குழல்
குழலுக்கு வங்கியம் என்றும் பெயர் உண்டு. குழல் மிக பழமையான இசைக்கருவி. இதற்குப்
புல்லாங்குழல் என்றும் வேணு என்றும் பெயர் உண்டு. புல் என்றாலும் வேணு என்றாலும் மூங்கில்
என்று பொருள். மூங்கில் குழாயினால் செய்யப்பட்ட கருவியாதலால் இதற்குப் புல்லாங்குழல்
எனப்பட்டது.
காட்டில் வளர்ந்த மூங்கில் புதர்களில் சில மூங்கிற் குழாய்களை வண்டுகள் துளைத்துத்
துளைகளை உண்டாக்கின. வேகமாக்க் காற்றடிக்கும் போது அந்த்த் துளைகளின் வழியாகக் காற்று
உள்ளே புகுந்து இசையுண்டாயிற்று. பிற்காலத்தில் வெண்கலக் குழாயினாலும், மரங்களினாலும்
புல்லாங்குழலை இன்றும் நிலைபெற்றிருக்காது.
பழங்காலத்தில் குழல் மெல்லிய மூங்கிற் குழாயினால் செய்யப்பட்டது. பிறகு இக்கருவி
சந்தனம், கருங்காலி, செங்காலி மரங்களினால் செய்யப்பட்டது. திண்மை மிக்க இந்த மரங்களைக்
கடைந்து வங்கியம் அமைத்தார்கள். வெண்கலத்தினாலும் வங்கியம் செய்ய
”ஓங்கிய மூங்கில் உயர்சந்து வெண்கலமே பாங்குறு செங்காலி கருங்காலி – பூங்குழலாய்
கண்ணன் உவந்த கழைக்கு இவைகளாம் என்றார் பண்ணமைந்த நூல் வல்லோர் பார்த்து”
என்னும் பாடல் பகருகின்றது. வங்கியங்களில் மூங்கிலால் செய்வது உத்தமம்; வெண்கலத்தால்
செல்வது மத்திமம்; மரங்களால் செய்வது அதமம்.
பார்வை நூல்
1.
முனைவர் எஃப்.
பாக்யமேரி - காலந்தோறும் தமிழர் கலைகள், அறிவுப்
பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை – 600 014.
Comments
Post a Comment