தொல் பழங்காலத்தில் மகளிர் ஒப்பனைகள்
தொல் பழங்காலத்தில் தமிழ் மகளிர், பல்வேறு
வகைகளில் ஒப்பனை செய்து கொண்டனர்.
· கூந்தல் - பல்வேறு கலை வடிவங்களில் பின்னப்பட்டது. ஒன்று சுறா மீன் வாய்போலும், சுறவுவாய், ஏனைய வகைகளாக, மயிர்முடி, உச்சி, கொண்டை, கொப்பு, சிகலிகை, தம்மிலம், மகளிர் முகத்திற்கு அழகுதரும் தலைமயிரின் ஏனைய பெயர்களாக, அளகம், ஐம்பால், ஓதி, குரல், குழல், கூரல், கூழல், கோதை, சுரியல், நெடுமை, மாட்டம், இலை, ஓரி, குஞ்சி, குடுமி, தளை, தொங்கல், நவிர், வித்தை, கதுப்பு, கோலி என்பனவாம்.
· உடலுக்குப் பூசப்படும் வாசனை பொடிகள்- உடல் பல்வேறு வண்ணங்களாலும், வண்ணப்பொடிகளாலும் அழகு செய்யப்பட்டது. தலையாய வண்ணக் குழம்பு, தேய்வை, சாந்து, கொயில், தொய்யில், முதலாயின. இறுதியில் கூறப்பட்ட தொய்யில், மார்பு, பாலூட்டி மற்றும் அடிவயிறுகள் மீது தடவப்பெற்று, அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டம் பெற்றன. தலைமயிருக்கான பூச்சு – தலைமயிறுக்கான பூச்சு தகரம் எனப்பட்டது. வண்ணப்பூச்சிகளின் மீது பல்நிறப் பொடிகள் தூவப்படும். அவற்றுள் ஒன்று, நவமணிகள், பொன், சந்தன மரம், கற்பூரச் சூடம், போலும் பொருள்களின் தூள்களால் ஆனது.
தமிழர்கள், தங்களை ஒப்பனை செய்து கொள்வதில் அளவுக்கு மீறிய ஆர்வம் உடையவர்.
பார்வை நூல்
1. ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு - புலவர் கா. கோவிந்தன், கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடேட், சென்னை -18
Comments
Post a Comment