புறநானூற்றில்
வான நூலறிவுச் சிந்தனைகள்
புலவர்கள் வானநூலறிவிலும் சிறந்து விளங்கினார்கள்.
”தமிழரின் வான நூலறிவு மிகவும் சிறப்புமிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.”
(சிராஜ் உன்னிசா நாசர், தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்.ப.17) என்னும்
கூற்று இங்கு சிந்திக்கத்தக்கது.
இயற்கையில் தோன்றும் மாற்றங்களை நன்குணர்ந்து
வானத்தை நோக்கிப் பார்த்து மழை பெய்யும் காலம் முதலியவற்றைக் கண்டறிந்தனர். நாட்களில்
சில நல்ல நாட்களென்றும் சில கெட்ட நாட்களென்றும் அறிந்தனர். ஒவ்வொரு நாளிலும் விண்மீன்களும்
கோள்களும் நிற்கும் நிலைக் கண்டு இதனைக் கணித்தனர்.
”செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ்ஞா
யிற்றுப் பரிப்பும்
பரிப்புச்
சூழ்ந்த மண் டிலமும்
வளி
திரிதரு திசையும்
வந்து
நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து
அறிந்தார் போல” (புறம்.30:1-6)
என்ற வரிகளில்
ஞாயிறு செல்லும் வானவழியையும், காற்று இயங்கும் திசையையும், ஓர் அடிப்படை இன்றி நிலைபெற்றிருக்கும்
ஆகாயத்தையும் அவற்றின் எல்லையளவும் சென்று நேரில் அளந்து அறிந்தவரைப் போல ஒவ்வொரு நாளும்
இத்துணை அறிவுடையன என்று ஆராய்ந்து திடமாகச் சொல்லும் ஆழந்தகன்ற அறிவு பெற்றவர்களாக
இருந்தனர்.
பறம்பு நாட்டிலுள்ள நீர்ச்சுனைகள் வானத்தில்
கண்ணுள்ள மீன் போன்றவை (புறம்.109) வானம் பல மீனையும் பூக்கும். (புறம்.129)
வட்ட வடிவாய் உள்ள சந்திரனைச் சுற்றி நட்சத்திரங்கள்
இருப்பதைப் போல பெரிய பொன்னால் ஆன உணவுக் கலத்தைச் சுற்றிலும் சில சிறிய உணவுப் பொன்
கலங்களை வைத்து உண்ணச் செய்வான் குமணன். (புறம்.160) வான் மீன் நாள் மீன். கோள் மீன்
என இருவகைப்படும்.
நாள் மீன்:
நட்சத்திரம் (Stars)
இயற்கையான ஒளியுடையவை நாள்மீன். பாண்டியன்
நெடுஞ்செழியனே உன் வாழ்நாள் நின்று நிலைக்கட்டும். நில்லாது பட்டுப் போவதாக நின் பகைவருடைய
நாளாகிய மீன் எனக் கூறுவதை,
”நின்று நிலைஇயல் நின்றாண்மீன்: நில்லாது
படா அச் செலீ இயர் நின் பகைவர் மினே” (புறம்.பா.24:24-25)
என மாங்குடிக்கிழார்
புலப்படுத்துகின்றார்.
கோள் மீன்:கோள்-கிரகம்
(Plant)
கோள் மீனாகிய திங்கள் ஞாயிற்றோடு, பொருந்துவதும்
பிரிந்து நேர் எதிர்ப் பக்கத்தை அடைவதும் வழக்கம். அவ்வாறு நடக்கும் போது அதன் ஒளி
நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகக் காணப்படும். திங்கள் வளர்கையில் 15 நிலைகளை
அடைவது போல் தேய்கையிலும் 15 நிலைகளை அடைகிறது. இக்காட்சியை,
”மாசு விசும்பின் வெண்டிங்கள்
மூவைத்தான்
முறை முற்ற” (புறம்., பா.148:2)
என்று கோவூர்க்கிழார்
குறிப்பிடுவார்.
”எட்டாம் நாட் பிறை, எண்ணாட்டிங்கள்”
(புறம்.பா.148:2)
எனப்படும்.
குளக்கரை எட்டாம் திங்கள் போல் வளைத்திருந்தது எனக் குறிப்பிடுகின்றார்.
பௌர்ணமி சந்திரனின் வெண்கொற்றக் குடைக்கு
உவமையாகக் கூறுகின்றார். (புறம்.3) நிலவொளி குளிர்ச்சி பொருந்தியதாக இருப்பதைப் போல
அரசனின் வெண்கொற்றக் குடை மக்களுக்குக் குளிர்ச்சி தர வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.
வெள்ளி மீன்
வெண்மை நிறமுடையது வெள்ளியாகும். வெள்ளியாகிய
மீன் வானத்தில் தோன்றும்.(புறம்.385)
”திங்களின் நிறைவொளி மறைய வெள்ளியாகிய
விண்மீன்
எருந்து
விளங்க”
(சு.வித்யானந்தன்,
தமிழர் சால்பு, ப.295) என்பது திருத்தாமனார் கூற்று.
வற்கடம்
வெள்ளியாகிய மீன் தெற்கே விலகி இருப்பது
மழை இன்மைக்கு அறிகுறியாகும்.
”வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம்
வாடிய பயனில் காலை” (புறம்.பா.338)
என்ற வரிகளில்
கூறுகின்றார். அவ்விதமே தூமம் என்னும் வால் வெள்ளி தோன்றுவதும், சனி என்னும் கோள் புகைவதும்
தீய அறிகுறிகளாக்க் கருதப்பட்டன.
எரிமீன்
ஞாயிறு வேறுபடத் தோன்றுதலும், எரிகொள்ளி
விழுதலும் தீமையின் அறிகுறியாகக் கொள்ளப்பட்டன. அகன்ற இவ்வுலகம் மழையில்லாமல் வெம்மை
அடைந்து வாடினாலும் வானகத்தே எரிமீன் மிகுதியாகத் தோன்றிடினும், குளமீனும் தாள் மீனுமாகிய
விண்மீன்கள் எரிந்து தோன்றுவதை,
”அகன் ஞாலப் பெரிது வெம்பினும்
மிக
வானுள் எரி தோன்றினும்
குள
மீனோடும் தாள் புகையினும்” (புறம்.பா.395:33-35)
என்ற வரிகள்
உலகக் கேட்டிற்கு அறிகுறியாகக் கூறப்பட்டுள்ளன.
புறம் 229 என்ற பாடலில் அக்காலக் கணியரின்
திறன் நன்கு புலப்படுத்தும். பங்குனி மாதத்தின் முதற் பதினைந்தில் கார்த்திகை நாளில்
நிறைந்த இருட்டில் உத்திரம் உச்சியிலிருந்து சாய, மூலம் அழ, மிருகசீரிடம் மறைய ஒரு
மீன் வடக்கும் கிழக்கும் போகாமல் இடை நடுவே தீ பரக்க விழுந்தது. இதைக் கண்ணுற்ற கூடலூர்
கிழார் என்னும் புலவர், யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை அதன் ஏழாம் நாள் இறப்பான்
என எண்ணினார். அவர் எண்ணியவாறே அரசன் இறந்தான். இதிலிருந்து அக்காலத் தமிழரின் கல்வி
மற்றும் வானநூல் அறிவின் மேம்பாட்டினை அறிந்து கொள்கிறோம்.
பார்வை நூல்
1.
முருகேசன்.க.முனைவர்
– சங்க இலக்கியத் தேனமுதம், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை -600 004.
Comments
Post a Comment