சங்க கால இசைக்கருவிகள்
இசையை எழுப்பும் கருவிகள் பலவகைப்படும். இக்கருவிகளைப் பசிய நிறமுள்ள பைகளுக்குள்ளே போட்டு கார்காலத்தில்
பழுக்கும் பலாக்காய்களைப் போன்று தோளில் வைத்துச் சுமக்கும் கம்பின் இருபக்கத்திலும்
பாரம் ஒத்திருக்கும்படி கட்டித் தூக்கிச் செல்வர் பாணர்,
”கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையர்” –மலைபடு.12-13
இவ்விசைக் கருவிகளைத் தோற்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், மிடற்றுக் கருவிகள்
என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
யாழ்
சங்க
நூல்களில் வில்யாழும், சீறியாழும், பேரியாழும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
” ...... ..... ....... ....... குமிழின்
புழற்கோடறாத் தொடுத்த மரபுறி நரம்பின்
வில்யாழ்” -பெரும்பாண்.180-182
”கருங்கோட்டுச் சீறியாழ்” (நெடுநல்.70)
”ஏழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ்” (மதுரை.559)
என்பன சங்க இலக்கியங்கள்
காட்டும் யாழ்வகைகள்.
பத்துப்பாட்டில்
நான்கு பாடல்கள் யாழின் அமைப்பைப் பற்றி விரிவாக விளக்குகின்றன.
”குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை
மெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
யளைவா ழலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி
யெண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
யண்ணா வில்லா லமைவரு வறுவாய்
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோன் முன்கை யாய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் தவவி
னாய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்”
இது பொருநாராற்றுப்படை சித்தரிக்கும்
யாழின் அமைப்பு. இதில் பத்தல், தோற் பார்வை, ஆணி, வறுவாய், மருப்பு, திவவு, நரம்பு என்பன இங்குக் காட்டப்படும் யாழின் உறுப்புக்கள். இவ்வாறே சிறுபாணாற்றுப்படையும், மலைபடுகடாமும், பொருநராற்றுப்படையும்
யாழின் அமைப்பும் சித்திரிக்கின்றன.
சிறுபாணாற்றுப்படையில்
திவவு, ஆணி, அகளம், பச்சைப் போர்வை, நரம்பு ஆகியவை
உறுப்புகளாகக் கூறப்படுகின்றன.
பெரும்பாணாற்றுப்படை
போர்வை, வறுவாய், கவைக்கடை, திவவு, மருப்பு, நரம்பு என்பனவற்றை
உறுப்புகளாகக் காட்டுகிறது.
மலைபடுகடாம்
திவவு, நரம்பு, ஆணி, யாப்பு, பச்சைப் போர்வை உந்தி மருப்பு இவற்றை யாழ் உறுப்புகளாகக் குறிக்கின்றது.
பறை
ஆடலிலும், போரிலும் இசைவிழாக்களிலும்
பறைக்கருவி சிறந்த இடம் பெற்றிருந்தது. பறை முரசு, முழவு என வழங்கப்பட்டன.
முழவு
விழாக்களில்
முழவு இமிழ்வதை மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் போன்ற நூல்களில் குறிக்கப்படுகின்றன.
”முழவிமிழு மகலாங்கள்
விழவு நின்ற வியன்மறுகு” –
மதுரை
.327-328
”குரூஉக்கட் பிணையற்கோதை மகளிர்
முழவுத் துயிலறியா வியலி ளாங்கண்
விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே” – மலையடு.349-351
சில நேரங்களில் முழவின்
ஓசைக்கேற்ப யாழில் இசை எழுப்புவர்.
”குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி”
முழவு வாரினால் வரிந்து
கட்டப்பட்டிருக்கும் என்பதை,
”...... .... ........
பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொடு -மலைபடு.2.3
”விசிபிணிக் கொண்ட மண்கணை முழவு” புறம்.15:23
ஓசை அமைதிக்காக முழவின்
பக்கங்களிற் பூசப்பெறும் பசை மண் எனப்படும்.
”மண்ணமை முழவு” –பொருந.109
முழவு ஆடவரின் தோள்களுக்கு
உவமையாகக் கூறப்பெறும்.
”முழவுத் தோள்” – மதுரை.99
”முழவு தோளென்னை” –புறம்.88.6
முரசம்
முரசம்
அமைந்த வித்த்தினைப் பல சங்கப் பாடல்களும் அறிவிக்கின்றன.
”கொல்லேற்றுப் பைந்தோல் சீவாதுபோர்த்த
மாக்கண் முரசம்” - மதுரை.732-733
”விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்” –புறம்.63:7
”சிலைத்தார் முரசம்” –புறம்.36:12
முரசத்தின் ஒலி இடி முழக்கத்திற்கும், கடலொலிக்கும், அருவி ஒலிக்கும்
உவமிக்கப்படும். இதனை,
”முரசதிர்ந்தன்ன விண்குர லேற்றொடு ” –குறிஞ்சி.49
”அருவி முழவின்” -நற் 176:9
என்னும் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
போர்க்களங்களிலும்
முரசங்கள் முழங்கின. முரசங்கள் காலையில் இயம்புகின்றமையைச் சங்கப் பாடல்கள் சாற்றுகின்றன.
”படுகண் முரசங் காலையியம்ப” - மதுரை.232
”இமிழ் முரசிரங்க” - மதுரை.672
பதலை
பதலை
இருந்தமையைச் சங்க இலக்கியகளால் உணரலாம்.
”பதலை ஒருகண் பையென வியக்குமின்” –புறம்.152:17
என்னும் புறநானூற்றடியாலும்,
”நொடிதரு பாணிய பதலை” – மலைபடு.11
என்னும் அடியாலும்,
”பதலைப்பாணப் பரிசிலர்” –குறுந்.59:1
என்னும் குறுந்தொகை அடியாலும்
பதலை என்னும் இசைக்கருவி இருந்தமைத் தெளிவாகும்.
தொண்டகம்
தொண்டகப்
பறை கொண்டு புள் ஒப்பினமையைக் குறுந்தொகை சாற்றுகிறது.
”குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது
பைந்காள் செந்தினைப் படுளி ஒப்பும்” –நற்றிணை.164.164:4-6
தொண்டகப் பறையின் தாளத்திற்கேற்ப
ஆடவர் பெண்டிரோடு கலந்து தெருக்களில் ஆடுவர் என்பதை அகநானூறு குறிக்கின்றது.
”கறங்கு வெள்ளருவி பிறங்குமலைக் கவா அன்
தேங்கம ழிணர் வேங்கை கூடித்
தொண்டகப் பறைச்சீர் பெண்ரோடு விரைஇ
மறுகிற் றூங்கும்” -அகம்.118:1-4
ஆகுளி
மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்
புறநானூறு முதலிய நூல்களில் காணப்படும் சிறுபறை, இதன் ஒலியினையும் ஒலிக்கப்படும் விதத்தையும்,
”நுண்ணி ராகுளி யிரட்ட” -மதுரை.605:606
”......
......ஆகுளி கடுப்பு
குடிஞை யிரட்டு நெடுகலை யடுக்கத்து” – மலைபடு.140:141
என்பன காட்டும்.
எல்லரி
மலைபடுகடாம்
குறிக்கும் சிறிய பறை. விளக்கம் பொருந்திய தாளத்தைக் கொண்டு ஒலிக்கும் வலிய வாயையுடையது
எல்லரி. இதனை,
”கடிகவர் பொலிக்கும் வல்யெல்லரி” –மலைபடு.10
என மலைபடுகடாம் குறிக்கின்றது.
தடாரி
தடாரி
என்பது கிணைப்பறை,
”அரிக்குரற் தடாரி” - புறம், 390:8
எனப் புறநானூற்றாலும்,
”அரிக்குரற் றடாரியின யாமை மிளிரி” – புறம், 240:4
‘மதியத்தன்னவென் னரிக்குரற் றடாரி” –புறம்
249:4
என்னும் புறநானூற்றடிகளாலும்,
”பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக்
கைக்கச
டிருந்த வென் கண்ணகன் றடாரி” - பொருந.69.70
என்னும் பொருநராற்றுப்படை
அடிகளாலும் சங்க காலத்தில் தடாரிப்பறை இருந்தமை தெளிவாகிறது.
குழல்
சங்க கால இசைக்கருவிகள் ஒன்று. தாளவறுதியையுடைய
குழலோசையின் தாளத்திற்கேற்ப மகளிர் ஆடுவர். இதனை,
”அறற்குழற் பாணி தூங்கு யவரொடு”
என்னும் சிறுபாணாற்றுப்படை
அடி உணர்த்தி நிற்கிறது.
பாட்டை சுருதி குன்றாமற் கைக்கொண்டு நிற்கும்
தன்மை வாய்ந்தது குழல் என்பதை மலைபடுகடாம் புலப்படுத்துகிறது.
”விளிப்பது கவருந் தீங்குழல்” மலைபடு.8
குழலால் எழுப்பிய
பாலைப்பண்ணை,
”குழலி வின்றீம் பாலை” - பெரும்பாண்.179-180
எனப் பெரும்பாணாற்றுப்படை
குறிப்பிடுகிறது.
குழல் சித்திரிக்கப்பட்டிருக்கும் நிலையினைப்
பெரும்பாணாற்றுப்படை வரிகள் சித்திரிக்கின்றன.
”அந்நுண விர்புகை கமழக் கைம்முயன்று
ஞெலிகோற்
கொண்ட பெருவிறன ஞெகிழிச்
செந்தீத்
தோட்ட கருந்துனைக் குழலி
னின்றீம்
பாலை” –பெரும்பாண்.177-180
வயிர்
இது ஊதுகொம்பு என்று இக்காலத்தில் வழங்கப்படுகின்றது.
”வளைநரல வயிரார்ப்ப” –மதுரை.185
”வயிரும் வளையுமார்ப்ப” – முல்லை.92
”கான மஞ்ஞைக் கமஞ்குன் மாப்பெடை
அரியான்
றடைகண வயிரின் நானும்”
என்பனவற்றால்
அக்காலத்தில் வயிர் என்னும் இசைக்கருவி இருந்தமையையும் அதில் இசை இசைக்கப்பட்டமையும்
நன்கு தெளிவாகின்றன.
பாண்டில்
”மிக அருகிக் காணப்படும் கஞ்சதாளம்
நுண்ணுருக்
குற்ற விளங்கடர்ப் பாண்டில்” – மலைபடு.4
என மலைபடுகடாம்
பாண்டிலைப் பற்றிப் பேசுகின்றது. சங்கு என்பதும் அக்காலத்திலிருந்த இசைக்கருவிகளுள்
ஒன்றாம்.
இங்ஙனம் சங்க இலக்கியங்களின் மூலமும், தொல்காப்பியத்தின்
மூலமும், சங்ககாலத்தில் இசை பெற்றிருந்த சிறந்தப் புலனாகும்.
Comments
Post a Comment