Skip to main content

மருதம்

 

மருதம்

(Lagerstroemia Flos – Regina)

 

   சங்க இலக்கியத்தில் கூறப்படும் செடிகளுள் காந்தளைப் போல பல இடங்களிலும் பயின்று வரும் மரம் மருதமரமேயாகும். தற்காலத்தில் பெரும்பாலோருக்கு மருதம் என்ற மரம் எதுவென்பதோ, அழகிய பூவையுடையது என்பதோ தெரியாது. ஆனால் சங்க காலத்தில் இம்மரத்தை மிகவும் நன்றாக அறிந்திருந்தனர் என்பது சங்கப் பாடல்களில் தெளிவாகத் தெரிகின்றது. தற்காலத்தில் மருது, மருதம் என்றால் உடனேஅர்ஜீனம்என்ற மரத்தைத் தான் காட்டுவர்.

சங்க காலத்தில் வழங்கிய அழகிய பூவையுடைய மரத்தை மறந்துவிட்டோம். அதன் பெயரால் அழகற்ற மரத்தை, பொருத்தமற்ற மரத்தை அழைக்கிறோம். தமிழ்நாட்டில் கருமருது, வெள்ளை மருது, கலிமருது என்று பல மருது மரங்கள் மக்களிடையே வழங்குகின்றன. இவையெல்லாம் சங்க கால மருதமரமன்று. நிகண்டு ஆசிரியர்கள் காலத்தில் சங்க கால மருதம் மறக்கப்பட்டுவிட்டது. சங்கப்பாடல்களில் கூறப்பட்ட மருத மரம் தற்போது தற்போது மிக அரிதாகச் சிலரால் ‘பூமருது’ என்று வழங்குப்படும் மரமேயாகும். பூ வழகிய மருதத்தை பூமருது  என்றும் அதன் அடிமரங்களை கருமருது, வெள்ளை மருது என்றும் பிற மருதங்களை கருமருது, வெள்ளை மருது என்றும் அதன் அடிமரங்களின் நிறங்களை யொட்டி அழைத்தனர். மற்ற மருதுகள் மரப்பலகைக்குச் சிறந்தவையாகத் தற்காலம் இருக்கலாம். ஆனால் சங்ககால மருதம் பூவில் சிறந்தது. ஆகையால் தான் இக்காலத்தில் பூமருது என்றழைக்கின்றனர். இப்பூமருதே உண்மையான மருதம்.

பூமருதின் பூக்கள் சிறந்தவை. ஊதாநிறம் சிறிது கலந்து இளஞ்சிவப்பான பெரிய இதழ்கள் மருதம் பூவிற்கு உண்டு. இதன் பூ தொலைவிலேயே தெளிவாகத் தெரியும். கண்ணை ஈர்க்கும் மிக அழகு வாய்ந்த பூக்கள். ஆறு சிவந்த இதழ்கள் ஏந்திய தட்டுக்கள் போலத் தோன்றும். ‘செவ்வீ மருதென்று’ சங்க நூல்களில் வழங்குவதிலிருந்து இது பச்சைகலந்த வெள்ளைப் பூவையுடைய அருச்சனமன்று என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ”முடக்காஞ்சி செம்மருதின்” என்று பொருநராற்றுப்படையில் மருதின் சிவந்தபூ குறிப்பிடப்படுகின்றது.

”ஐயவீ யன்ன சிறுவீ ஞாழல்

  செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்

 துறையணிந் தன்றவ ரூரே .....”

என்று வரும் குறுந்தொகைப் பாட்டில் மருதின் சிவந்த பூக்களிலிருந்து கீழே விழுந்த இதழ்கள் பரவிக் கிடந்ததே நீர்த்துறையை அழகு செய்வதாகக் கூறுவதைக் கவனிக்கவும். மருத மரங்கள் அழகு செய்த துறைகளை ”விரிபூம் பெருந்துறை”  ‘நீர்ப் பூந்துறை’ என்று சங்கப்பாடல்களில் அழைக்கப்படுவதிலிருந்தே மருதம்பூ நீர்த்துறையை அழகு செய்வதாக பழந்தமிழர் கருதினர் என்பது நன்கு விளங்குகிறது.

          ”...... ...........  ......திண்காழ்

          நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை

          தேங்கமழ் மருதினர் கடுப்பக் .......”

என்று வரும் திருமுருகாற்றுப்படை வரிகளிலும் இளஞ்செந்நிற மூட்டப்பட்ட சந்தனக் குழம்பு மருத மலர்க்கொத்தை ஒத்திருப்பதாகக் கூறுவது கவனிக்கத் தக்கது. மொக்கின் புறவிதழ் நீலங்கலந்த பச்சையாக இருக்கும் என்று கூறுவதையே ‘கருந்தகட்டு உளைப்பூ’ என்ற வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதில் ‘உளைப்பூ’ என்று கூறுவதைக் கவனிக்க வேண்டும். இதற்குப் பொருள் மேலில் துய்யினையுடைய பூங்கொத்து என்று கூறப்பட்டிருக்கின்றது. மகரந்தத் தூள்கள் நிறைந்து வெளியே தூயபோல் இருப்பதையே உளைப்பூ என்ற சொல் உணர்த்தகின்றது.

          ”உளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்கும்”

என்ற ஐங்குறுநூற்று வரிகளிலும் ‘உளைப்பூ’ மருதத்திற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோலப் பாதிரிக்கும் ‘உளைப்பூ’ இருப்பதாகச் சங்கப் பாடலில் கூறப்படுகின்றது.

சங்க நூல்களில் மருதம்

   சங்க நூல்களிலே பலவிடங்களில் மருதமரம் நீர்நிலை அருகாமையிலும் ஆற்றோரங்களிலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

          ”அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்

           துறையணி மருது தொகல்கொள வோங்கி” (அகம்,97)

        ”முடமுதிர் மருதத்துப் பெருந்துறை”  (ஐங்குறுநூறு,31)

        ”துறைநனி மருத மேறித்” (பதிற்றுப்பத்து,27)

        ”திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை” (கலி,27)

        ”வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை” (சிலம்பு,72)

        மருதமரம் ஆற்றருகே இயற்கையாகவே பெரிதும் காணப்படும் என்று செடி நூலில் கூறப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். சங்க நூல்களில் மருதம் ஆற்றருகே, துறையருகே காணப்பட்டதாகத் தெளிவாகப் பலவிடங்களிலும் கூறப்பட்டிருப்பது உண்மையான செய்தியாகும். சங்க காலத்திற்குப் பின் வந்த தேவார காலத்திலும் மருதமரங்கள் நீர்த்துறைகளில் சூழலாகக் காணப்பட்டன என்பது ‘திருமருத நீர்ப்பூந்துறை’ என்றும் ‘திருமருதமுன்றுறை’ என்றும் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. மரங்களில் திரு என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. ‘திரு’ என்றால் ‘அழகு, பெருமை, மங்களம்’ என்ற பலப் பொருள்களையும் தாங்கிவரும் சொல்லை தாங்கிவரும் சொல்லை மருதமரம் அக்காலத்தில் எந்த அளவு மதிக்கப்பட்டது என்பது தெரிகிறது.

     வயலும் வயல் சூழ்ந்த இடமும், மருதம் என்பது தெரிந்ததே. ‘வயலுழை மருதின்’ (புறம், 52) பெயரால் வயல் சூழ்ந்த இடத்திற்குப் பெயரிட்டனர். மருதத்திற்கும் நீர் சூழ்ந்த கழனிக்கும், பழனத்திற்கும் உள்ள தொடர்பை அழகுறப் பதிற்றுப்பத்துப் பாடல் விளக்குகின்றது.

          ”ஒலிதெங்கி ணிமிழ் மருதிற்

           புனல்வாயிற் பூம்பொய்கைப்

          பாடல் சான்ற பயங்கொழு வைப்பின்

          நாடுகவி னழிய நாமந் தோற்றி” (பதிற், 15)

மருத மரத்தோடு தொடர்புபடுத்தியே பொய்கையும் துறையும் புனலும் வெள்ளமும் கூறப்படுவதையும் நோக்கும் பொழுது வயலும் வயல் சூழ்ந்த இடமும் மருதம் என்று பெயரிடப்பட்டது. ஆற்றங்கரையோரம் வயலும் தோட்டமும் தோன்றியதனால் மருதத்திணையாயிற்று.

       ஆற்றங்கரையோரத்திலே தோன்றிய பண்பாட்டை நாகரீகத்தை ஆற்றங்கரையருகே, ஆற்றின் துறையருகே காணப்பட்ட அழகிய பூவையுடைய மரத்தின் அல்லது பூவின் பெயரால் அழைத்தது பழந்தமிழரின் திண்ணிய அறிவையும், நுண்ணிய அழகுணர்ச்சியையும் தெளிவாகக் காட்டுகிறது. இந்த மருதமரத்தையே சாலையோரங்களிலம், நீர்நிலையருகிலும், சோலைவளங்களிலும் வளர்த்து நகருக்கு அழகூட்டலாம் என்ற கருத்தை 2000 ஆண்டுகளுக்குப்பின் தற்காலத்து நகர அமைப்பாளர்களும் கூறுகிறார்கள். இதிலிருந்து நகரத்திற்கு அழகூட்டத் தக்கதாகத் தற்காலம் கருதப்படும் மரத்தின் பெயரால் நாகரீகத்திணைக்குப் பெயரிட்டதன் பொருத்தம் நன்கு விளங்கும்.

          மருதம் மிகச் சிறந்த மரமாகக் கருதப்பட்டதால் இதன் பெயரால் ஊர்களும் ஆறுகளும் இருந்தன. செந்தமிழ் நிலத்தின் தெற்கெல்லையாக மருதயாறு கூறப்படுகின்றது. மாங்குடி மருதன், மருதனிள நாகனார், மருதங்கிழார் என்று புலவர்கள் சங்க காலத்தில் இருந்தனர். மருதன், மருதி என்ற பெயர்களும் சங்க காலத்தில் வழங்கி வந்தன. இடைமருதில் இருந்த ஈசன் பெயரே இடைமருதன் என்று வழங்கப்பட்டது.

பார்வை நூல்

1.  சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் – திரு.பி.எல்.சாமி, கழக வெளியீடு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...