்கும் வயிற்றை காலையிலும் வெறுமையாக வைத்திருத்தல் சரியன்று. இரவு உணவு சரியாகச்
செரிக்காதபோது மட்டும் காலையில் உண்ணாமல் இருக்கலாம். அப்போதும் நீர் வேண்டுமளவு பருகவேண்டும்.
Comments
Post a Comment