Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்!

 

மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்!

22.02.2026 ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை ஈரோடு அருகில் அந்தியூரில் என் தோழி தேவியின்  (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்) மகளுக்கு ஆரா மஹாலில் திருமணம் நடைபெற்றது. நானும் என் தோழி நா. பிரியா (திருச்சி, தந்தைப் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்) அவர்களும், அவர்களின் கணவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பினோம். காலை 8 மணிக்குத் திருமணம் நடைபெறும் அந்தியூருக்குச் சென்றோம். திருமணம் முடிந்தவுடன் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மேட்டூர் அணைக்குச் சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பல ஊர்களை விழுங்கிய அணை






சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின் எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைதான் மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம். காவிரிபுரம் என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக்கும் ஊர்களிலேயே பெரிய ஊராகும். இது தவிர கோவிந்தபாடி, நாயம்பாடி, நவப்பட்டி, சாம்பள்ளி, சோளப்பாடி போன்ற அறுபதுக்கும் அதிகமான சிற்றூர்களும் இந்த அணைக்குள் மூழ்கியுள்ளன.

திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பகுதிகளில் இருந்த நிலங்கள், வளங்கள், அங்கே வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, பயன்படுத்தப்படும் மொழிகள் பற்றியதொரு ஆய்வுக்காக 1801இல் இப்பகுதிக்கு நடைப்பயணமாக வந்து டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் (Dr.Buchanan Francis Hamilton) என்பவர், காவிரிபுரத்தில் 6500 பேர் வாழ்ந்ததாகத் தனது பயண விவரங்களைக் கொண்ட (A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மைசூர் நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையில் முக்கியமான வணிக நகராக காவிரிபுரம் இருந்ததாகவும், காவிரி ஆற்றின் வலது கரையில் சோழப்பாடி என்ற ஒரு ஊர் இருந்ததாகவும், இந்த ஊரில், ஆங்கில அரசின் கோட்டையும், ராணுவமும், அந்தப் பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்யும் வணிகச் சந்தையும் புகழ்பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.




 


                     


மேட்டூர் அணை

          காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி  1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.

·         மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

·         மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

·         மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக அணையின் நீர்பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28-05-2017 அன்று துவக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

·         ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா, குழந்தைகள் விளையாட்டு மைதானம், ஒரு மினி மிருகக்காட்சிசாலை மற்றும் நினைவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை விற்கும் பல சிறிய கடைகள் உட்பட பல பொழுதுபோக்குகளை வழங்குகிறது.
     விருந்தினர்கள் மேட்டூர் அணைக்கு அருகிலுள்ள சேலம், ஹோக்னகல் நீர்வீழ்ச்சி, கோலி மலைகள் மற்றும் நாமக்கல் போன்ற அருகிலுள்ள இடங்களை ஆராயலாம்.


  

                                     

நிறைவாக,

            பூங்கா, மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் போன்றவற்றை பார்த்துவிட்டு, அங்கு சிறு கடைகளில் மீன் மற்றும் உணவு சாப்பிட அழைத்தார்கள். மதிய உணவை மீனுடன் சேர்த்து உணவைச் சாப்பிட்டோம். மீன் குழம்பு, மீன் ஃபிரை, ரசம், சாதம் இவை 120 ரூபாய் தான். சூடாகவும்,  திருப்தியாகவும் சாப்பிட்டோம். பிறகு நாங்கள் கிளம்பி திருச்சிக்கு வந்து சேர்ந்தோம். இன்றைய நாள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...