Skip to main content

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

உணவே மருந்து! மருந்தே உணவு!

 

உணவே மருந்து! மருந்தே உணவு!

 

            ழங்காலத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும் எந்த மாதிரியான குணமுடையது என்பதை வகுத்து வைத்திருந்தனர். அதன்படி, தன்னுடைய உடல்கூறுக்குத் தகுந்தபடியும் எந்த உணவை எந்தப் பருவத்தில் சாப்பிட வேண்டும் என்கிற வாழ்வியல் முறைகளைப் பகுத்தாய்ந்து சித்தவைத்திய நூல்களிலும், பண்டைய இலக்கியங்களிலும் எழுதி வைத்துள்ளனர். கேழ்வரகு, சாமை, கொள்ளு, அவரைக்காய் ஆகிய இந்நான்கும் தமிழ்நாட்டின் பிரதான உணவு வகைகளாக இருந்ததாக புறநானூற்றுப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. பழந்தமிழர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள். இதனால் உணவே மருந்தாக அமைந்திருந்தது. அவர்களுடைய சமையலறையில் மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), மஞ்சள் போன்ற மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. உணவுப்பொருள் வேகும்போது அதன் சத்துக்கள் இழக்காமல் இருப்பதற்கு மஞ்சள்பொடி உதவுகிறது. மேலும் அது குடல் புண்ணை ஆற்றுவதோடு, கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
           விருந்தினர்களுக்கு கறிவேப்பிலை கரைத்த நீர்மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே வழங்கியிருக்கிறார்கள். விசேஷ நேரங்களிலும், விருந்தினர்களுக்கும் வாழையிலையில் உணவு பரிமாறி சாப்பிடும் வழக்கம் இருந்தது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கும் எல்லோருக்கும் ஏற்ற ஓர் உணவு என்று சாதாரண சோற்றையும், சின்ன வெங்காயத்தையும் தயிரில் ஊறவைத்து சாப்பிடுவதைக் கூறலாம். இந்த உணவோடு பச்சையான வெண்டைக்காயையும் சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டால்  ஆரோக்கியம் கிடைக்கும்.  உணவுக்கலவை விகிதம் நம் உணவினை அமிலவகை உணவுகள், காரவகை உணவுகள் என்று இரண்டு வகைப்படுத்துகிறோம். மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அமிலவகை உணவுகள் என்றும் நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை காரவகை உணவுகள் என்றும் வகைப்படுத்துகிறோம். நாம் சாப்பிடும் உணவுகளை 80% காரநிலை, 20% அமிலநிலை உணவுகளாக எடுத்துக்கொள்வதே சீரான உணவு செரிமானத்துக்கு உதவியாக இருக்கும். கறிவேப்பிலை, கடுகு, சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை 80% காரநிலையுடைய பொருட்கள். இதுபோன்று நாம் உணவில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் பல்வேறு மருத்துவச் சிறப்புகளை உடையது.
         உணவு செரிமானத்தின்போது வயிற்றில் சுரக்கும் நொதிகள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் தன்மையை சரியாக மாற்றும் உணவு பதார்த்தங்களை உடையதாகவே நமது உணவுமுறை அமைந்திருக்கிறது. உணவு உட்கொண்ட முறைகள் பழந்தமிழர்களிடத்தில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கமிருந்தது. அவர்கள் 12 முறைகளில் உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வகைப்பாடுகள் அவர்கள் உட்கொண்ட உணவுப் பொருட்களின் தன்மை, உண்ணும் முறை, சுவை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது.

·         அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.

·         உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.

·         உறிஞ்சல் - வாயைக் குவித்துக் கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.

·         குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.

·         தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.

·          துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்.

·         நக்கல் - நாக்கினால் துலாவி     உட்கொள்ளல்.

·         நுங்கல் - முழுவதையும் ஒரு வாயில்    ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளல்.

·         பருகல் - நீரியற் பண்டத்தை     சிறுகக் குடித்தல்.

·         மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளல்.  

·         மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்து நன்கு மென்று உட்கொள்ளல்.

·         விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளல்.

இப்படி உணவுப் பொருட்களை உணர்வுகளோடு இணைந்து பலவிதமாக உட்கொண்ட பாரம்பரியமுடையது. ஆனால், தற்போது அவசர கதியில் உண்ணுதல், கிடைத்ததை எல்லாம் தின்னுதல் என்ற பழக்கத்துக்கு ஆளானதால் பல ஆரோக்கிய பிரச்னைகளுக்கும் ஆளாகி வருகிறோம்.

 நல்லெண்ணெய் பயன்படுத்தியதற்கான காரணம் கெட்ட கொழுப்புகள். நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகமுடையது என்பதாலேயே அதற்கு இந்தபெயர் வந்தது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் நல்லெண்ணெயை உள்ளங்காலில் தேய்த்துவிட்டு சென்று படுப்பதால், கண்பார்வை தெளிவாக இருக்கும். அரிசி உணவு அளவோடுதான்அரிசியை அளவோடு உட்கொண்டு வந்த பண்பாடுதான் நம்முடையது. பெரும்பாலும் சிறுதானியங்களையும், காய்கறிகளையும் கொண்ட உணவுமுறையே நம்முடையது. விசேஷ தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்திருக்கின்றனர்.
           காலப்போக்கில் அந்நிய உணவு கலாச்சாரங்களால் அரிசி சாதம், இட்லி, தோசை என்று அளவுக்கதிகமாக அரிசி உணவை சேர்த்துக் கொண்டு இப்போது அரிசியே ஆபத்து என்று அலறும் நிலை வந்துவிட்டது. நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த சிறுதானிய உணவுப் பொருட்களின் பயன்பாடுகள் பெருமளவில் குறைந்துவிட்டது. பல தலைமுறைகளாக, பாரம்பரியமாக நமது உடல் பழகிவந்த உணவு பழக்கவழக்க முறைகளை சமீபத்திய 50 வருடங்களில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் செய்ததோடு, நம்மை நோயாளிகளாகவும் மாற்றிவிட்டது. பாரம்பரிய உணவுக்குத் திரும்புவோம் நாகரீகம் என்ற பெயரில், அந்நிய நாட்டு உணவு கலாச்சாரத்துக்கு அடிமையாகி, நாவின் ருசிக்கு மயங்கி, கண்ட வேளைகளில் கிடைக்கிற உணவுகளை உண்டு குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிற சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றை சமைத்து சாப்பிடுகிற பழக்கத்துக்கும் நாம் ஆளாகி வருகிறோம்.

நிறைவாக,

            கொரோனா காலத்திற்குப் பிறகு நமது உணவு பழக்கங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பழைய உணவு பழக்கத்திற்கு மாறிக் கொண்டுள்ளார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்விற்கு நாம் மாறினால் தான் புதுப்புது நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இனி நாம் நம் முன்னோர்களின் உணவுமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்றி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்வோம். பிறரையும் வாழ வகை செய்வோம்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...