கணிகையர்
கலைகள்
பரத்தையர்கள் அறுபத்துநான்கு கலைகளும் கற்றவர்கள். அவர்கள் ஆண்மக்களை மயக்குவதற்காகவே
அக்கலைகளைக் கற்றிருந்தார்கள். அவர்கள் கற்றிருந்த கலைகள் பற்றி மணிமேகலை தெளிவாக தெரிவிக்கின்றது.
மாதவி அறிந்திருந்த கலைகள் இவை இவை என்பதை அவளுடைய நற்றாய் சித்தராபதி கூறுவதாக மணிமேகலை
ஆசிரியர் சொல்லுகின்றார்.
”அரசர்க்கு ஆடும் கூத்து, எல்லோர்க்கும்
பொதுவாக ஆடும் கூத்து என்றும் இருவகைக் கூத்துகளையும் ஆடக் கற்றவள். இசை தாளங்களுக்குரிய
சீர், தாளம், யாழ் வாசிக்கும் முறை, நாடகங்களுக்குரிய பாடலகள் இவைகளையெல்லாம் அறிந்தவள்.
மத்தளம் வாசிப்பாள். புல்லாங் குழல் கற்றவள். நல்ல நீர் விளையாட்டை அறிந்தவள். பாயிலே
பள்ளிக் கொள்ளும் முறையைக் கற்றவள். சமயத்துக்கேற்றபடி நடந்து கொள்ளும் இங்கிதம் தெரிந்தவள்.
உடம்பால் செய்யப்படும் அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்தவள். பிறர் கருத்தை அறிந்து
கொள்ளும் அறிவு படைத்தவள். பிறர் மனத்தைக் கவரும்படி இனிமையான சொற்களைத் தொடுத்துக்
கூறும் சொல்வன்மை வாய்ந்தவள். தன் உள்ளத்தைப் பிறர் காணாமல் மறைத்து ஒழுகும் திறமை
படைத்தவள். எழுதுகோல் பிடித்து சித்திரம் தீட்டத் தெரிந்தவள். மலர்களால் பலவிதமான மாலைகளைத்
தொடுப்பாள். காலத்திற்கேற்றவாறு ஆடவர் நெஞ்சைக் கவரும்படி அலங்கரித்துக் கொள்வாள்.
சோதிடம் அறிவாள். பரத்தையர் அறிய வேண்டிய எல்லாக் கலைகளையும் அறிவாள். நாடக மகளிர்
கற்பதற்கென்றே நன்றாக எழுதப்பட்டது. ஓவியச் செந்நூல் என்பது அதில் கூறப்படும் நுண்பொருள்களையெல்லாம்
கற்றுத் தேர்ந்தவள் மாதவி. அவள் பொன் வளையல்களை அணிந்து அழகாக விளங்குகின்றவள். இத்தகைய
சிறந்த பரத்தையாகிய மாதவி நல்ல தவம் புரிந்தது என் குலத்துக்கே நாணம் தரும் செய்தியாகும்”
இவைகளை,
”வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்துக்
கூத்தும்,
பாட்டும், தூக்கும், துணிவும்
பண்யாழக்
கரணமும், பாடைப் பாடலும்,
தண்ணுமைக்
கருவியும், தாழ்தீம் குழலும்,
கந்துகக்
கருத்தும் மடைநூல் செய்தியும்,
சுந்தரச்
சுண்ணமும், தூநீர் ஆடலும்,
பாயல்
பள்ளியும், பருவத்து ஒழுக்கமும்,
காயக்
கரணமும், கண்ணியது உணர்தலும்,
கட்டுரை
வகையும், கரந்துறை கணக்கும்,
வட்டிகைச்
செய்தியும், மலர் ஆய்ந்து தொடுத்தலும்,
கோலம்
கோடலும், கோவையின் கோப்பும்,
காலக்
கணிதமும் கலைகளின் துணிவும்,
நாடக
மகளிர்க்கு நன்கனம் வகுத்த,
ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்,
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை
நற்றவம் புரிந்தது நாண் உடைத்து. (காதை 2,
வரி 18-33)
இவ்வடிகளின்
வழி மணிமேகலை காப்பிய காலத்தில் பரத்தையர்களின் கலைத் திறத்தை எடுத்துக் காட்டியுள்ளது.
பார்வை நூல்
1. மணிமேகலை காட்டும் வாழ்வு – சாமி. சிதம்பரனார், செண்பகா பதிப்பகம்,சென்னை.
Comments
Post a Comment