இலக்கியங்களில் - பசலை
நோய்
தலைவனைப் பிரிந்ததும் தலைவியிடம் தோன்றும் மெய்யின் நிறைவேறுபாடாகிய பசலை உள்ளத்தின்
துன்பம் உடலளவில் நிலைமாற்றப் பெறுவதற்கான சான்றாகும். ‘உள்ளம் நோயுற்ற காலத்தில் மேனியில்
ஏற்படும் மாறுபாடுகளில் தலையாயதாகத் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது நிற மாற்றத்தையே’
எனக் கூறுவது சரியான மதிப்பீடாகும்.
”உள்ளுதோறு உள்ளுதோறு உருகிப்
பைஇப் பையப் பசந்தனை பசப்பே”
என்ற பாடலில்
தோழிக் கூற்றில் உள்ளத்தின் நினைவால் உடலில் பரவும் பசலை கூறப்படுகிறது.
”பழங்கண் கொண்டு நனிபசந் தனள்”
என்னும் தொடரில்
பசலையின் காரணமாகிய துன்பமும் துன்பத்தின் விளைவாகிய பசலையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
கண்களிலும் நெற்றியிலும் பசலை படர்தலைப் பற்றி குறிப்புகள் பல உள்ளன. குறுந்தொகை பாடல்
ஒன்றில்,
” மாசுஅறக் கழிஇய யானை போலப்
பெரும்பெயல்
உழந்த இரும்பிணர்ந் துறுதல்
பைதல்
ஒருகலை சேக்கும் நாடன்
பசலை
ஆர்ந்தநம் குவளை அம் கண்ணே”
இப்பாடலில்
கண்களிலும் நெற்றியிலும் பசலை படர்வதும் மேனி முழுவதும் பசலை படர்வதும் சங்க இலக்கியப்
பாடல்களில் குறிப்பிடத்தக்கனவாகும். கண்களிலும் நெற்றியிலும் தோன்றும் பசலையைப் போலவே
மேனி முழுவதும் தோன்றும் பசலை பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.
தலைவி தலைவனோடு சேர்ந்திருக்கும்போது விலகி
நிற்கும் பசலை தலைவனை விட்டு நீங்கியிருக்கும் போது உடனே வந்து பற்றுகிறது. தலைவன்
தலைவியைத்,
”தொடுவழி தொடுவழி நீங்கி
விடுவழி
விடுவழி பரத்தலானே”
என்னும் பரணர்
பாடலில் பாசியைப் பசலைக்கு உவமை கூறுகிறாள். இதனை உளவியலார் உள்ளத்தின் துயரத்தால்
உடலில் உருவாகி உள்ளத்தின் துயரம் தொலையும்போது இல்லாமல் போகும் பசலை நிலைமாற்றம் என்னும்
உளவியல் கருத்துக்கு உரிய சான்றாகிறது.
Comments
Post a Comment