Skip to main content

தமிழர் உணவின் மகத்துவம் (மருத்துவம்)

 

தமிழர் உணவின் மகத்துவம் (மருத்துவம்)

        நாம் உட்கொள்ளும் அனைத்தும் உணவும் மருத்துவத் தன்மை கொண்டவை. மேலை நாட்டவர் மருந்தினை உணவோடு சேர்க்க மாட்டார்கள். அது தனி, உணவு தனி என்று பிரித்து வைப்பார்கள். நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கள், கீரைகள், கறிவேப்பிலை போன்றவை இயற்கை தரும் செல்வங்களே. வேம்பு கிருமிகளைக் கொல்லும் என்று அறிந்து நோய் பெற்றவர் வீட்டில் அதைச் சொருகி வைத்தனர். மேலும் பதிற்றுப்பத்தில்,

                   மீன் தேர் கொட்டின் பனிக்கயம் மூழ்கிச்

                   சிரல் பெயர்ந்தன்ன நெதுவாள் ஊசி

                   நெடுவாசி பரந்த வடுவாழ் மார்பின்

                   அம்புசேர் உடம்பினர்”

என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புண்ணை ஊசி கொண்டு தைத்தார்கள். மருந்திட்டார்கள் என அறிய முடிகிறது.

      திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் இவை நோய் தீர்க்கும் மருந்தாகும். ஆசாரக்கோவை நோய் அணுகாமுறை பற்றிக் கூறுகிறது.

   சித்தர்கள் மருத்துவத்தை இலக்கியத்தோடு இணைத்து நகைச் சுவை உணர்வோடு அவர்கள் வழங்கிய பாடல்கள் எத்தனையோ இளைஞர்கள் தடம் மாறித் தாசி வீடு சென்று உடலைக் கெடுத்துக் கொள்வதற்கு,

        ”தாசி வீடு சென்ற தறுதலைக்குச்

        செம்மையாய்த் தருக செருப்படிதான்”

என்று  கூறப்பட்டுள்ளது. செருப்படி என்கிற சொல்லின் பொருள் வேறு, இங்குச் செருப்படி என்பது ஒரு மூலிகையின் பெயர் ஆகும்.

          ”ஆற்று நீர் வாதம் போக்கும்

           அருவி நீர் பித்தம் போக்கும்

          சோற்று நீர் இரண்டும் போக்கும்”

போன்ற மருத்துவப் பழமொழிகள் ஏராளமாய்க் காணலாம். மருத்துவம் ஒரு தொழிலாக மட்டுமின்றி ஒரு தொண்டாகவே நினைத்துச் சிறப்பிக்கப்பட்டது.

          கி.மு.5 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், இந்திய மருத்துவ முறைகளைக் கையாண்டவருமான ‘இப்போசிரட்ஸ்’ என்பவர் மிளகை ‘இந்திய நிவாரணி’ என்று அழைக்கிறார். குளிர்க் காய்ச்சலுக்கும், வெப்பக் காய்ச்சலுக்கும் இது பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து நமக்கு நமது மருத்துவ முறைகளை, கிரேக்கர்களும், ரோமானியர்களும் அறிந்திருந்தனர் எனத் தெரிகிறது. இதற்குக் காரணம் அந்நாளைய வாணிபத் தொடர்பு எனக் கூறலாம்.

ரோம், எகிப்து, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பெருமளவில் வாணிபத் தொடர்பு வைத்திருந்தனர். வாணிகம் பெரும்பாலும் கடல்மார்க்கமாகவே நடைபெற்றது. மரக்கலங்கள் கட்டுவது பற்றியும், கடலில் திசை அறிவது பற்றியும், கடல் வரை படங்கள் பற்றியும் நிறைய அறிந்திருந்தனர். மிளகு, பட்டாடைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் விலங்கினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு ஈடாகப் பண்டங்கள் தர இயலாத காரணத்தால், பண்டங்களின் மதிப்பிற்கு உலோகக் காசுகள் பெறப்பட்டன. இதன் மூலம் உலோகக் காசுகள் பற்றி பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் எனத் தெரிகிறது.

பார்வை நூல்கள்

1.   தமிழும் பிறதுறைகளும் –பதிப்பாசிரியர் முனைவர் ந.கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். ப-79-80

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...