Skip to main content

பழந்தமிழரும் விழாக்களும்

 

பழந்தமிழரும் விழாக்களும்


          ‘விழா’ என்று தோன்றியது என்பது வரையறைச் செய்ய இயலாது. தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத நிலையில் இயற்கைச் சக்தி மற்றும் கருவிகளின் செயற்பாட்டை மட்டுமின்றி, கனவுகள் தோற்றம் குறித்தும், பண்டைய மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாத  நிலையில் அப்பொருள்களுக்கு மிகுதியான ஆற்றல் இருப்பதாக புராதன மனிதன் எண்ணினான். அவ்வாற்றலை வழிபடும் வகையில் ‘புனிதப் பொருள் வழிபாடு தோற்றம் பெற்றது என்பர்.

        காலப் போக்கில் வழிபடும் பொருட்டு இயற்கை சக்திகளுக்கு உருவம் அளித்தான். அதனை மனிதனின் உருவாக்கக் கற்பனை என்பார் மானிடவியலார். இவ்வாறு தன் தேவைக்கும், மகிழ்ச்சிக்கும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் விழா நம்பிக்கைக்குரிய செயலாக வழக்கில் இடம் பெற்றது.

          தமிழர் விழாக்கள் நோன்பும், சடங்கும் இணைந்து செயற்படும் நிலையில் அமைவதாகச் சுட்டுவர். விழாக்களில் நோன்புச் செயலும், சடங்கும் ஒருமித்து இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அந்நிலையில் பண்டைத் தமிழர் நிகழ்த்திய விழாச் செய்திகளைக் காணலாம்.

பழந்தமிழரின் விழாக்கள்

        பழங்காலத்தில் சிற்றூரிலும், பேருரிலும் நிகழந்த செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக உணர முடிகிறது.  அன்று விழா ‘விழவு’, சாறு என்ற பல சொற்களால் சுட்டப்பட்டுள்ளது. சேரி விழா பொதுவாக நடைபெறும் விழாக்களுள் தனிப்பட்ட ஒரு பகுதியினரால் கொண்டாடப்பட்டது என்பதற்கு உழவர் விழா சான்றாக அமைகிறது.

    விழாக்கள் இயல்புகேற்ப காலையிலும் மாலையிலும் விழா எடுத்தனர். வளர்பிறை நாட்களில் விழாவினைத் தொடங்கினர். விழாவின் ஒரு பகுதியாக ‘சடங்கு’ என்ற சொல்லாட்சி, தமிழிலக்கியங்களில் பயின்று வரவில்லை. எனவே சடங்கினையே விழாவாக காட்டிருப்பதை,

          ”மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்

         ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை

         கா அய் கடவுள் சேஎய்! செவ்வேள்!

         சால்வ! தலைவ! வெனப்பே எவிழவினுள்

         வேல னேத்தும் வெறியு முளவே” (பரி , 5,11-13)

என்று பரிபாடல் சுட்டுவதில் அறியலாம். திங்கள் தோறும் விழாக்கள் இடம் பெற்றன.மேலும் விழாக்களை விரும்பி நிகழ்த்தியதன் நோக்கம் களைப்பைப் போக்கி, உழைப்பின் சுமையைக் குறைத்து, மீண்டும் உற்சாகம் பெறுதலைச் சுட்டலாம். அந்நிலையில் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற விழாக்களைப் பகுத்துக் கூறியுள்ளார் க.காந்தி.

·        இறைத் தொடர்புடையவை

·        இறைத் தொடர்பற்றவை

இறைத் தொடர்புடையவை

·        முருகன் விழா

·        இந்திரன் விழா

·        காமன் விழா

இறைத் தொடர்பற்றவை

·        பிறந்த நாள் விழா

·        புனலாட்டு விழா

·        பூந்தொடை விழா

·        உள்ளி விழா

·        ஓண விழா

·        கார்த்திகை விழா

எனப் பகுத்து விளக்குகிறார். பழந்தமிழர் கொண்டாடிய விழாக்களில் மறைந்தன, தொடர்வன என இருநிலைகளில் அணுகலாம்.

மறைந்த விழாக்கள்

·        இந்திர விழா

·        உள்ளி விழா

தொடரும் விழாக்கள்

·        திருவோண விழா

·        திருவாதிரை விழா

·        நடுகல் விழா

·        ஏறுகோள் விழா

·        முருகன் விழா

·        வெற்றி விழா

·        உழவர் விழா

இவ்வாறு பண்டைத் தமிழர்கள் விழாக்களைக் கொண்டாடியதையும், தற்போது தொடர்ந்து நடைபெறும் விழாக்களையும் அறிய முடிகிறது.

பார்வை நூல்

1.  காப்பியங்களில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் – முனைவர், புலவர். சீ.வசந்தா, எம்.ஏ.,எம்.எட்., ஸ்ரீவித்யா பதிப்பகம், பெரியார் நகர், சென்னை – 600 082.

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...