பழந்தமிழரின் மணமுறைகள்- காப்பிய கால மணமுறைகள்
பண்டைத் தமிழரின் மணமுறையின் மரபாகக் காப்பியங்களிலும் இடம் பெறுவதை அறிய இயலுகிறது.
· பெண் கேட்டு
நிச்சயித்து மணவினையைப் பெண் வீட்டில் நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
·
பெண் கேட்கவும்
நல்ல நாள் பார்த்தனர்.
· சிலம்பு கழி
நோன்பு நிகழ்த்திய பின்னரே வதுவை நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
· பந்தலில் புதுமணல்
பரப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
· இளவேனில் காலத்தைத்
திருமணம் நிகழ்த்துவதற்குரிய பெரும்பொழுதாகக் கருதினர்.
· காலையில் மணம்
நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
· புள் நிமித்தம்
நன்னிமித்தமாக வாய்க்கப்பெற்ற பின்னரே மணவினையைத் தொடங்கினர்.
· திருமண வினைகள்
தொடங்குவதற்குமுன் கடவுள் வழிபாடாற்றினர்.
· திருமணத்தில்
விளக்கேற்றுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
· மணமகளின் தந்தை
மகளை மணமகனின் கையில் ஒப்புவித்தலை மணநிகழ்வின் சிறப்பு நிகழ்வாகக் கருதினர்.
· நெல்லும் மலரும்
தூவி வாழ்த்துவதை மரபாகப் போற்றினர்.
காப்பிய கால மணமுறைகள்
காப்பியம் சுட்டும் மணத்தொடர்பான சில பழக்கவழக்கங்களைப் பார்க்கும்போது, சங்க காலத்திற்குப் பின்னர் தமிழர்
வாழ்வில் அரிய எண்ணங்கள் செல்வாக்குப் பெற்று விளங்கிருப்பதனை உணர இயல்கிறது.
·
குழந்தை பிறந்ததும்
சாதகம் கணித்தனர். அந்தச் சாதகப் பொருத்தம் கொண்டு மணவினைக்கு, மணமகள் தேர்ந்தெடுத்தலும்
உண்டு.
· மன்னர் மணவினையில்
எட்டுப் பொருத்தங்கள் இருந்தால்தான் மணம் பற்றிப் பேசுதல் முறை எனக் கருதினர்.
·
குலம் கோத்திரம்
பார்த்து மணம் பேசுதலும் உண்டு.
· நல்லநாள் பார்த்து
மணச் செய்தி அனுப்புதல், நகருக்கு உணர்த்துதல் ஆகியன மேற்கொண்டனர்.
·
மன்னர், வணிகர்
ஆகியோர் முரசறைந்து மணச்செய்தியை ஊருக்குணர்த்தினர். மணஓலை அனுப்பிச் செய்தியுணர்த்திய
நிலை இடம் பெற்றது.
·
மணவினையில்
நகர் அலங்காரம், மணப்பந்தல், ஒப்பனை, மணமேடை ஒப்பனை சிறப்பிடம் பெற்றன.
· திருமணத்தில்
விளக்கேற்றலும், இறை வழிபாடும் இடம்பெற்றன.
· வேதவிதிப்படி
வேள்வித் தீ மூட்ட மணமேடை அழகுப்படுத்தப்பட்டதுடன், முறைப்படி தருப்பை, ஆசனம், மணவினைப்
பெருள்கள் இடம் பெற்றன.
·
மணமேடையில்
முளைப் பாலிகை இடம் பெற்றது.
· மணமக்களைக்
கூடியிருந்தவர் மலர்தூவி வாழத்திப் போற்றினர்.
·
மணமக்கள் வேள்வித்தீயை
வலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததியைக் காட்டுதலுடன் மணமக்கள் கரம் கூப்பி வணங்கினர்.
· மணவினையில்
மணமகன், மணமகளுக்குத் தாலி அணிவித்தக் குறிப்பு இல்லை. ஆனால் மணப்பெண் மணமுடித்தமைக்கு
அடையாளமாகத் தாலி அணிந்திருந்தனர் என்பது தெரிகிறது.
· மணமகனுக்கு,
மணமகளின் பெற்றோர் பாத பூசை செய்தல் இடம் பெற்றது.
· மணமுடிந்த நான்காம்
நாள் பகலெல்லை முடிந்தபின் சதுர்த்தி விரதம் பூண்டு மணவாழ்க்கை தொடங்கினர்.
புதிய முறைகளைக்
காப்பியங்களில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.
பார்வை நூல்
காப்பியங்களில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் - முனைவர் புலவர். சீ.வசந்தா,ஸ்ரீவித்யா பதிப்பகம், சென்னை -600 082
Comments
Post a Comment