பழந்தமிழ் இலக்கியங்களில்
திருமணம் முறைகள்
மணவாழ்க்கை, களவு வாழ்க்கை வழிப்பட்டது. ஒரு தார மணமே
(Monogamy) சங்க காலத்திய மணமுறையாகும். ஆயினும் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை மணக்கும் ‘பின்முறை வதுவை’ யையும் தொல்காப்பியர்
கற்பியலில் சுட்டுகின்றார். திராவிடப் பழங்குடி மக்களிடம் ஆடவன் பல பெண்களை மணத்தலும் (Polygamy), ஒருத்தி
பலரைக் கணவனாக்க் கொள்ளுதலும்
(Polyandry) இருந்து வந்துள்ளது. இது தொன்முறை வழக்காறு ஆகும்.
திருமணத்திற்கு
முன்னரே கொள்ளுதல் இருளர், தோடர், கோத்தர், குறும்பர், முதுவர், பழியர், ஊராளியர் முதலான திராவிடப் பழங்குடியினரிடம் காணப்படுகின்றது. களவு வாழ்க்கைக்குரியதாகத்
தொல்காப்பியர் ‘மெய்தொட்டுப்
பயிறல்’ ‘மெய்புறு புணர்ச்சி’ முதலான மெய்ப்பாடுகளைக்
கூறுவது இதற்குத் தக்கச் சான்றாகும்.
பெற்றோர்களால்
முடித்து வைக்கப்படும் மணமும், ஆண் தன் வீரத்தையும் ஆண்மையையும் காட்டி முடிக்கும் மணமே, விரும்பிய பெண்ணை
மணமுடிக்கப் பெற்றோர் ஒப்புக்கொள்ளாத போது அப்பெண்ணை உடன்போக்கில் மணத்தலும், பின்னர் அதனை
உலகிற்கு உணர்த்த பலரறி மணவினை நிகழ்த்தலும், ஆண் வீட்டார் பெண் கேட்டலும் ஆகிய மணவினைகள் தென்னகப் பழங்குடி
மக்களிடம் காணப்படுகின்றன.
ஆண்
தான் விரும்பிய பெண்ணை அடைய இயலாதபோது, தன்னுயிரை வதைத்துக் கொண்டு உயிர்விடும் ஆடவன் உண்டு. படகரிடம் இப்பழக்கம்
இருந்த்து. (Edgar Thruston. Ethmographic Notes in South India,
P.21). இத சங்க காலத்தில் நிலவிய மடலேறுதல் (குறுந்.17,32,173,152, கலி.58,138,139,140,141), வரைபாய்தல் (அகம்.322) ஆகிய நிகழ்வுகளோடு ஒப்பு நோக்கத்தக்கது. தாயும் தந்தையும்
உடன்பட்டுத் தலைவி விரும்பிய தலைவனுக்கு மணமுடிப்பது பற்றிய குறிப்பும் (குறுந்.51) காணப்படுகின்றது. இப்பழக்கம்
இன்றும் நீலகிரிவாழ் பழங்குடி மக்களிடம் உண்டு. மணமாவதற்கு முன்பே ஆண், பெண் வீட்டில் தங்குதலும் உண்டு. ஒத்த குலத்தில் மணம்பேசி முடித்தல் மரபாக இருந்து வந்துள்ளது. உறவு அல்லாத
நிலையிலும் காதல் மணம் நிகழ்ந்துள்ளது. தோடர், இருளர்களிடம் இம்முறை காணப்படுகிறது. தோடர் தங்களுடைய
குறிஞ்சிப் பூவையும் காதல் வாழ்க்கையையும் இணைத்துப் பாடியுள்ளார். (Emenv, Thoda song) பரிசம் போடுதல் நீலகிரி வாழ் பழங்குடி மக்களிடம் தொன்றுதொட்டு நிலவி வரும் பழக்கமாகும். சங்க இலக்கியத்தில்
இடம்பெறும் பரியம், பாசிலை விலை முதலானவற்றோடு இவற்றை இணைத்து (அகம்,90, புறம்,343) நோக்கலாம்.
பார்வை நூல்
1. கருப்பத்தேவன்.முனைவர்.உ, தமிழும் பிற துறைகளும்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை,
2019.
Comments
Post a Comment