என்றும் இளமையாக இருப்பதற்கு....?
வடக்கிருந்த கோப்பெருஞ் சோழனைக் காண சென்ற பிசிராந்தையாரிடம், ஆண்டுகள் பலவாகியும்
நரை நுமக்கு இல்லையே! – ஏன் என்ற வினாவுக்கு விடையாகப் பாடிய பாடல்.
பாடியவர் –
பிசிராந்தையார்
புறநானூறு, பாடல் எண் –
191
துறை – பொதுவியல்,
பொருண்மொழிக் காஞ்சி
யாங்காகியர் என வினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!
வாழ்ந்து பல ஆண்டுகளாகி வயது முதிர்ந்த நிலையிலும்
உமக்குத் தலை நரைக்காது இருக்கிறதே! இதற்கு என்ன காரணம்? என்று கேட்பீர்களானால், சொல்லுகிறேன்,
கேளுங்கள். பெருமை உடைய என் மனையாளுடன் என் பிள்ளைகளும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள்.
நான் நினைப்பது போலவே, தாங்களும், என் குறிப்பறிந்து,
வேலை செய்கிறவர்கள். என்னுடைய பணியாட்களும், நான் வாழும் நாட்டை ஆளும் அரசனும் யார்க்கும்
தீங்கு செய்யாத நல்லவன். மக்களை அன்போடு காப்பவன். அதற்கும் மேலாகக் கல்வி கேள்விகளில்
நிறைந்தும் மன மொழி மெய்களால் சிறந்தும் கொண்ட – உயர் கொள்கையாக உயிர் வாழும் அறிஞர்
பெருமக்கள் பலர் என் ஊரில் வாழ்கின்றனர்.
Comments
Post a Comment