வடக்கிருத்தல்
தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர்.
ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து
உயிர்த்துறப்பதை வடக்கிருத்தல் எனக் கொண்டனர்.
வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம்,
வீரம், நட்பு, தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர், புலவர், மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை
இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என
நம்பினர்.
கலைக்களஞ்சியம், வடக்கிருத்தலை ‘உத்ரக மனம்’
என்றும் ‘மகாப் பிரத்தானம்’ என்றும் கூறும். நாணத்தகு நிலை நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத்
தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.
‘வடக்கு நோக்கி உண்ணாநோன்பிருந்து உயிர்
துறக்கும் சமண நோன்பு முறையே ‘சல்லேகனை’ எனப்படும். சல்லேகனை என்பது உடலைத் துறத்தல்
எனப் பொருள்படும் என்பர். மேலும், இவை இரண்டும் குறிக்கோளில் வேறுபட்டு நடைமுறையில்
ஆண், பெண் இருபாலர்க்கும் உரிய ஒன்றாகக் காட்டப்படும். சல்லேகனை நோன்பு, ஆண்களுக்கு
மட்டுமே உரியதாகக் காட்டப்படும். வடக்கிருத்தல் என்ற நிலையினின்று வேறுபட்டு விளங்கக்
காண்கிறோம். ‘சமணரின் சல்லேகனை நோன்புக்குரிய காரணிகளாக மன வேதனையைத் தரும் இடையூறு,
தீராத நோய், மூப்பு, வற்கடம் ஆகியவை அமைகின்றன.
சல்லேகனை வீடுபேற்றினையும், வடக்கிருத்தல்
துறக்கமாகிய சுவர்க்கத்தினையும் அடைய முனையும் நம்பிக்கைகளாகவும், குறிக்கோளில் இரண்டும்
வேறுபடுதனை அறியமுடிகிறது. மேலும் உயிர்க்கொலை கூடாது என்ற தத்துவத்தினைக் கொள்கையாக
உடைய சமண சமயம், தமிழரின் புண் கிழித்து முடியும் வாள் வடக்கிருத்தல் என்ற நிலையிலும்
வேறுபடுகின்றது என்று தமிழரின் வடக்கிருத்தலுக்கும், சமணரின் சல்லேகனைக்கும் உள்ள வேறுபாட்டை
விளக்குவார்.
வடக்கிருத்தலும், சல்லேகனையும் ‘உண்ணாது
வடக்கு நோக்கி இருத்தலில் நினைவுச் சின்னமாகி, நடுகற்காகும் நிலையிலும் ஒன்றுபட்டு
விளங்கக் காண்கிறோம்.
பார்வை நூல்
1.
காப்பியங்களில்
பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் – முனைவர் புலவர் சீ.வசந்தா,ஸ்ரீவித்யா பதிப்பகம்,
சென்னை – 600 082.
Comments
Post a Comment