Skip to main content

பழங்கால தமிழர்களின் உண்கலன்கள்

                  பழங்கால தமிழர்களின் உண்கலன்கள் 

       சங்க  காலத்தில் இயற்கையாக உள்ள பலவிதப் பொருட்களை உண்கலன்களாகப் பயன்படுத்தியதோடுசெயற்கையாக இரும்புதங்கம்தாமிரம்வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்டும்பீங்கான்மண் இவற்றினின்றும் பல கலன்களை வடிவமைத்துக் கொண்டனர்சமைப்பதற்குப் பெரும்பாலும் மண்ணாலியன்ற கலன்களும் உண்பதற்கு மண் மட்டுமின்றிஉலோகங்களால் செய்தக்  கலன்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

இலை உண்கலன்கள்

          ஆம்பலிலைதாமரையிலைதேக்கிலைவாழையிலைபனையோலையில் செய்த குடைமூங்கில் ஆகியவை இயற்கையினின்றும் கிடைப்பவைஇவற்றை உண்பதற்கு ஏற்றதாக முடைந்தும்பதப்படுத்தியும் கலன்களாக உருவாக்கியுள்ளனர்.

ஆம்பலிலை

          பாண்மகள் தனது கணவனுக்கு ஆம்பலது அகன்ற இலையில் சோற்றுடன்பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பான பழத்தினை இடும் அழகினை,

          ஆம்பல் இலைய வமலை வெஞ்சோறு

           தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து

           விடியல் வைகறை யிடூஉ மூர (அகம்,196:5-7)

என்ற பாடல் வழி அறியலாம்ஆம்பலிலையில் திடப்பொருள் மட்டுமல்லாமல் திரவமான கள்ளினையும் உண்ணப் பயன்படுத்தியுள்ளனர்.

தேக்கிலை

  தேக்குமரத்தின் இலைகளை உண்கலமாகப் பெருமளவு மக்கள் பயன்படுத்தியுள்ளனர்வழிநடைச் செலவில் தேக்கிலை பெரிதும் உதவியுள்ளதுஅன்றாட வாழ்விலும் ,

          சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்

          அகலிலை குவித்த புதல்போல் குரம்பை

           ஊன்புழுக் கயரு மூன்றில்” (அகம்,315:15-17)

பெரும்பான்மையான மக்கள் தேக்கிலையைப் பயன்படுத்தி இருப்பதால் அக்காலத்தில் தேக்குமரக் காடுகள் அதிகமிருந்தன எனலாம்.

வாழையிலை

          அன்றும் இன்றும் சிறப்பு உண்கலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்கலம்  வாழையிலையாகும்வாழையிலையைப்,

          வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்

           புகையுண்டு அமர்ந்த கண்கள்” (நற்.120:5-6)

          செழுங்கோள் வாழை யிகலிலைப் பகுக்கும்” (புறம்.168:13)

எனும் பாடலடிகள் உணர்த்துகின்றனகடற்கரைச் சோலையில் சிற்றில் அமைத்து விளையாடும் போதும் உண்பதற்கு வாழையிலை பயன்படுத்திதைக் காணலாம்.

பனையோலை

      பனையோலையில் திடதிரவப் பொருள்களை உண்ண ஏற்றதாக இருப்பதால் பனையோலைக் குடை எனப்பட்டதுபனையோலை கெட்டித்தன்மை கொண்டதாய் இருக்கும்எனவே குடை போன்று பதப்படுத்தியுள்ளனர்.

         வழிநடைச் செல்வோர் பலவிதக் கலன்களை எடுத்துச் செல்வது பயணத்தின் சுமையை அதிகரிக்கும்பனையோலைக்குடை எடுத்துச் செல்லவும்பயன்படுத்தியப்பின் எறிந்து விடவும் முடிவதால், வழிநடை பயணத்தில் எடுத்துச்  சென்றுள்ளனர்.

          உட்கைச் சிறுகுடை கோலிக்கீழ் இருந்து” (குறுந்.60:3)

          உண்ணலு உண்ணேன் வாழலும் வாழேன்

           தோணலமுண்டு துறக்கப்பட்டோர்

           வேணருண்ட குடையோ ரன்னர்  (கலி.23: 8-10)

இப்பாடலடிகள் மூலம் இப்பனையோலையை ஒருமுறை பயன்படுத்திக் கழித்துவிட்டனர் என்பதை அறியமுடிகிறது. மேலும்மாரிக்காலத்தின் விடியற் பொழுதிலேபெரிதான பசிய பனையோலைக் குடைகளிலே பிச்சியினது நீர் வழியும் கொழுவிய அரும்புகளைப் பலவாக நிறைத்துப் பொதிந்து கொணரவும் பயன்பட்டுள்ளது.

          மாரிப்பித் திகத்து நீர்வார் கொழுமுகை

           இருபனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து” (குறு.168:1-2)

பனையின் மடல் தடிமனாகவும்குளிர்ச்சித் தன்மை கொண்டும் இருப்பதால் பிச்சியின் அரும்பு வாடாமல் இருக்கும் பொருட்டு இவ்வாறு வைத்திருப்பர்இன்றும் நுங்குவிசிறிபனையோலை மடல் பயன்பாட்டில் உள்ளது.

மூங்கில்

          மூங்கில் உள்ளீடற்றும்ஒவ்வொரு கணுவின் இடையில் தடுப்பு போலும் காணப்படும்ஒவ்வொரு கணுவிற் கீழும் அறுக்கப்பட்ட மூங்கிலினை ஒரு குப்பியாக வடிவமைக்கலாம்மூங்கிலின் மேற்பாகத்தினை மூடிபோன்று தயாரித்து மூடியாகப் பயன்படுத்தினர்.

          ஆயர்கள் மூங்கில் குழாயிலே இனிய புளிச் சோற்றை அடைத்து அதை இளைய எருதுகளின் கழுத்தில் கட்டி எடுத்துச்  சென்ற அழகிய காட்சியினை அகப்பாடலில்,

          மழவிடை பூட்டிய குழாஅய்த் தீம்புளி

           செவியடை தீரத் தேக்கிலை பகுக்கும்” (அகம்.311:10-11)

இவ்வாறு எடுத்துச் சென்ற உணவினைபசியினால் காதடைத்து வரும் வழிப்போக்கர்களுக்குத் தேக்கிலையில் இட்டு உண்ணக் கொடுத்துள்ளனர்.

      மூங்கில் குழாயினில் தேறலிட்டும் காட்டெருமைப் பாலினில் தோய்த்த தயிரிட்டும் பயன்படுத்தியுள்ளனர்.

          கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி

           திருந்தமை விளைந்த தேக்கட் தேறல்

           கானிலை யெருமைக் கழைபெய் தீந்தயிர் (மலை,521-523)

புளிச் சுவையினைக் கூட்டியும்பதத்தன்மையுடனும் வைத்திருக்கும் என்று மூங்கில் குழாயினைப் பயன்படுத்தினர். மூங்கில் குழாயின் பயன்பாட்டினை நற்றிணை, பரிபாடல், புறநானூறு என்ற இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது.

செயற்கை உண்கலன்கள்

          தமிழர்கள் பயன்படுத்திய செயற்கை உண்கலன்களைக் காணலாம்.

அகல்

      அகல் என்பதற்குச் சட்டி என்று பொருள்அகல் என்பது அகன்ற வாயினையும்கீழ்ப்பகுதி தரையில் வைக்கும்படியான அமைப்பினையும் கொண்ட கலன் அகல் எனப்படும்உண்பொருள்களை எடுத்து வைப்பதற்கு உதவும் அடுகலனாக இதனைப் பயன்படுத்தினர்.

          பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்

           காரகற் கூவியர் பாகொடு பிடித்த

           இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல்” (பெரும்:376-378)

இவ்வகலினை மண்ணினாற் செய்து நன்றாகச் சுட்டிருப்பர் என்பதனைகரியதான சட்டி எனும் சொல் காட்டுகின்றது.

கரகம்

       நீர்விழும் கெண்டியின் உறுப்பு ‘கரகமூக்கு’ எனப்படும்எனவே சிறிது சிறிதாக நீர் விழும்படியாக அமைக்கப்பட்ட  கலனாகக் கரகம் இருந்திருக்கலாம்பெரும்பாலும் அந்தணர்கள் இக்கரகத்தினைப் பயன்படுத்தியுள்ளனர்தொல்காப்பியரும் இக்கரகம் குறித்து,

          நூலே கரகம் முக்கோல் ணையே  (தொல்.1570)

எனக் குறிப்பிடுகிறார்.

     அரசர்கள் பொற்கலத்தினிலே கள்ளுண்டு இன்புறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

          பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய

           நாரி தேறல் மாந்திமகிழ் சிறந்து   (புறம்.367:6-7)

இருந்ததுடன்தம்மை நாடி வரும் இரவலர்க்கும் பொற்கலத்திலேயே உணவிட்டுச் சிறப்புச் செய்துள்ளனர்செல்வர் இல்லத்திலும் இப்பொற்கலம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

கறவைக்கலம்

          இக்கலம் பால் கறப்பதற்கு ஆயர்களால் மட்டும் பயன்படுத்தப்பட்டதுநீள் வடிவத்துடனும்உட்குழிந்தும் இக்கலம் அமைக்கப்பட்டிருக்கலாம்.

          புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொழுப்பதோ

           இனத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ”(கலி.108:30-32)

          இக்கறவைக் கலங்களை வைப்பதற்கு உறியினைப் பயன்படுத்தியதையும் அறியமுடிகிறது.

            கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண்

             இமிழிசை மண்டை யுறியொடு தூக்கி (கலி,108:1-2)

இவ்வாறு திடதிரவப் பொருள் உண்ணவும்கறவைக் கலனாகவும்கலம் விளங்கியதோடு அளவையாகவும் பின்பற்றப்படுகிறதுநெல் போன்ற தானியங்களை அளக்கக் கலம் உதவியுள்ளது.

          கலன்களை உருவாக்கும் போது அவை ஒரே கொள்ளளவு கொண்டதாக இருந்ததையும் இதன் மூலம் அறியலாம்கலன் என்பதைப் பாத்திரங்களின் பொதுப் பெயராக நிற்றலும் சுட்டத்தக்கது.

காடி

          புளிப்பான பொருள் காடி எனப்படும்எனவே புளிப்பான ஊறுகாய்தேறல் வைக்கப் பயன்படுத்தின கலன் காடி எனப்பட்டதுகாடி எனும் சொல் கழுத்து எனும் பொருளையும் கொண்டது.  பெரும்பாணாற்றுப்படை,

          காடி வைத்த கலனுடைய மூக்கின்” (57)

என நாடக மகளிரின் முழவுக்குக் காடியை உவமை கூறுகிறதுஎனவே மேற்பக்கம் கழுத்து போன்று நீண்டும்அடிப்புறம் முழவு போன்ற அமைப்பும் கொண்ட வடிவினது காடி எனக் கொள்ளலாம்இக்காடியில் ஊறுகாய் வைத்திருந்தமையை,

          நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

           தகைமாண் காடியின் வகைபடப் பெறுகிவிர் (பெரு, 309-310)

எனும் பாடலடி கொண்டு அறியலாம்காடியும் அளவைகளில் ஒன்றாகப் பயன்பட்டு வந்துள்ளது.

காழ்

        கடினத்தன்மை, தண்டு வடிவம்முதிர்ச்சி போன்ற பல பொருள்களுடன் கருமை எனும் பொருளும் கொண்டது இச்சொல்எனவே கடினத் தன்மையுடனும்கருநிறத்துடனும் அமைந்த இரும்புக் கம்பி காழ் எனப் பெயர் பெற்றதுதண்டு போல் அமைந்த இரும்புக்கம்பியில் இறைச்சியினைக் கோர்த்துச் சுட்டு உண்டுள்ளனர்என்பதனை,

          காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை” (பொரு.105)

           விடை வீழ்த்துச் சூடுகிழிப்ப” (புறம்.366:19)

போன்ற காட்டுகள் மூலம் அறியலாம்.

குழிசி

          குழிதல் என்பது குழிவான  அமைப்புக் கொண்டதுஎனவே குழிவான அமைப்புக் கொண்ட பானை குழிசி எனப்பெற்றதுபெரும்பாலும் இது உணவு சமைப்பதற்குப் பயன்பட்டதுஎனவே களிமண்ணால் செய்யப்பட்டதுஎன்பதை,

          களிபடு குழிசிக் கல்லடுப் பேற்றி” (அகம்.393:15)

என்பதால் அறியலாம்சமைப்பதற்கு இது பயனானதை,

          நெடுங்கிணற்று

           வல்லூற்று வரிதோண்டித் தொல்லை

          முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி   (பெரு.97-99)

           வெண்கோ டோன்றாக் குழிசியொடு   (புறம்.257:12)

என்ற வரிகள் மூலம் உணரலாம்.

          சமைப்பதற்கு மட்டுமின்றிதயிரினை எடுத்துச் சென்று பண்டமாற்று செய்துவர இடைக்குலப் பெண்கள் குழிசியைப் பயன்படுத்தியுள்ளனர்.

          தீந்தயிர் கலக்கிநுரை தெரிந்து

          புகர்வாய் குழிசி பூஞ்சுமட்டிரீஇ  (பெரும்,158-159)

குடம்

          தசும்புமிடாகுடம் அனைத்தும் ஒரு பொருள் குறித்த சொற்கள்குடக்கம் எனும் பொருளினைத் தருவதுபலாப்பழம் போன்று குடம் இருந்தது என்பதனை,

          முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்  (அகம்.352:1)

என அகப்பாடலடி எடுத்துக்காட்டுகிறதுஎனவே கீழ்ப்பாகம் பலாப்பழம் போல் விரிந்தும் உள்நோக்கி வளைத்தும் அமைக்கப்பட்ட கலன் குடம் எனலாம்.

      கோபுர விமானங்களின் உச்சிக் கலசம் தசும்பு எனப்பட்டதுஅக்கலசம் நன்றாகக் கீழ்ப்பாகம் உருண்டும்மேல் நோக்கிச் சற்றுக் கூம்பாகவும் இருக்கும்இவ்வமைப்பை ஒத்ததாக வடிவமைக்கலாம்ஆய மக்கள் தயிரினை எடுத்துச் செல்வதற்கு இத் தசும்பு உதவியுள்ளது.

          தயிர்கொட வந்த தசும்பும் நிறைய (புறம் .33:3)

உணவு சமைக்கவும்தேறலிட்டு வைக்கவும் தசும்புமிடா இரண்டும் பயனாகியுள்ளன என்பதை,

          வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்

           துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேற

           இளங்கதிர் ஞாயிற்றுக் களங்க டொறும் பெறுகுவீர்” (மலை.462-464)

எனும் பாடலடிகள் கொண்டு அறியலாம்பொதுவாகக் குடம்தசும்புமிடா இம்மூன்றும் அடுகலனாகச் சங்கத் தமிழரால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

சாடி

          மதுவினை வைப்பதற்குப் பயன்படுத்திய பாண்டவகை சாடி எனப்பட்டதுஇது கீழ்ப்பாகம் தரையில் நன்றாக அழுந்தும்படி தட்டையாகவும் கழுத்துப்பகுதி நீண்டும்நடுப்பகுதி நன்கு பருத்த அமைப்பினதாகவும்மேற்புறம் மூடினால் மூடப்படும் வகையிலும் இருந்திருக்கலாம்.

          கள்ளினைக் காய்ச்சுவதற்கும்அதனைப் பதப்படுத்தி எடுத்து வைப்பதற்கும் இச்சாடி பயன்பட்டுள்ளதுஇதனைப் பல மேற்கோள்களால் நிறுவலாம்.

          வல்வாய்ச் சாடியின் வழைச்சுற விளைந்த” (பெரும்.280)

          கலிமடைக் கள்ளின்சாடி அன்னஎம்  (நற்.295:7-8)

எனும் பாடல்வரி கொண்டு உணரலாம்.

தாலம்

          தாலம்பிழா ஆகிய கலன்கள் உண்பதற்குத் தட்டுப் போன்று பயன்படுத்திய கலன்களாகும்தாலம் எனில் பனை எனவும் பொருளுண்டுஎனவே இத்தாலம் பனையோலையால் விரிந்தத் தட்டையான தட்டுப் போல வடிவமைத்திருக்கலாம்மக்கள் உணவினை உண்பதற்குத் தாலத்தினைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதனை,

          நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப்

          பெருந்தோ டாலம் பூசன் மேவர  (புறம்.120:14-15)

எனும் பகுதியால் அறியலாம்.

பிழா

          தாலத்தினைப் போன்றேகொழியலரிசிக் கஞ்சியினை உண்பதற்கு அகன்ற வாயுடைய தட்டினைப் பயன்படுத்தியுள்ளனர்இது பிழா என அழைக்கப்பட்டது.

          அவையா வரிசி யங்களித் துழவை

           மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி    (பெரு.275-276)

தாழி

          மண்ணாலியன்ற வாயகன்ற சட்டி தாழி எனப்பட்டதுஇது கலன்போன்று பற்பல அளவு வடிவங்களில் அமைந்ததுஅக்கால மக்கள் ஈயலை உணவாகக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்ந்த ஈயலைப் பிடிக்கத் தாழி பயன்பட்டுள்ளது என்பது,

          நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல்கெண்டி    (நற்.59:2)

எனும் வரியில் தெளிவாகிறது.

          இறந்தவர் உடலை மண்ணால் செய்தத் தாழிக்குள் வைத்துப் புதைப்பது அக்கால மரபுஇதனை முதுமக்கட்தாழி என்றழைத்தனர்இதற்குப் பயன்படுத்திய தாழி நன்றாக வாயகன்றும்அளவில் பெரிதாகவும் இருந்திருக்கும் என ஊகிக்கலாம்உயிர் நீத்த மன்னர்களை இத்தாழிக்குள் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்ததனை,

          துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த

           மன்னர் மறைத்த தாழி

           வன்னி மன்றத்த வியங்கிய காடே (பதிற்.44:21-23)

எனும் பதிற்றுப்பத்தின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

மண்டை

          சங்ககால மக்களில் பெரும்பாலோர் மண்டை எனும் கலனைப் பயன்படுத்தி உள்ளனர்செல்வந்தர் பயன்படுத்திய மண்டை தங்கத்தாலும்வெள்ளியாலும் செய்யப்பட்டவையாகவும்பாணர்விறலியர் போன்றோர் பயன்படத்தியவை மண்ணால் செய்யப்பட்டவையாகவும் இருந்தனபாணர்விறலியர் இக்கலனை இரப்பதற்குப் பயன்படுத்திமையால் இக்கலன் இரப்போர் கலம் எனப்பட்டதுஇக்கலனுக்குச் சென்னி என்றும் மறுபெயருண்டுபாணர் இக்கலனினைப் பயன்படுத்தியமையால் சென்னியர் என்றழைக்கப்பட்டனர்.

               ....   ... ...     .....    .....      சென்னியர்

           தெறலருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ்” (நற்.189:2-3)

         செல்வர்கள் பயன்படுத்தின மண்டை அழகுற மணிகள் பதிக்கப்பட்டுப் பசும் பொன்னால் செய்யப்பட்டவையாக இருந்தது என்பதனை,

         மணிசெய் மண்டைத் தீம்பாலேந்தி

           ஈனாத்தாயர் மடுப்பவும் உண்ணாள் (அகம்.105:5-6)

என்பதால் தெளியலாம்.

          அரசர்கள், பாசறையிலே தம்மிடம் வேலை செய்யும் வீரர்களுக்கு மிக்க அன்பால் அவர்களுக்குண்டான பசும்பொன் மண்டையிலே உணவிட்டுச் சிறப்புச் செய்யும் தன்மை கொண்டது என்பதை,

          மூதிலான ருள்ளுங் காதலின்

          தனக்கு முகந்தேந்திய பசும்பொன் மண்டை  (289:5-6)

எனும் புறப்பாடல் எடுத்துக் காட்டுகிறது.

வள்ளம்

          வட்டில், வள்ளம் இரண்டும் உண்கலமாக உதவும் வட்டவடிவம் கொண்ட கலனாகும். தற்காலத்தில் பயனில் இருக்கும் கிண்ணம் போன்று உட்குழிந்தும் வட்ட வடிவும் கொண்ட கலனாகவும் இது இருந்திருக்கலாம். பால், தேறல் போன்ற நீர்மப் பொருட்களை இவ்வள்ளத்தில் பெய்துண்டனர். இதனை,

          ”பால்பெய் வள்ளஞ் சால்கை பற்றி

           என்பா டுண்டனை யாயின்” (அகம்.219:5-6)

          ”சேடியல் வள்ளத்துப் பெய்த பால்சில காட்டி (கலி.72:3)

முதலான காட்டுகள் மூலம் நிறுவலாம்.

நிறைவாக,

        சங்கத்தமிழர் பயன்பாட்டில் இருந்த உண்கலன்களினின்றும் அவர்களின் கலைத் தொழில் நுட்பம் வெளியாகிறது. தொழில் நுணுக்கத்தில் சிறந்தவர்களாக மட்டுமின்றி, அறிவியல் அறிவிலும் மேம்பட்டவர்களாக விளங்கியுள்ளனர். உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்காத மண், தங்கம், வெள்ளியாலான கலன்களைப் பயன்படுத்தி உள்ளனர். நம் தமிழர்களின் வாழ்வில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது.

         

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...