இலக்கியங்களில் கார்த்திகை தீபம்
கார்த்திகை தீப விழா பவுர்ணமி நாளில் வந்ததையும்,
அந்நாளில் மக்கள் விளக்கேற்றி வழிபட்டதையும், அகநானூறு பாடல் வழி அறியலாம்.
”மழைகால் நீங்கிய மாசு விசும்பிற்
குறுமுயல்
மறுந்தம் கிளர் மதிநிறைந்து
அறுமீன்
சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு
விளக்குறுத்து மாலை தூக்கி
பழுவிறல்
மூதூர் பலருடன் துவன்றிய
விழவுடன்
அயர” (அகம்-141)
இங்கு
அறுமீன் என்பது கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் குறித்தது. கார்த்திகைத் திருநாளில்
மக்கள் விளக்கேற்றியதையும் அந்நாளில் மழை வந்ததையும் கார் நாற்பது குறிக்கிறது.
”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள்
விளக்கின் தகையுடையவாகி
புலமெலாம்
பூத்தன தோன்றி – சிலமொழி
தூதொடு
வந்தமழை” (கார் நாற்பது -26)
கார்த்திகை தீப நாளில் மலையில் தீபம் ஏற்றியதை
சீவக சிந்தாமணி குறிக்கிறது.
”குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன
கடிகமழ்
குவளைப் பைந்தார்” (சிவக சிந்தாமணி -256)
களவழி நாற்பதில் பொய்கையார், கார்த்திகையில்
தீபம் ஏற்றப்படுவதைக் குறித்துள்ளார்.
”ஆர்ப்பு எழுந்த நாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்தோடி
தூக்கி
எறிதரு வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச்
சாற்றில் கழிவளக்குப் போன்றனவே
போர்க்கொடிதனை, பொருபுனல், நீர்நாடன்
ஆர்த்தமா அட்டகளத்து” (களவழி நாற்பது-17)
வளர் கார்த்திகை மாதந்தோறும் வரு கார்த்திகை நாள்
தன்னிலே ”பளகான தில்லா அன்பர்கள் பரிவாகவே யேத்தித் தொழ கிளர் மாமலை தனிலே ஒளிகெழு
சோதி காட்டா நின்ற நின் அளவு ஆர்தெரியவர் ஐயனே அருணாசல அருணாசலா” ஆண்டுதோறும் வரும்
கார்த்திகை தீபநாளில், திருவண்ணாமலையில், இறைவன் சோதிப்பிழம்பாய் எழுந்தருவதை அருணாசல
சதகம் மொழிகிறது.
Comments
Post a Comment