சிரிப்பே
மருந்து!
ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல்நலமும் பாதிக்கத் தொடங்கும். மனஇறுக்கம், மனச்சோர்வு,
மன உளைச்சல், மனப்புழுக்கம் போன்றவற்றிற்கு மா மருந்தாக இருப்பது சிரிப்பு. வாய் விட்டுச்
சிரித்தால் நோய் விட்டுப் போகும்.
சிரிப்பின் வகைகளாக நமுட்டுச் சிரிப்பு, வெடிச்சிரிப்பு, புன்சிரிப்பு, வெறிச்சிரிப்பு,
கபடச் சிரிப்பு, அசட்டுச்சிரிப்பு, ஆணவச்சிரிப்பு, அகந்தைச் சிரிப்பு, கள்ளச்சிரிப்பு,
காதல்சிரிப்பு என்று பலவாறாகக் கூறப்பட்டாலும், மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்புதான்
சிரிப்பு.
நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்புப் பயன்படுகிறது.
சிலரது நகைச்சுவை, சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும்.
சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கக் காணலாம். நகைச்சுவையினால் ஏற்படக்
கூடிய சிரிப்பு மனதுக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு
ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது.
உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
அதற்கு CGRP என்று பெயரிட்டுள்ளார்கள். இது உடம்பிலுள்ள நோயெதிர்ப்புச் சக்தியாகச்
செயல்படுகின்ற செல்களை ஊக்குவிக்கிறது.
மனத்தில் உண்டாகும் சிரிப்பினால் நரம்புகள் அதிர்கின்றன. அந்த அதிர்வினால்,
CGRP என்னும் ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்கிறது.
மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்’ – ஏ என்னும்
நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால் பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள்,
உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.
கொழுப்பின் மிகுதியினால் மாரடைப்பு என்னும் நோய் மரணத்தைத் தருவதாக இருக்கிறது.
அவ்வாறு ஏற்படாதிருக்க நாள்தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரம் சிரித்துப்பழக வேண்டும்.
நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டுச் சிரித்து
வாழவேண்டும்.
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படும் வெள்ளை அணுக்களுக்கு மிகவும்
உறுதுணையாக இருப்பது சிரிப்பு. சிரிப்பினால் வெள்ளை அணுக்கள் அதிகளவு உற்பத்தி செய்கின்றன.
சிரிப்பினால்,
·
இரத்தம் தூய்மை
அடைகிறது.
·
இரத்த அழுத்தம்
குறைகிறது.
·
நுரையீரல் நன்கு
செயல்படுகிறது.
·
என்சிபேலின்ஸ்
என்னும் ஹார்மோன் சுரக்கிறது.
·
ஸெப்டிக் அல்சர்
என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது.
·
மூளை நரம்புகள்
சிறப்பாக செயல்படுகின்றது.
நோய் வராமல்
தடுக்கவும், வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரிப்பு உறுதுணைபுரிகின்றது.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள்
வட்டம் அதிகமாக இருக்கும். உறவு அதிகம் இருக்கும்.
புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத்
தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது புன்னகை
தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல் உடல்நலத்துக்கு ஆன்மா வழங்கும்
புன்னகை முக்கியம்.
பார்வை நூல்
1.
உடல்நலம் காக்கும்
இயற்கை மருத்துவம் – இர.வாசுதேவன், நலம் -45 ஆழ்வார்பேட்டை, சென்னை – 18.
Comments
Post a Comment