Skip to main content

அகவாழ்வில் குற்றத்திற்குத் தண்டனை

 

அகவாழ்வில் குற்றத்திற்குத் தண்டனை

          அகவாழ்க்கையில் தவறிழைப்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது. தான் காதலித்த பெண்ணைக் கைவிட்ட ஒருவனுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்தண்டனை நீறுதலைப் பெய்யும் அதாவது சாம்பலைக் கரைத்துத் தலையில் ஊற்றும் தண்டனை என்று அகநானூறு கூறுகிறது.

          திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய

         அறினிலாளன், ”அறியேன்என்ற

         திறன்இல் வெஞ்சூல் அறிகரிகடாஅய்

         முறிஆர் பெருங்கிளை செறியப்பற்றி

         நீறுதலைப் பெய்த ஞான்றை

         வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே

இப்பாடல், ‘அழகிய பெண்ணொருத்தியின் அழகினைத் துய்த்துவிட்டு அவளைக் கைவிட்ட ஒருவன், ”இவளை நான் பார்த்ததும் இல்லைஎன்று அறமில்லாத கொடுமொழியைச் சான்றோர் முன் உரைத்தான்.

          ஆனால் அவையத்தார், நடந்த உண்மையை அறிந்த சான்றினர்களைக் கொண்டு வினவி அறிந்து அவனுடைய பொய்த் தன்மையை உணர்ந்து கொண்டனர்.

          எனவே அந்தக் கொடியவனை மரக்கிளையில் இறுகக் கட்டி வைத்துத் தலையிலே நீற்றினைப் பெய்தனர். இவ்வகையிலே அவனைத் தண்டித்தனர். என்று தெரிவிக்கின்றது.

          இங்கு நீறுதலைப் பெய்தல் என்னும் தண்டனை குற்றம் செய்தவன் தலையில் சாம்பலைக் கரைத்து ஊற்றுதல் என்று பொருள் கொள்வதைப் போலவே சாம்பல் உண்டாகக் காரணமாக இருக்கும் சாணத்தைக் கரைத்து ஊற்றுதல் என்று பொருள் கொள்ளவும் இடம் உள்ளது.

பார்வை நூல்கள்

 1. இலக்கியங்களில் சட்ட நெறிகள் - முனைவர் மு.முத்துவேலு, அருள் பதிப்பகம்,                                                                                                                       சென்னை-600 078. 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...