Skip to main content

‘அகல உழுவதிலும் ஆழ உழு’

 

‘அகல உழுவதிலும் ஆழ உழு’

 

          உழவுத் தொழிலின் முதல்படி நிலத்தை நன்கு உழுது சமன் செய்த பின்னரே மற்ற வேலைகள்! விதை நடுவது, களை எழுப்பது, நீர் இறைப்பது எனத் தொடரும். நிலத்தை உழுவதன் முதல்கட்டப் பணி எப்படி இருக்க வேண்டும். ‘அகல உழுவதிலும்’ – இச் சொல்லாட்சியைப் பாருங்கள் – எதையும் இப்படிச் செய்யாதே என்று நேரடியாகப் பட்டென்று நம்மைப் போல் சொல்லாமல் நயமாக எப்படிச் செய்தால் நலம் என்பதையும் இணைத்துச் சொன்ன பாங்கு நமது முன்னோர்களின் சான்றாண்மைக்குச் சான்றாகும்.

          ஏன் அப்படிச் சொன்னார்கள்? நாம் நீண்ட பரப்பரளவை மேலோட்டமாக உழுதால் மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நன்றாக, ஒன்றாகக் கலந்திருக்காது. பயிருக்குத் தேவையான உப்புச் சத்துக்கள் கிடைத்தால் தானே பயிர் நன்கு வளரும். அதிக நிலத்தை உழுது பெறும் பயனைவிடக் குறைந்த பகுதியை ஆழமாக நன்கு உழுதினால் பெரும் பயன் விளையும் என்று எவரும் புரிந்து கொள்ளக் கூடிய மேலோட்டமான கருத்து.

அன்றைய கல்வி முறை (ஆழ உழுதல்)

          ஆனால் இப்பழமொழியின் நுண்பொருள் கல்விக்கு என்பது நமக்குப் புரிய வேண்டும். இக்கால கல்வி முறையையும், அக்கால குருகுலக் கல்வி முறையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அக்கால கல்வி முறையில் வாய்மொழியாக்க் கற்றுத் தரப்பட்டது. குரு ஒரு முறை சொல்ல மாணவன் அதை மூன்று முறை திருப்பிச் சொல்ல, ஔவையின் ‘வைத்ததொரு கல்வி மனபழக்கம்’ என்ற கலை கைவரப் பெற்று அறிவும் சுடர் பிரகாசித்தது. வேதபாடங்கள் மட்டுமல்லாமல் இலக்கிய இலக்கண தர்க்க நூல்கள், எத்தனை ஆயிரம் பாடல்களாக இருந்தாலும் பிறர் சொல்லிக் கேட்டு, கேள்விச் செல்வமாகப் பெற்று நமக்கு ஏட்டில் எழுதி வைத்த உயில் இல்லா சொத்துக்கள் தான் நாம் இன்று எடுத்தாலும் இலக்கிய கருவூலங்கள்.

          மனப்பழக்கம் மட்டும் அல்ல. அதற்குத் தேவையான அடிப்படையான ‘ஆழ உழு’ என்னும் முதுமொழிக்கு ஏற்ற கல்விப் பயிற்சி. அந்தந்த வயதில் கற்க வேண்டிய நூல்களின் தரம், அளவு நிர்ணயிக்கப்பட்டு சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததும், பால் மணம் மாறா பிஞ்சு வயதிலேயே கல்விக் கூடம் அனுப்பி அதிகச் சுமையை சுமத்தாததும் தான்!

இன்றைய கல்வி முறை (அகல உழுதல்)

ஆனால் இன்றைய கல்வி முறை அதிகமான பாடங்கள், பாடநூல்களின் சுமை என கல்வியை அகலமாக உழுது கொண்டிருப்பதைக் காணலாம்.

அறியாத வயதில் அனைத்துக் கலைகள், பாடங்கள் கற்றுக் கொடுக்க எண்ணிடும் பெற்றோர். அந்தந்த வயதில், உடல் மனோ ரீதியான வளர்ச்சிக்கு சற்றும் பொருத்தமில்லாத பாடங்களைத் திணிக்கும் பள்ளிக் கூடங்களும், அவைகளின் பாடத்திட்டங்களும் சாட்சி. ‘கல்வி’ எனும் பயிர் ‘அகல உழுவதிலும் ஆழ உழு’ என்பதை மறந்த நிலை. அதனால் ”நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்களாய் பள்ளிகள் மட்டும் அல்ல, கோச்சிங் செண்டர்கள். கட்டணமில்லாத காலத்தில் இருந்த தரம் இன்று காணாமல் போனது.

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்தற்கிணங்க ஆன்றோர் சொன்ன அனுபவ மொழியான பழமொழியின் கருத்து மிகவும் நுட்பமானது. நமது கல்வித் திட்டம் ‘அகலமாக’ இல்லாமல் சற்று ஆழமாக இருந்தால் நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 பார்வை நூல்

1.  ஹேமா ராமானுஜம் – பழமொழி கட்டுரைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,2005.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...