Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

திருவையாறு சென்ற அனுபவங்கள் (நூல் வெளியீட்டு விழா)

 

திருவையாறு சென்ற அனுபவங்கள்

(நூல் வெளியீட்டு விழா)

 

            திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல்சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் எனும் தலைப்பில் வெளியானது. அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம்  கொள்கிறேன்.

          திருச்சியிலிருந்து நானும், முசிறி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள், மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம். நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம்.





திருமழப்பாடி

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோயில், தேவாரப் பாடல் பெற்ற 54-வது சிவத்தலமாகும். இங்கு மூலவர் வைத்தியநாதசுவாமியாகவும், அம்பிகை சுந்தராம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். நந்தி தேவர் திருமணத் தலமான இது, நந்தி கல்யாணம் மற்றும் மாசி மாத திருவிழாவிற்குப் பெயர் பெற்ற, சுந்தரரால் பாடப்பட்ட சிறப்புமிக்க பழமையான சிவாலயமாகும்.

பனை மரம் தல விருட்சமாகவும், கொள்ளிடம் ஆறு, லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாகவும் உள்ளன.




திருவையாறு ஐயாறப்பர் கோயில்

திருவையாறு ஐயாறப்பர் கோயில்  என்ற கோயில் திருவையாற்றில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது.  இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்றத் தலமாகும். அதோடு மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டத் திருவாசகம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று எனும் பெருமையைக் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 51வது தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், இறைவியின் பெயர் அறம்வளர்த்தநாயகி (வடமொழியில் தர்மசம்வர்தினி). இத்தலத்தில் தான் சிவபெருமான் திருநாவுக்கரசருக்குத்  திருக்கயிலாய காட்சி கொடுத்தருளினார் என்பது நம்பிக்கையாகும்.



திருவையாறு ஐயா கல்விக் கழகம், ஔவை அறக்கட்டளை

            காலை 11 மணிக்கு நூல் வெளியீட்டு விழா திருவையாறு, ஔவைக் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை  வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலியா தொல்காப்பிய மன்றம், திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் ஔவை அறக்கட்டளை இணைந்து நடத்தும் நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு முடிந்தது. மதிய உணவினை ஔவை அறக்கோட்டத்தில் சாப்பிட்டோம். பின் நூல்கள் 50 படிகள் பெற்றுக் கொண்டு கும்பகோணம் கோயில் பார்க்கச் சென்றோம்.



 கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18(1) இன் படியும் அரசு ஆணை எண். 219,சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள் சரணாலயம் 453.71 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க அறிவிக்கப்பட்டது . இச்சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். இந்த ஏரி, செப்டம்பர் மாதம் முதல் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெறுகின்றது. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும் கூடுதலாக நீரைப் பெறுகிறது.

இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும்.



ஆதி கும்பேஸ்வரர் கோவில்

கிழக்கு நோக்கிய ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் மூன்று பிரகாரங்களைக் கொண்டது. அதன் பிரதான கோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டுள்ளது. நூற்றி இருபத்தியெட்டு அடி உயரத்தில் உள்ளது.சிவன் மற்றும் பார்வதி தேவி சன்னதிகள் உள்ளன. இங்கு கிராத மூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. லிங்கம் மணலால் ஆனது என்பதால் அதன் அடிப்பகுதியான ஆவுடைக்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்தின் மீது எப்போதாவது ஒருமுறை புனுகு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. லிங்கம் பெரிய அளவில் சாய்ந்த நிலையில் உள்ளது. அது எப்போதும் தங்கக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.

இராமசாமி கோவில் சாரங்கபாணி கோவில்

கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக்கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். சோழர்களால்  கட்டப்பட்டது. இக்கோவிலின் கலைநயம் மிகுந்த சிற்பங்கள், தூண்கள் கொண்ட மண்டபங்கள் மற்றும் கோபுரங்கள் ஆகியவை தஞ்சை நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டவையாகும்.

தாராசுரம்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில்கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில்பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.




                                        

                                                                புற்றுக்கோயில்


நிறைவாக,

            திருவையாறு நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்றோம். அப்பொழுது அருகில் கோயில்களையும் தரிசித்து வந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அதன் சிறப்பையும், அழகையும் காணும்போது கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தாதி இன்பம் அளிக்கிறது. அன்றைய நாள் மிகவும் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது. அந்த நிகழ்வை பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

 




Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...