சிற்பக்கலை
உருவ வகைகள்
சிற்பக்கலை உருவங்களை நான்கு பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கலாம்.
·
தெய்வத் திருவுருவங்கள்
·
இயற்கை உருவங்கள்
·
கற்பனை உருவங்கள்
·
பிரதிமை உருவங்கள்
தெய்வத் திருவுருங்கள்
தெய்வ உருவங்கள் சைவ சமய உருவங்கள், வைணவ
சமய உருவங்கள் என இருவகைப்படும்.
கங்காதரர், பைரவர், சந்திரசேகரர், நடராசர்,
பார்வதி, கணபதி, முருகன், பிச்சாடனார், அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர் மூர்த்திகள்
சைவ சார்புடையன.
இலக்குமி, திருமால், கண்ணன், இராமர்,
பலராமன், மாதவன், அனந்தசயனன், திரிவிக்கிரமன், நரசிம்ம மூர்த்திகள் வைணவச் சார்புடையன.
இயற்கை உருவங்கள்
மனித உருவங்களில் ஆண், பெண், சிறுவர்,
சிறுமியர், குழந்தைகள், முதியவர் உருவங்களும் ஆடு, மாடு, மான், புலி, சிங்கம்,
குரங்கு முதலியன மிருகங்களும் வாத்து, கோழி, மயில், கருடன், புறா முதலான
பறவைகளும் மரம், செடி, கொடி முதலானவைகளும் இயற்கை உருவங்கள் ஆகும்.
கற்பனை உருவங்கள்
இயற்கையில் காணக் கிடைக்காத கற்பனையாகக்
கற்பிக்கப்பட்ட உருவங்கள் இவை. கற்பனையில் உருவான பலவகைப் பூக்கள், இருதலைப் பறவைகள்,
சரபப்பட்சிகள், கின்னரர்கள், குக்குடச் சர்ப்பம் என்னும் கோழிப்பாம்பு, காமதேனு
முதலானவை கற்பனை உருவங்கள்.
பிரதிமை உருவங்கள்
வாழ்ந்து மறைந்தவர்களின் உண்மைச் சாயல் பொருந்திய
உருவங்கள், அரசன், அரசியர் ஆகியோரின் உருவங்கள். மற்ற சிற்பங்களைவிட இச்சிற்பங்கள்
அமைப்பது கடினமானது. மகாபலிபுரத்தில் நரசிம்மப் போத்தரையன், மகேந்திர போத்தரையன்
என்னும் பல்லவ அரசர்களின் படிமங்கள் அரசியருடன் காணப்படுகின்றன.
மதுரைக்கு அருகில் அனைமலையைச் சேர்ந்த நரசிங்க
மங்கலத்தில் லாடமுனி கோயிலில் ஒரு பாண்டியனின் உருவம் அவன் மனைவியுடன் காணப்படுகின்றது.
Comments
Post a Comment