பரசுராமன்
சிரஞ்சீவிகள் எனப் போற்றப்படுபவர்களுள் ஒருவர்
பரசுராமன். இவருடைய தந்தை ஜமதக்கினி முனிவர். தாயார் ரேணுகா தேவி. கற்பில் சிறந்த ரேணுகா
தேவி, நீரில் தெரிந்த கந்தவர்னின் அழகை வியந்தமையால், வெறும் மணலால் குடத்தைப் பிடிக்கும்
தன் கற்பின் வலிமையை இழந்தாள். கோபமுற்ற ஜமதக்கனி தன் புதல்வர்களை அழைத்து தாயை வெட்டி
வருமாறு உத்தரவிட்டார். பரசுராமனின் தமையர்கள் அவ்வாறு வெட்ட மறுத்து தந்தையின் சாபத்தை
பெறுகின்றனர்.
பரசுராமர் தந்தையின் கட்டளையை ஏற்றுத் தாயை
வெட்டினார். மனம் மகிழ்ந்த தந்தை வேண்டும் வரத்தைக் கேள் என்றார். தன் தாய் உயிர் பெற
வேண்டும் என்றும் தமையர்கள் சாபம் நீங்க வேண்டும் என புத்திசாலித்தனமாக வரம் கேட்டு,
தாயையும், தமையன்மாரையும் பெற்றார் பரசுராமர்.
அதன் பின்னர் தந்தையிடம் விடைபெற்று சிவபெருமானை
நோக்கி தவம் செய்யப் புறப்பட்டார். அவர் சென்ற பின் அவருடைய பகைவனாகிய அரசன் கார்த்தவீரியன்
ஜமதக்கினியையும், ரேணுகா தேவியையும், மற்ற பிள்ளைகளையும் கொன்றான்.
வரம் பெற்றுத் திரும்பிய பரசுராமர் நடந்தமை
அறிந்து சினம் கொண்டார். தன் குடும்பத்தை அழித்த கார்த்தவீரியன் தலைமுறைகளைக் கொன்று
பழி தீர்ப்பதாக சபதம் எடுத்தார். அதனை நிறைவேற்றினார்.
தலை சிறந்த குருவாக தவ சக்திகளை பெற்றிருந்த
பரசுராமர், பீஷ்மர், கர்ணன், போன்றோர்க்கு ஆசிரியராய் திகழ்ந்தார். இவ்வாறு ‘தந்தை
சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழிக்கு இலக்காய் திகழ்ந்த பரசுராமர் திகழ்ந்தார்.
பார்வை நூல்
1. இலக்கியப் புதையல் – டாக்டர் க. இந்திரசித்து, ரேவதி பதிப்பகம்,
சென்னை -600 017
Comments
Post a Comment