சிபி
சக்ரவர்த்தி
வட இந்திய அரசனும் அந்தண சத்திரியனுமான சிபி,
தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்ட சோழ அரசனாகக் குறிக்கப்படுகிறார். இவர் ஒருநாள்
அரசவையில் அமர்ந்திருந்த போது, பெரிய பருந்து ஒன்றினால் துரத்தப்பட்ட சிறிய புறா ஒன்று
இவர் காலடியில் வந்து விழுந்தது. பருந்து மிகவும் பசியோடு இருந்தபடியால் அப்புறாவைக்
கொன்று தின்ன விரும்பியது. ஆனால் சிபிச் சக்கரவர்த்தி தன் காலடியில் தஞ்சம் அடைந்த
புறாவைக் காக்க உறுதி பூண்டார். எனவே தன் கால் சதைகளை அரிந்து, துலாக்கோலில் நிறுத்தி,
அப்புறாவின் எடைக்கு ஈடான சதைகளை பருந்திடம் அளித்தார். பிற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட,
வீர சோழியர்கள் தாங்கள் சிபியின் வழியில் வந்தவர்கள் என்றே கூறிக் கொண்டனர். மேலும்
பழைய தமிழ் நூல்களும் சிபியின் பெருமைகளைப் பலவாறு பேசுகின்றன.
”தன்னகம்புக்க குறுநடைப் புறவின்
தபுதி
அஞ்சிச் சீரை புக்க
வரையா
ஈகை உரவோன் மருக” –புறநானூறு
”புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில்
இடம்பரிந்த கொற்றவன்” - சிலப்பதிகாரம்
”உடல் கலக்கற வரிந்து தசையிட்டும் ஒருவன்
ஒருதுலைப்
புறவோடொக்க நிறைபுக்க புகழும்” –கலிங்கத்துப்பரணி
”காக்கும் சிறு புறவுக்காகக் களி கூர்ந்து
நூக்கும்
துலைபுக்க தூயோன்” – விக்கிரமசோழன் உலா
”துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச்
சோணாடு”
– பெரியபுராணம்
இவ்வாறு தமிழ் மக்களால் புகழ்ந்து பேசப்பட்ட சிபி மன்னன் சூரிய குலத்தில் பிறந்து
அயோத்தியை ஆண்ட அரசனாவான். இவர் தன் வயது முதிர்ந்த காலத்தில், உலக வாழ்வினை வெறுத்து,
தவம் செய்வதற்காக அழுந்தூரை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார். பிற்காலத்தில் இவர் வழியினர்
அனைவரும் சிபி என்ற பெயரிலேயே தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். இருந்தபோதிலும் சிபி என்னும்
வடஇந்தியப் பெயர் தமிழ்நாட்டினரால் சிறிது சிறிதாக தமிழ்ப்படுத்தப்பட்டது. அதனால் சிபியின்
மகன் சிப்பி என்று அழைக்கப்பட்டார். சிப்பியின் மகன் சிப்பியன் என்று அழைக்கப்பட்டார்.
சிப்பியன் தூய தமிழில் திருத்தங்கல் என்றே அழைக்கப்பட்டார். திருத்தங்கல் என்பது சிப்பியைக்
குறித்த தூயத் தமிழ்ச் சொல்லாகும். கடல் சிப்பிக்குள் முத்து ஆகிய செல்வம் தங்குவதால்
சிப்பி தூய தமிழில் திருத்தங்கல் என்றே அழைக்கப்பட்டது. திருத்தங்கல் என்னும் தமிழ்ச்
சொல்லே வடமொழியில் ‘ஸ்ரீநிவாஸ்’ என்று அழைக்கப்பட்டது.
பார்வை நூல்
1.
தமிழர் வரலாற்றுக்
கதைகள் - ஆதிரை சுகுமாரன் ப- 215
Comments
Post a Comment