ஒவ்வொருவருக்கும்
ஒரு கடமை
ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு தாய், தந்தை, நாட்டை
ஆள்பவர் என்று அனைவரும் தன் கடமைகளைச் செய்தால்
அந்தப் பிள்ளை நாட்டின் நல்ல குடிமகனாகவும், வீரனாகவும் திகழ்வான் என்பதை இப்பாடல்
உணர்த்துகிறது. அதுபோல நம் பிள்ளைகளுக்குக் கல்வியோடு நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கிக்
கொடுத்தால் அவன் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
புறநானூறு பா
எண் – 312
பாடியவர் –
பொன்முடியார்
ஈன்று புறந்தருதல்
என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல்
தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக்
கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்நடை நல்கல்
வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம்
உருக்கிக்
களிறு எறிந்து
பெயர்தல் காளைக்குக் கடனே.
பெற்று வளர்த்து ஆளாக்குவது தாயின் கடமையாகும். இப்படிப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளையைக் கல்வி கேள்விகளில் சிறந்த
சான்றோனாக்குவது தந்தைக்குரிய கடமையாகும். அவனுடைய போர்ப் பயிற்சிக்கு, வேல் வாள் முதலிய
ஆயுதங்களை வடித்துத் தருதல் கொல்லு வேலை செய்கிற கருமான்களுக்குரிய கடமையாகும். இப்படிச்
சான்றோனாகவும், வீரனாகவும் வரும் பிள்ளைகளை, நல் ஒழுக்கம், நற்செய்கைகளில் ஈடுபடச்
செய்து, அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டியது, நாடாளும் மன்னனுடைய கடமையாகும். ஒளிவீசும்
வாள்மோதும் போர்க்களத்திலே சென்று வீரப்போர் புரிந்து, பகைவர் யானைப் படையை வென்று,
வெற்றி வீரனாகத் திரும்புவது. நாம் வளர்த்த காளையின் கடமையாகும்.
Comments
Post a Comment