Skip to main content

வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ. இறையன்பு (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை )   புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு ,   விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96,   விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் .   முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...

பிறைதொழல்

 

பிறைதொழல்

          தமிழரிடம் பிறைவழிபாடு இருந்து வந்துள்ளமையைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். பிறை தொழுதல் என்பது மூன்றாம் நாள் சந்திரனைத் தொழுதல் ஆகும். இவ்வழக்கம் உலக மக்களிடம் சிற்சில வேறுபாடுகளுடன் நின்று நிலவுகின்றது. பிறை தொழப்படுவதற்கு அதன் வளர்ச்சி நிலைகளும் அது தொடர்பான கற்பிதங்களுமே காரணமாய் அமைகின்றன. பிறைதொழும் வழக்கம் தொன்று தொட்டுப் பல நாகரீக மக்களிடையே நிலவியதனைப் பண்டைய எகிப்திய, கிரேக்க, ஜெர்மானியச் சமுதாய வரலாறுகளும் பழங்குடி மக்களின் வாழ்வியலும் உணர்த்துகின்றன. மதியினால் புற்பூண்டுகள் செழித்து வளரும் என்னும் நம்பிக்கை பண்டைக் காலந்தொட்டுப் பன்னாட்டு மக்களிடையேயும் இருந்துள்ளது.

         பிறைதொழுதல் வளர்ச்சி வேண்டித் தொழப்பட்டதா அல்லது காப்புணர்வின் அடிப்படையில் தொழப்பட்டதா என்பதை இலக்கியச் சான்றுகள் வழி நின்று நோக்கும் பொழுது அது பெரும்பாலும் வளர்ச்சியினை வேண்டித் தொழப்பட்டதாகவே காட்சி தருகின்றது. இதனை இன்றைய நடைமுறைச் செயல்களும் உறுதிப்படுத்தும்.

   அகநானூற்றில் ‘பிறையை மாலைப்பொழுதில் தொழுவர்’ என்று சுட்டப்படுகிறது. வளர்பிறை போல வழிவழிச் சிறக்க என மதுரைக் காஞ்சி சுட்டுகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்களை நோக்கும் பொழுது முதன் முதலில் சிலம்பில்தான் சந்திரனை ஆண் தெய்வமாகக் கருதியமை சுட்டப்படுகின்றது. அத்துடன் சந்திரனுக்கும் கோயில் தனித்த நிலையில் இருந்தமையும் தெரியவருகிறது. இதன் வாயிலாக இயற்கையினைத் தெய்வமாக வழிப்பட்ட சங்க கால மக்கள் பின்னர் அவற்றிற்குத் தனியே கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர் என்பது புலனாகிறது. இது தொடர்பாக சீவகசிந்தாமணியில் பிறைதொழலை நிலை உவமையாகக் கையாளப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.

          ”விண்ணகம் வணங்க வெண்கோட்டியம்

                                                பிறை முளைத்ததே போற்

          பண்ணகத் தினிய சொல்லால் பாவையைப்

                                                பயந்தஞான்றே

          எண்ணிட மின்று மன்ன ரிம்மலையிறை கொன் உண்டி,

          அண்ணலங்களிற்றி னுச்சி யருங்கல வெறுக்கை யீந்தார்” (சீவந்.536)

‘மன்னர் நரகமாகத் தான் அவர்களுக்குக் கருடனாகிய கலுழவேகற்குத் தேவியாகிய தாரணி, அணங்கினன்னாளுமாய், இனிய சொல்லாலுமாயிருக்கின்ற பாவையை விண்ணிடத்தே பிறை தோன்றினாற் போல எல்லோரும் வணங்கும் படி பெற்ற அற்றை நாளே’ என்று நச்சினாக்கினியர் தம் உரையில் சுட்டுவார்.

      இக்குறிப்புக் கொண்டு காப்பியக் காலத்திலும் பிறை தொழும் வழக்கம், வழக்கிலிருந்தமையை உணர முடிகிறது. பிறைதொழுதல் ‘இராவண்டை போடுதல்’, என்ற பெயரில் செட்டி நாட்டுப் பகுதிகளில் வழங்கி வருகிறது. இன்றும் மூன்றாம் நாள் பிறையைப் பார்த்தல் சிறப்பு என்ற கருத்து அமைகிறது. வளம் வேண்டியும், செழிப்பு நோக்கியும் தமிழர் சிலரால் பௌர்ணமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இஸ்லாமிய மத்த்தார் பிறையைக் கொண்டு நோன்பு கணக்கிடுகின்றனர். நல்ல நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது வளர்பிறை நாட்களில் தொடங்குதல் இன்றும் மரபாகப் பேணப்படுதலைக் காணலாம்.

பார்வை நூல்

1.  காப்பியங்களில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் – முனைவர் புலவர் சீ.வசந்தா,ஸ்ரீவித்யா பதிப்பகம், சென்னை – 600 082.

 

         

Comments

Popular posts from this blog