Skip to main content

சமுதாயம் மறுமலர்ச்சி அடைய..

 

சமுதாயம் மறுமலர்ச்சி அடைய..

 

          ஒரு சமுதாயம் செப்பனிடப்படாமல் பொருளாதார மாற்றம் ஏற்பட்டாலும், அரசியலிலே பெறுகின்ற வெற்றிகள் கிடைத்தாலும் நிலைத்து நிற்க முடியாது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்னாலும் அதனை உன்றன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்க்க வேண்டும்.

          அக்காலத்தில் பெரியவர்கள் நல்ல எண்ணத்தில் செய்த சில காரியங்கள் பின்னால் வந்தவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் அவைகள் தீயனவாக முடிந்ததற்கு நாம் செய்த செயல்களே மிக முக்கிய தெளிவான சான்றுகளாகும்.

மூடநம்பிக்கைகளும் பகுத்தறிவும்

          நம் முன்னோர்கள் சிலவற்றை மதத்தில் பெயரால், கடவுளின் பெயரால், சாத்திர சம்பிரதாயங்களின் பெயரால் சொன்னால் மக்கள் கட்டுப்படுவார்கள் என்று ஒரு முறையை அந்த காலத்தில் கையாண்டார்கள். உதாரணமாக, அம்மை நோய், காலரா நோய் இந்த நோய் ஓர் ஊரை தாக்கினால், தாக்குவதற்கு முன்பே தடுப்பு முறைகள் இன்றைய காலத்தில் வளர்ந்துள்ளன. ஒரு வேளை தடுப்புகளையும் தாண்டித் தாக்கி விட்டால் அவர்களில் சிலர் போக, பலரைக் காப்பாற்றக் கூடிய மருத்துவத்துறை இன்றைய காலக்கட்டத்தில் பெரு வளர்ச்சி அடைந்துள்ளது.

          ஆனால் பழங்காலத்தில் மேற்கூறிய வியாதிகள் வந்தால் ஊரிலே பெரியவர்கள் ஒன்று கூடி மாரியம்மனுக்கு அல்லது காளியம்மனுக்குக் காப்புக் கட்டி அந்தக் காப்பு மறுபடியும் கழற்றும் வரை இந்த ஊர்க்காரர் வெளியூர் செல்லக் கூடாதென்றும், வெளியூர்காரர் இந்த  ஊருக்கு வரக்கூடாது என்றும் கூறி ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்கு இந்த நோய்கள் பரவாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.

          இந்த முறை கிராமங்களில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நம்முடைய பெரியவர்கள் முன்னோர்கள் கடைபிடித்தமுறையாகும். அக்காலத்தில் பெரியவர்கள் நல்ல எண்ணத்தில் கடைபிடித்த முறை, இக்காலத்தில் புரிந்து கொள்ளாமல் அவை தீயனவாக முடிந்ததற்குக் காரணமாக அமைந்துள்ளது

          ஆயிரக்கணக்கான புராணங்கள் நம்முடைய தமிழகத்தில் இளைஞர்களையும், முதியவர்களையும் கெடுத்து அதன் காரணமாக ஆயரக்கணக்கான தெய்வங்கள், அவற்றுக்கு வழிபாடுகள், கோயில்கள் என்றெல்லாம் நம்ப வைத்துவிட்டார்கள்.

          உண்மையின் பேர் தெய்வமென்போம் மற்றும் ஓதிடும் தெய்வங்கள் பொய்யேன் கரைப்போம் என்றார் பாரதி.

          சாக்ரடீஸ் தன்னுடைய கொள்கைகளைச் சொன்னதற்காக நச்சுக் கோப்பை தந்த போது, அந்த விசத்தை வாங்கி அருந்துவற்குத் தயாராக இருந்தாரே அல்லாமல் தம்முடைய கொள்கையை விடுவதாக இல்லை.

          ராகுகாலம், குளிகைகாலம், எமகண்டம் இவையெல்லாம் பஞ்சாங்கத்திலே இடம் பெற்றிருப்பவை. அந்தக் கால வானசாஸ்திரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் அசைவு, இயக்கம் இவைகளுக்குக் கிடைத்த அந்தப் பெருமையைப் பஞ்சாங்கம் என்ற பெயரால் பாமர மக்களை, ஏழை, எளிய மக்களை, சில எத்தர்கள் ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு தான் தவிர வேறல்ல.

          ”புதியதோர் உலகம் செய்வோம்

         கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்”

இளைய சமுதாயமே விழித்தெடு, சிந்தனையைப் பெருக்கு, உழைப்பை நம்பு, வாழ்க்கையில் மூடப்பழக்க வழக்கங்களை விட்டொழி, அறிவுக்கு வேலை கொடு. அப்போதுதான் நீயும், உன்வீடும், நாடும் உயரும், வளம்பெறும்.

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...