நாட்டுப்புற
மக்களின் நம்பிக்கைகள்
ஒவ்வொரு மனிதனும் செய்கின்ற செயலுக்கும்
அடிப்படைக் காரணங்கள் உண்டு என்பது உளவியல் அறிஞர்களின் கருத்தாகும். அவைப் போன்றுதான்
நாட்டுப்புற மக்களின் ஒவ்வொரு நம்பிக்கைகளும் ஓர் காரணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான்.
ஆனால் கால சுழற்சியால் காரணங்கள் மறைந்து விட
நம்பிக்கைகள் மட்டுமே நிலைத்து நின்றன. பின்னால் வந்த சந்ததியினர் காரணத்தை அறியாத
காரணத்தாலே அவற்றை மூட நம்பிக்கைகள் எனப் பழித்தனர்.
விஞ்ஞான முறையிலே நம்பிக்கைகளை ஆராய்ந்தால்
அவை உண்மையாகவே இருந்ததைக் காணலாம்.
·
வடக்கு நோக்கி
படுத்தல் கூடாது என்பது பெரியோர்களின் கூற்று.
நம்பிக்கை:
மனித உடலில் எலக்ட்ரோ மாக்னெடிக் அலைகள்
உள்ளன. இவற்றின் மூலஸ்தானம் மூளைதான். அதுபோல் உலகின் மாக்னெடிக் மூலஸ்தானம் வடக்கு.
வடக்கே படுக்கும் பொழுது மூளையின் காந்த சக்தியும் உலகத்தின் காந்த சக்தியும் மோதிக்
கொண்டு மூளை பாதிப்புக்கு ஆளாகும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவாகும்.
·
சாப்பிடும்
போது தும்முதல் ஆகாது.
நம்பிக்கை:
இது சுகாதாரத்தைக் காரணமாகக் கொண்டதாகும்.
நாம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றோம். அருகில் அமர்ந்திருப்போர் தும்மினால் அவரின்
சளி, எச்சல் போன்றவை நம் இலையில் விழ நேரிடலாம். அஃது நமக்கு அருவருப்பை அளிக்கும்
என்பதனாலேயே அவ்வாறு கூறினர்.
·
தலைப்பிள்ளைகள்
மழைக் காலத்தில் இடிஇடிக்கும் பொழுது வெளியே செல்லக் கூடாது.
நம்பிக்கை:
இதை விஞ்ஞான பூர்வமாய் ஆராய்ந்தபொழுது அறியப்பட்ட
காரணம், தலைப்பிள்ளைகளின் மண்டை ஓட்டிற்கு மட்டும் ஒருவித காந்த சக்தி உண்டாம். மழைக்காலத்தில்
வானிலே இடிஇடிக்கும்போது, சில சமயங்களில் தலைப்பிள்ளைகளின் மண்டை ஓட்டின் காந்த சக்தியால்
ஈர்க்கப்பட்டு அவர்கள் தலையில் விழுந்து, அவர்கள் இறக்க நேரிடும் என்ற காரணமே ஆகும்.
·
வெள்ளிக் கிழமை
அன்று இரட்டை சுழியோடு ஆண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை மிகவும் அறிவுக் கூர்மை உடையவராய்
இருப்பர் என்று மக்கள் நம்புகின்றனர்.
·
திருமணமான பெண்கள்
வெள்ளியன்றும், செவ்வாயன்றும், பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கோ, புகுந்த
வீட்டில் இருந்த பிறந்த வீட்டிற்கோ செல்லக் கூடாது.
·
தென் திசை நோக்கி
வீடு அமைந்திருக்க வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர். தெற்கு திசையில் இருந்து தென்றல்
காற்று உடல் நலத்திற்கு ஏதுவானதாகும். அதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் உடல் நலத்தோடு
வாழ முடியும். இக்காரணம் பற்றியே இந்நம்பிக்கை உருவாயிருக்கவேண்டும்.
·
பெண்கள் எப்போதும்
நெற்றியில் திலகமிட்டுக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களை வசியப்படுத்தி
கடத்திச் செல்லும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. அப்படி வசியம் செய்பவர்கள் பெண்களின்
நெற்றியில் நடுப்பகுதியை வசியம் செய்யப் பயன்படுத்துவர். அச்சமயத்தில் பெண்களின் நெற்றியில்
திலகமிருந்தால் வசிய சக்தியைத் தடுத்துவிடும் என நம்பினர்.
நிறைவாக,
பொதுவாக நம்பிக்கைகள் இந்திய மக்களின் பண்பாட்டையும், மனநிலையையும் வெளிப்படுத்தும் கருவியாகத் திகழ்கின்றன. சாதி, சமய வேறாடின்றி அனைத்து மக்களிடமும் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. நம்பிக்கைகளே மனித வாழ்வின அடித்தளமாகவும், வாழ்வை இயக்கும் உந்து சக்தியாகவும் திகழ்கின்றன.
பார்வை நூல்
1. டாக்டர்.க.இந்திரசித்து - இலக்கியப் புதையல், ரேவதி பதிப்பகம், சென்னை-600 017.
Comments
Post a Comment