தமிழ்நாட்டில்
அமைந்த ஊர்களின் பெயர்கள்
தமிழ்நாட்டில் அமைந்த ஊர்களின் பெயர்கள் யாவும் பழந்தமிழ்ப் பெயர்களே. அவற்றில் சில
ஊர்களின் பெயர்களையும் காரணங்களையும் காணலாம்.
· நெய்: நெய் என்னும் சொல் பழங்காலத்தில் வெற்றிலையைக் குறித்தச் சொல்லாகும். வெண்ணெய் என்பது
வெள்ளை வெற்றியைக் குறித்தச் சொல்லாகும். நெய்வேலி, நெய்வாசல், நெய்குப்பை, வெண்ணெய் நல்லூர் ஆகிய ஊர்கள் வெற்றிலை கொடிக்கால்களுக்கு
பெயர் பெற்று விளங்கிய ஊர்கள், வெற்றிலை கொழுந்து என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட ஒரு
ஊர் இக்காலத்தில் வத்தலக் குண்டு என அழைக்கப்படுகிறது. ‘Betul’ என்னும் ஆங்கிலச் சொல் வெற்றிலை என்னும் தமிழ்ச் சொல்லின்
நேரடி மொழிபெயர்ப்பாகும்.
· சென்னிமலை: சென்னி என்பது
தலையைக் குறிக்கும். மனிதத் தலையைக் போன்று நேர்க்குத்தாக அமைந்த மலை சென்னி மலை என்று அழைக்கப்பட்டது.
· சிராப்பள்ளி: வடமொழியில் ‘சிரபுரம்’ என்று அழைக்கப்பட்டது. அதை சமணர்கள் ‘சிராப்பள்ளியாக மாற்றினர். மலையில் தாயுமானவர் கோவில் அமைந்த்தால் திருச்சிராப்பள்ளி
ஆகியது. அதுவும் சுருங்கி
திருச்சியாகிவிட்டது.
· கோயமுத்தூர்: பழங்காலத்தில்
பெரிய முத்துக்கள் (குளங்களில் இருந்து) கிடைத்த ஊர். கோயமுத்தூர் என்று அழைக்கப்பட்டது. சிறிய முத்துக்கள்
கிடைத்த ஊர் குனியமுத்தூர் என்று அழைக்கப்பட்டது. குழிந்த முத்துக்கள் கிடைத்த ஊர் தொண்டாமுத்தூர் என்று அழைக்கப்பட்டது.
· பத்தைமடை:கோரைப்புற்கள்
பத்தை என்று அழைக்கப்பட்டன. கோரைப் புற்களில் முடைநடா பாய் பத்தை முடைப் பாய் என்று அழைக்கப்பட்டது. இப்போது பத்தமடை
என்று அழைக்கப்படுகிறது.
· கும்பகோணம்:காவிரி ஆறும்
அதன் கிளை ஆறுகளும் கும்பகோணத்திற்கு வடக்கில் அறுபது பாகை (அறுபது டிகிரி) கோணத்தில் திசை
திரும்புகின்றன. தட்டில் வைக்கப்படும்
கும்பம், உச்சியில் 60 கோணம் கொண்டு
இருப்பது போல் அமைந்ததால் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.
· மயிலாடுதுறை: காவிரியில்
குளியல் துறை அமைந்த இடம். அகத்தியர் வாழ்ந்த ஊர். மயில்கள் நிறைந்து இருந்த இடம். காவிரியில் துலாமுழக்கு புகழ் வாய்ந்தது. இவ்வூர் வடமொழியில்
மயூரம் என அழைக்கப்பட்டது. அது தமிழில் மாயவரம் எனத் திரிந்து விட்டது.
· உறையூர்:திருச்சிக்கு
அருகில் அமைந்த ஊர் கரிகால் சோழன் இவ்வூரின் வழியாக யானை மீது வரும்போது திடீரென ஒரு
கோழி யானையின் மத்தகத்தின் மீது ஏறி கொத்தியது. அதிர்ச்சி அடைந்த ஆனை உறைந்து நின்று விட்டது. அதனால் உறையூர்
என்று பெயர் பெற்றது. கோழி யானையை வென்றதால் கோழியூர் என்றும் பெயர் பெற்றது. கரிகால் சோழன்
இவ்வூரின் தன் தலைநகரை நிறுவினான்.
· திரு ஆனைக்காவல்:சோழன் கோச் செங்கணான் கட்டிய மாடக் கோயில் அமைந்த ஊர். கோவிலுக்கு அளிக்கப்பட்ட யானை, காவல் இருந்த இடம். சம்பு நாவல் மரத்தடியில் ஈசன் கோயில் கொண்ட ஊர். திருச்சிக்கு வெகு அருகில் உள்ளது. யானை துதிக்கை நீரினால் சிவலிங்கத்தைப் பூசித்த ஊர்.
”சிலந்தியும் ஆனைக்காவில் திருநீழற் பந்தற் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச் செங்கணானுமாக
கலந்த நீர் காவிரி சூழ் சோனாட்டு சோழர்
தங்கள் குலத்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே”
என்பது அப்பர் தேவராம்.
· ஸ்ரீபெரும்புதூர் : திருவள்ளூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் கோவளம், மாங்காடு, வரலாஜாபாத்
ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் அமைந்த இடம் பெரும்மாத்தூர் ஆகும். இவ்வூர் ஸ்ரீபெரும்புதூர்
என்றும் அழைக்கப்படுகிறது.
· ஆறுந்தாங்கி: ஆறு ஊர்களுக்குச் செல்லும் வழியைத் தாங்கிய ஊர். அதனால் ஆறுத்தாங்கி
என அழைக்கப்பட்டு இப்போது அறந்தாங்கி ஆகிய ஊர். ஆறு ஊர்கள் 1.ஆவுடையார் கோவில், 2. பேராஊரிணி,
3. பள்ளத்தூர்,
4. புதுக்கோட்டை,
5. பட்டுக்கோட்டை,
6. நக்குடி.
· திருவையாறு:ஐந்து ஆறுகள் பாயும் ஊர் ஆகையால் ஐயாறு என அழைக்கப்பட்டது.
1. வடவாறு, 2. வெள்ளாறு, 3. வெட்டாறு, 4. குடமுருட்டி, காவிரி ஆறு.
· ஆரணி : கமண்டல நாக நதியும்,
செய்யாறும் அணிகலனாகச் சுற்றிச் செல்லும் ஊர் ஆறு – அணிகலனாக அமைந்த ஊர்.
· ஈரோடு : காவிரி ஆற்றின்
இரு ஓடைகள் கலக்கும் இடத்தில் அமைந்த ஊர். அதனால் ஈரோடை என அழைக்கப்பட்டு இப்போது ஈரோடு
ஆகிவிட்டது.
· பாக்கம்:கடற்கரைக்கு அருகில் அமைந்த சிறு ஊர்கள் 1. பட்டினப்பாக்கம்,
2. மடிப்பாக்கம், 3. கல்பாக்கம், 4. கரும்பாக்கம், 5. ஆலம்பாக்கம்.
· சீரலைவாய் : ஒரே சீராகக் கடலில்
அலைகள் வீசுமிடம். தற்காலத்தில் திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
· தென்பொதிகை: பொதிகை மலை உச்சியில், தைத் திங்கள் முதல்நாள் அகத்தியர்
விண்மீன் முன்னிரவில் பிரகாசிப்பதைக் காணுமிடம். சபரிமலையில் மீதிருந்தும் இக்காட்சியைக்
காணலாம்.
· வல்லம்: (தஞ்சை), திருவலம், வல்லக்கோட்டை, வலவனூர் வாணர்குல வீரர்கள்
(வல்லவரையர்) வாழ்ந்த ஊர்கள்.
· பழயாறை: பழவூர், பழவந்தாங்கல், பழவேற்காடு, பல்லவபுரம் (பழவர்புரம்)
– இவ்வூர்கள் பழவர்கள் என்று அழைக்கப்பட்ட பல்லவர்கள் குடியேறி வாழ்ந்த ஊர்களாகும்.
இவர்கள் சாதவாகன இனத்தைச் சேர்ந்த வடமொழி அரசர் குடியினர்.
· அரியலூர்:ஆரியர் குடியிருப்பு. அதனால் ஆரியலூர் என்று அழைக்கப்பட்டு
அரியலூர் என மருவியது. ஆரியப்படையூர், ஆரியங்கா ஆகிய ஊர்களையும் ஆரியர் உருவாக்கினர்.
· நாகர்: பாம்புகளை வணங்கும் இனத்தவர். இவர்கள் நாகர்கோவில், நாகப்பட்டினம்,
நாகவேடு, நாகவல்லி, நாகலாபுரம், அரவர்குறிச்சி (அரவாக்குறிச்சி) ஆகிய ஊர்களில் வாழ்ந்தனர்.
· மழவர்:தென்னிந்தியாவின் மலைவாழ்குடிகள், காடுகளிலும் மலைகளிலும்
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவர்கள். வீரமும், ஈரமும் (கருணை) மிக்கவர்கள். மலையையும்,
காட்டினையும், விலங்குகளையும் பறவைகளையும் நேசித்தவர்கள். காட்டு விலங்களை அடக்குவதிலும்,
ஆள்வதிலும் வல்லவர்கள்.
சேர, சோழ, பாண்டியர் மற்றும் முதல், இடை, கடை ஏழுவள்ளல்களும்
மழவரே ஆவர். அனைவரும் உறவின் முறையினரே ஆவர். இவர்கள் வேளிர்களிடம் (திராவிடர்) பெண்
கொடுத்துப் பெண் கொண்டவர் ஆவர்.
· பழையனூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவாலங்காடு அருகில் உள்ளது.
இங்கு பழையனூர் நீலி கோவில் உள்ளது. நீலிக்கும் அவள் கணவனுக்கும் ஏற்பட்ட சண்டையில்,
பழையனூர் வேளாளர் நீலி அவள் கணவனுடன் இசைந்து வாழவேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால,
தீர்ப்பளிக்கப்பட்ட அன்றிரவே நீலி கணவனால் கொல்லப்பட்டு இறந்தாள். பழையனூர் வேளாளர்,
தங்கள் தவறான தீர்ப்பே நீலி இறப்புக்குக் காரணம் என்று முடிவு செய்தனர். அதனால் தீர்ப்புக்
கூறிய எழுபது வேளாளர்களும் தீப்பாய்ந்து உயிர் நீத்தனர். இவ்வூரில் வேளாளர் தீயில்
உயிர் நீத்தக் காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.
· சுமைதாங்கி: கருவுற்ற ஒரு பெண், எதிர்பாராத விதமாக கர்ப்பிணியாக இறந்து
விட்டால் அவள் நினைவாக சாலைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருங்கல் பலகைகளால்
சுமைத்தாங்கிக் கல் அமைக்கப்படுவது உண்டு. ஏராளமான ஊர்களில் சுமைதாங்கி கற்கள் உண்டு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமைதாங்கி என்னும் பெயரில் ஊர் உள்ளது.
· பள்ளி: பவுத்தரும், சமணரும்
வசித்த இடங்கள் பள்ளிகள் என அழைக்கப்பட்டன. 1. குராப்பள்ளி, 2. சிராப்பள்ளி, 3. மகேந்திரப்பள்ளி,
4. திருக்காட்டுப்பள்ளி.
· மங்கை: புத்தமதத்தினர் வாழ்ந்த ஊர்கள் 1. புத்தமங்கை, 2. போதி
மங்கை, 3. சாத்த மங்கை, 4. புத்தமங்கலம், 5. பூதலூர், 6. சாத்தனூர்.
பார்வை நூல்
1.
தமிழர் வரலாற்றுக்
கதைகள் – ஆதிரை சுகுமாரன், அன்பு இல்லம், கே.கே.பி.காம்ப்ளக்ஸ்,
32/107, கௌடியாமடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை -600 014.
Comments
Post a Comment