அலைகள்
கடலில் அலைகள் (waves) எழுவதற்கு அடிப்படைக்
காரணமாக அமைவது காற்று. காற்றிலிருந்து சக்தி
நீருக்கு மாற்றப்படுவதால் கடல் அலைகள் தோன்றுகின்றன என்பர். கடல் அலைகளைத் ‘திரை’
என்னும் பெயரால் சங்கப் புலவர்கள் வழங்கி உள்ளனர்.
அலை தோன்றுவதற்கான காரணத்தைச் சங்கப் புலவர்கள்
வெளிப்படையாக எடுத்துரைக்கவில்லை. என்றாலும், காற்றுக்கும் அலைக்கும் தொடர்பு இருப்பதைச்
சுட்டிக்காட்டி,
”மாகா லெடுத்த முந்நீர்” (மது.361)
எனவரும் தொடர்
அலையின் தோற்றத்திற்கான காரணத்தைக் குறிப்பிடுகின்றது எனக் கொள்ளலாம்.
அலை வகைகள்
சங்கப் புலவர்கள் அவர்கள் காட்டும் படப்பிடிப்புகளை
இன்றைய ஆழ்கடல் சிந்தனையாளர்களின் கடல் மட்ட அலை அளவொடு (Sea Disturbance Scale) ஒப்பிட்டுக்
காணலாம். ஆனால் ஒரு வேறுபாடு பண்டைத் தமிழர் அலை வகைகளாகக் கண்டதை உரைத்தனரே தவிர,
கணக்கிட்டு உரைக்கவில்லை. அவர்கள் குறிப்பிடும் அலைநிலை வகைகளாக,
1. ”தயங்குதிரைப் பெருங்கடல்” (நற்.18:7)
”திரை தபு கடல்” (அகம்.263:7)
”தெண்கடல் திரை” (மது.450)
2. ”ஓங்குதிரை வியன்பரப்பு
ஓங்குநிலை ஒட்டகம் துயில்மடிந் தன்ன” (மது.1)
”வீங்குதிரை” (சிறுபா.154-155)
3. ”உரைதிரை” (நற்.159:10)
”ஒல்லெனத்
திரை
பிறழிய இரும்பௌவம்” (பொருந.177-178)
4. ”வெண்திரைப் பரப்பு”
(பெரும்.457)
5. ”பொங்குதிரை”
(நற். 35:1)
6. ”நுரைப்பிதிர்ப் படுதிரை” (அகம். 270:5)
”வயங்குபிசிர்
மல்திரை” (அகம்: 250:1-2)
அலைகளின் செயல்கள்
கடற்கரையில் தோன்றும் மணற்குவியலை (Sand spit) எக்கர், சேர்ப்பு எனச் சங்கப்புலவர்
வழங்குவர். இம்மணற் குவியல்கள் உருவாவதற்கு அடிப்படையான காரணங்களுள் ஒன்று கடலலை என்பர்.
இச் சிந்தனை பண்டைத் தமிழர்களிடமும் தெளிவாகக் காணப்படுகிறது. இதற்கு,
”எறிதிரை தொகுத்த எக்கர்” (நற்.211:6)
”கரைபொரு திரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு
மணல்” (மது.234-235)
எனவரும் சங்க
இலக்கியத் தொடர்களே அரிய சான்றுகளாகும்.
நில அரிப்புக்கும் (Erosion) கடலலைகள் காரணமாக
அமைகின்றன என்பதையும் சங்கப் புலவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Comments
Post a Comment