பழந்தமிழர்களின்
ஆடை அணிகலன்கள்
ஆடைகள்
பழந்தமிழர்களின் ஆடைகள் அனைத்தும், அனைத்துத் தரப்பனரையும் கவரும் வண்ணம் நெய்யப்பட்டன.
ஆடைகள் மிக நாகரிகமாகவும், அவைகள் கோசிகம், பாடகம், பீதகம், அரத்தம், பச்சலை சுண்ணம்,
வடகம், சித்திரக்கம்பி, கவற்றும்படி, தேவாங்கு, குஞ்சரி, தேவகிரி, கத்தூலம் கரியல்,
பேடகம், புங்கர்க்காழகம், தூரியம், சில்லி கை, இறஞ்சி, வெண்பொத்தி, செம் பொத்தி, எனப்
பலவகைகள் இருந்தன.
பருத்தி ஆடைகளுக்கு நூல், தொடர் இழை,
துவண், அறவை, பன்னாடை, நெய்யுரி, மரவுரி, துகில், ஆசிடை, இடைதல், கலிங்கம், உடுக்கை,ஏடகம்,
கத்தியம், காழகம், சீரை, படாம், பட்டம் சூடி எனப் பல பெயர்களிருந்தன.
அணிகலன்கள்
·
பெண்கள் தலைக்குச்
சீதேவி, வலம்புரிச் சங்கு, தென்பல்லி, வடபல்லி, பொன்னமாலை, புல்லகம் முஞ்சகம் போன்றவற்றைச்
சூடிக் கொண்டனர்.
·
செவிக்கு மகரக்
குழை, தாளுருவி, நிலக்குதம்பி தோடு, வல்லிகைப் போன்றவற்றை அணிந்திருந்தனர்.
·
கழுத்துக்கு
நேர் சங்கிலி, நிறை சங்கிலி, வங்கி, மகரப் பீலி, நுழைவினை, முத்துக்களால் ஆன பொன்னாரம்
முதலியவற்றை அணிந்திருந்தனர்.
·
கைக்குப் பொன்வளை,
முத்துவளை, சங்குவளை, இரத்தினவளை, மரகத மணிவளை, எனப் பல்வேறு வகையான வளையல்களை
அணிந்து மகிழ்ந்தனர்.
·
கைவிரல்களில்
முத்து மோதிரம், நாகவாய் மோதிரம், வாளைப் பகுவாய், பொன்னாலான வைர மோதிரம், இரத்தினக்
கணையாழி போன்றவற்றை அணிந்தனர்.
·
கால் அணிகளாக
சிலம்பு, பாதக்கலம், தண்டையணி, கிண்கிணி, குறங்குச்செறி, மணித்துவளை, போன்றவை.
இவ்வாறு அக்கால
ஆடவரும், மகளிரும் தம்மை ஒப்பனை செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர் இலக்கியங்கள் வழி உணரலாம்.
Comments
Post a Comment