ஐம்பெருங்
குழுவும் – அமைச்சர் சுற்றமும்
சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இருபெரும் காப்பியங்களின் உரைகளில் இருந்து
மன்னனுக்கு உதவிட ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் இரு அமைப்புகள் இருந்தன என்பதை
அறிய முடிகிறது. இவ்விரு குழுக்களும் அரசனுக்கு அருகிருந்து ஆட்சிக்குச் சிறப்பான வழிமுறைகளை
எடுத்துக்கூறின. ஐம்பெருங்குழுவில்,
1.
அமைச்சர்
2.
புரோகிதர்
3.
சேனாபதியர்
4.
தூதுவர்
5.
சாரணர்
ஆகிய உறுப்பினர்கள்
இருந்தனர்.
இவர்களுள் முதலாவதாகக் குறிப்பிடப்பெறும்
அமைச்சரின் தன்மைகளைத் திருவள்ளுவர் விளக்கிக் கூறுகிறார். அவர்,
”வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன்
மாண்டது அமைச்சு” (குறள்-632)
என்னும் குறளில்
அமைச்சருக்கு அமையவேண்டிய இன்றியமையாப் பண்புகளை எடுத்துரைக்குமிடத்து, ‘கற்றறிதல்’
என்னும் ஒரு தன்மையைக் குறிப்பிடுகிறார். இதற்கு உரைவகுத்த பரிமேலழகர் ”நீதி நூல்களைக்
கற்றுச் செய்வன தவிர்வன அறிதல்” என்று விளக்கமளிக்கிறார்.
இதனால் ஓர் அரசனுடன் இருக்கும் அமைச்சர்
அரசனுக்கு வேண்டும்போது நீதி நூல்களின் கருத்துக்களை எடுத்துக்கூறி அறம் வழங்கிட ஏதுவாயிருந்தார்
என்பது புலப்படுகிறது.
எப்போதும் அரசரைச் சுற்றியோ அல்லது அருகில்
இருந்தோ அரசருக்கு உறுதி பயக்கும் வகையில் நீதி எனக் கண்டவற்றை எடுத்துக்கூறி வந்த
உறுதித் துணையாளர் ‘அமைச்சர் சுற்றம்’ எனப்பட்டனர். அவ்வாறு அரசருக்குத் துணையாக நின்றவர்கள்
கொடுமையில்லாத சுற்றம் என்பதை ‘உரும்பில் சுற்றம்’ என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.
அமைச்சர்கள் அரசருக்கு உற்ற நேரங்களில் அறக்கருத்துக்களை
எடுத்துரைத்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை,
”முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுப
வேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடை
தெரிந்து உணரும் இருள்நீர் காட்சிக்
கொடைக்கடன்
இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பில்
சுற்றமோடு இருந்தோன்”
என்னும் அடிகளில்
விளக்குகின்றது.
அரசனை நாடி வருவோரில் இரு சாரார் உள்ளனர்.
ஒரு சாரார் பிறரால் தங்களுக்கு நேர்ந்த தீமைகளைக் களைந்து முறை செய்யவேண்டும் என்று
நாடி வருவோர் ஆவர். இவ்விரு பிரிவினருக்கும் அவரவர்க்கு வேண்டியதை மன்னன் வழங்கிட அமைச்சர்கள்
அருகிலிருந்து ஆவன செய்வர்.
பார்வை நூல்
1.
இலக்கியங்களில்
சட்ட நெறிகள் –முனைவர் மு.முத்துவேலு, அருள் பதிப்பகம், சென்னை 600 078. ப-48
Comments
Post a Comment