Skip to main content

நள்ளி

 

நள்ளி



          அக்காலத்தில் மதுரைக்குத் தெற்கே கண்டீர நாடு என்றொரு பகுதி இருந்தது. அப்பகுதி தோட்டி மலையைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இந்தத் தோட்டி மலைவாழ் இனத்தினரின் தலைவனாக விளங்கினான் நள்ளி எனும் வெள்ளம்போல் புகழ் கொண்ட வள்ளல்.

          அவன் அருங்குணங்முடையவன். இரவலர்களின் இன்னல் களையெல்லாம் தீர்க்கும் அருளாளன். ‘கண்டீரக்கோ’ என்றும் ‘கண்டீரக்கோ பெருநள்ளி’  என்றும் புலவர்களால் பாராட்டப்பட்டவன். வன்பரணருக்குப் பிற்காலத்துப் புலவரான பெருஞ்சித்திரனால்,

          ”....... ....    .........  ............ஆர்வமுற்

           உள்ளி வருநர் உலைவு நனிதீரத்

           தள்ளா தீயும் தகைசால் வண்மைக்

           கொள்ளா ரோட்டிய நள்ளி’     (புறம்-158)

என்று சிறப்பித்துக் கூறப்பட்டவன்.

          ஒரு சமயம் வன்பரணர் எனும் பெரும் புலவர் நள்ளியைக் கண்டு பாடிப் பரிசில் பெறும் பொருட்டுதன் சுற்றத்தாரோடு வந்து கொண்டிருந்தார். வறுமையின் சிறுமையால் வாட்டமுற்றுக் களைத்த அவர்கள் மேலும் நடக்க மாட்டாதவர்களாய் ஒரு பலாமரத்தடியில்          தங்கினர். சிலர் படுத்தனர். சிலர் உறங்கியே போனார்கள். களைப்பு அவர்களை அவ்வளவு சோர்வுறச் செய்தது.

  உச்சிவேளை கடந்துவிட்ட நேரம். அப்பொழுது மான் வேட்டையாடியதால் குருதி படிந்து சிவந்துப் போன கழலணிந்த காலும் செம்மணிகள் ஒளிவீசும் சிறுமுடியணிந்த சென்னியுமாக ஒரு செல்வப் பொலிவான வேட்டுவன் அந்தப் பலாமரத்தடியை அடைந்தான். அவனது ஏற்றம் கொள் தோற்றம், வீறு கொள் நடை, அங்கிருந்த வறியவர்களைப் பரபரக்கச் செய்தது.

         அந்தப் பரபரப்பில் அவர்களைப் பசிபடுத்தும் பாட்டினை நன்கு உணர்ந்தான் வேடன். அவன் மனம் பொறுக்கவில்லை. உடனே காட்டில் விரைந்தான். வேட்டையாடி மானைக் கொண்டு வந்தான். நெருப்பை மூட்டினான். அதில் மானிறைச்சியைப் பதமுற வாட்டினான். பசித்துப் படுத்திருந்தவர்களை எழுப்பி, புசித்துப் பசியாறுங்கள் என்று கொடுத்தான்.

      அந்தக் கூட்டத்தினர் ஆவலாய் உண்டு அருகிலிருந்த அருவி நீரை அருந்தினர். பசி பறந்ததும் ஆமாம், இவ்வளவு அன்புடன் செயல்பட்டானே, இந்த வேடுவன்தான் யாரோ? என்று கேள்வி இலேசாக அவர்கள் நெஞ்சில் துளைத்தது.

          ”ஐயா, நீங்கள் யாரோ? நம்முடைய நாடு எதுவோ?” என்று கேட்டனர்.

                   ஆனால் அந்த வேடனோ,

        ”அன்புடைப் பெரியீர்! உங்களைப் பார்த்தால் மெத்தப் படித்தவர்கள்போல் தோன்றுகிறது. யானோ காட்டு நாட்டவன். உங்களை நான் முன்பின் அறியேன். உங்களில் மதிப்பறிந்து கொடுக்க என்னிடம் விலை மதிப்பற்ற ஆபரணங்கள் இல்லை. ஆயினும் நான் தரும் இச்சிறு பரிசிலை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி தன் மார்பணியாகிய முத்தாரத்தையும், கையணியாகிய பொற்கடகத்தையும் கழற்றி நீட்டினான்.

          அவற்றைப் பெற்றுக் கொண்ட வன்பரணர் மீண்டும் ‘ஐயா! நின் நாடு எதுவோ? நீவர் யாவரோ? என்றார்.

  ”என் பெயரையோ, நாட்டையோ தெரிந்து கொண்டு போற்றுமளவுக்கு நான் பெரிதாக எதையும் செய்து விடவில்லை. மனிதனுக்கு மனிதன் என்ற முறையில் முடிந்த சிறு உதவியைத் தான் செய்தேன்?” என்ற வேட்டுவன் மேலும் தாமதியாது விடைபெற்றுச் சென்றுவிட்டான்.

        வன்பரணரும் உடனிருந்த கூட்டத்தினரும் பெரிதும் வியந்தனர். பெயரையும் நாட்டையும் பிறர் அறியச் செய்யாமல் சென்றுவிட்ட அந்த வீரவேடன் தான் யார்? என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தை வெள்ளமாக அலைக்கழித்தது. எனவே வழியிடைப்பட்டவர்களை வினவினர். தாங்கள் நேரில் காண செல்லும் தோட்டிமலைத் தலைவனான நள்ளியே அவன் என்றறிந்ததும் அவர்கள் நெஞ்சில் வியப்பு மிஞ்சியது. மதிப்பு உயர்ந்தது.

          ‘கண்டீர நாட்டுக் கோமகனா வலிய வந்து உதவியது! தேடிச் செல்லும் தோட்டிமலைத் தலைவனா நாடிவந்து நல்லுணவு தந்தது!’ என்ன கொடைத்திறம்! பிறர் அறியாதவாறு செய்து சென்றுவிட்ட அவ்வள்ளலை நேரில் கண்டு வாழ்ந்த வேண்டாமா? பாடிப் பாராட்ட வேண்டாமா? வாருங்கள் அவன் அரண்மனை செல்வோம்’ என்று நடந்தார் வன்பரணர்.

    தன் அரண்மனையை அடைந்த புலவரையும் அவர் தம் கூட்டத்தையும் இன்முகத்துடன் வரவேற்றான் நள்ளி. அது மட்டுமா? அன்புள்ளத்துடன் பொன்னும் பொருளும் கொடுத்து அனைத்து விதத்திலும் உபசரித்தான்.

          வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் கொடுக்க வேண்டும் எனும் நிலையிலிருந்த நள்ளியின் அக்கொடைத் திறம்! பிறர் அறியாதவாறு  செய்து சென்றுவிட்ட அவ்வள்ளலை நேரில் கண்டு வாழ்த்த வேண்டாமா? பாடிப் பாராட்ட வேண்டாமா? வாருங்கள் அவன் அரண்மனை செல்வோம்’ என்று நடந்தார் வன்பரணர்.

          தன் அரண்மனையை அடைந்த புலவரையும் அவர் தம் கூட்டத்தையும் இன்முகத்துடன் வரவேற்றான் நள்ளி. அது மட்டுமா? அன்புள்ளத்துடன் பொன்னும் பொருளும் கொடுத்து அனைத்து விதத்திலும் உபசரித்தான்.

          வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் கொடுக்க வேண்டும் எனும் நிலையிலிருந்த நள்ளியின் அக்கொடைத் திறம் அப்புலவரின் நெஞ்சை நெகிழச் செய்தது என்பதனை,

          ”கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன

         பாரிய சிதாயேன் பலவுமுதல் பொருந்தித்

         தன்னும் உள்ளேன்; பிறிதுபுலம் படர்ந்தென்

         உயங்குபடர் வருத்தமும் உலையும் நோக்கி

           மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்

         வான்கதிர்த் திருமுணி விளங்கும் சென்னிச்

         செல்வத் தோன்றல் ஓர்வல்வில் வேட்டுவன்

         தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ

         இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை

         கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,

         தாம்வந்து எய்தா அளவை ஒய்யெனத்

         தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின்

         இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்,

         அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி

         நல்மான் நளிய நறுந்தண் சாரல்

         கல்மிசை அருவி தண்ணெனப் பருகி

         விடுத்தல் தொடங்கினேன் ஆக,வல்லே,

         ”பொறத்தற் கரிய வீறுசால் நன்கலம்

         பிறிதொன்று இல்லை, காட்டுநாட்டேம்” என

         மார்பில் பூண்ட வயங்குடி ஆரம்

         மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்,

         எந்நாடோ? என நாடும் சொல்லான்,

         யாரீரோ? என பேரும் சொல்லான்,

         பிறர் பிறர் கூறவழிக்கேட் டிசினே,

         இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி

         அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்

         பளிங்கு வகுத்தன்ன தீநீர்

         நளிமலை நாடன் நள்ளி அவன் எனவே! (புறம் -150)

எனும் அவரது புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.

          மேலும் அவரது தமிழ் நெஞ்சம் அத்துடன் திருப்தியுறாததாய் – உயர்மலைக் கோமானான நள்ளியே!” நீ, நின் நகரின் கண் வரும் பரிசிலர்க்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருத்தலால் எம் நாவானது பெருமையற்ற மன்னர்பால் சென்று புகழ்ச்சி வேண்டி அவர்கள் செய்யாதன வற்றையெல்லாம் புகழாதாயிற்று’ எனப் பாராட்டியதோடு,

          ”நள்ளி வாழியொ நள்ளி! நள்ளென்

         மாலை மருதம் பண்ணிக் காலைக்

         கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி

         வரவுஎமர் மறந்தனர்; அதுநீ

        புரவுக் கடன்பூண்ட வண்மை யானே!” (புறம் – 149)

          ‘நள் எனும் மாலை வேளையிலே மருதப்பண் வாசித்தலையும் காலை வேளையிலே செவ்வழிப் பண் இசைத்தலையும் எம் பாணர் மறந்தனர். அவர்களை அப்படி மறக்கச் செய்தவன் நீயே! கொடுத்தக் காத்தலைக் கடமையாகக் கொண்டு அவர்களுக்குப் பெருநிதி வழங்கிய நின் கொடைத் திறத்தாலேதான் அவர்கள் பரிசிலுக்கு வேண்டிப்பாடும் வழக்கத்தை அறவே மறந்து இவ்வாறு ஆயினர். நள்ளியே! நீ வாழ்வாயாக!” என்று போற்றியும் வாழ்த்தியது.

      மற்றவர் அறிய விரும்பாத நிலையில் தம்பால் உற்றவர்களுக்குப் பற்றுடன் பரிசிலை வழங்கி வாழ்வித்த நள்ளியின் புகழ் நற்றமிழ் உள்ள அளவும் நானிலத்தில் பொலிவுற்று விளங்கும்.

          ”ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது

            ஊதியலம் இல்லை உயிர்க்கு”  

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...