கடு சர்க்கரைப் படிமம்
வைணவக் கோவில்களில் நின்று அமர்ந்த கிடந்த கோலத்தில் உள்ள கருவறைப் படிமங்கள்
சுதை அல்லது கடுசர்க்கரையால் ஆனதாக இருக்கும். இப்படிமங்கள் மிகவும் நேர்த்தியாகவும்
அழகுடனும் கூடியவை. இத்தகு படிமங்களுக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு செய்வர்.
சிற்பக் கலைஞர்கள் கடுசர்க்கரையக் கண்ட சர்க்கரை என்றும் கூறுவர். கடினமான சுக்கான் கற்களைப் பொடித்துக்
கிடைக்கும் சிறு மணலையும், மண்ணையும் பலவகையான மூலிகைகளின் சாற்றையும் கலந்து தயாரிக்கப்படும்
சாந்து கடுசர்க்கரை எனப்படும். கடு சர்க்கரைச் சாந்தை மரச்சட்டத்தில் பூசி உருவாக்கப்படும்
படிமம் கடுசர்க்கரை படிமம் எனப்படும். இதைத் தயாரிப்பதற்கும் பல கட்டங்கள் உண்டு.
படிமத்தின் அளவை தீர்மானித்த பின் மரச் சூலக் கூடி தயாரிப்பது முதல் கட்டம்.
இந்தக் கூட்டின் மேல் கயிறு அல்லது தாமிரக் கம்பியைக் கட்டுதல், அதன் மேல் எட்டுவிதக்
கலவைக் குழம்பைப் பூசுதல் அதன் பின் கலவைச் சாந்தைப் பூசி படிமத்தை உருவாக்குதல் வர்ணம்
பூசுதல் என ஆறு கட்டங்களாக கடுசர்க்கரை படிமம் தயாரிக்கப்படும்.
பார்வை நூல்
1.
தமிழர் கலையும்
பண்பாடும் – அ.கா.பெருமாள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 014.
Comments
Post a Comment