இலக்கியத்தில் கருவுற்றப் பெண்களைப் பற்றிய குறிப்புகள்
கருவுற்றப் பெண்களின் வயிற்றில் ஐதுமயிர்
(பொருநர் ஆற்றுப்படை 6-7) என்ற ஒரு வகை முடி காணப்படும் என்றனர். இவர்கள் மண்ணையும்
புளிப்புச் சுவையுடைய பொருள்களையும் விரும்பி உண்பர் என்பதனை,
”...... ...... நின்நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுவனின் அல்லது
பகைவர் உண்ணா அருமண்ணினையே” (புறம்.20:13-15)
என்ற புறநானூற்றுப்
பாடல் பகுதியால் அறியலாம். ஆடவனுடைய உயிரணு காரத் தன்மையுடையது (Alkaline by nature)
என்றும் அது பெண்ணின் முட்டையோடு சேரும்பொழுது அதனை நடுநிலையாக்கவே கருவுற்ற பெண்கள்
புளிப்பு, உப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய பொருள்களை விரும்பி உண்கின்றனர் என்றும்
கூறுவர். உயிர் ஊக்கிகளின் (Hormones) சேர்க்கையால் வேதியியல் மாறுபாடு பெண்ணின் உடலமைப்பிலும்
உள்ளத்தின் போக்கிலும் ஏற்படுகிறது என்று இன்றைய மருத்துவ அறிவியல் கூறுகிறது. பெண்ணின்
உடற்கூறு அமைப்பு ஆட்வனிடமிருந்து வேறுபட்டது என்னும் அறிவியல் உண்மையை அக்காலச் சான்றோர்கள்
அறிந்திருந்தனர் என்பதை இப்பாடல் வழி அறியலாம்.
குறுந்தொகையில் கச்சிப்பேட்டு நன்னாகையாரின்
பாடலிலும் கருவுற்றப் பெண்
”அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே” (குறுந்.287)
தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! பன்னிரண்டு
மாதம் நிறை கருப்பம் தாங்கித் தளர்ந்து, நடக்க
முடியாமல், புளியங்காயைத் தின்பதில் விருப்பமுடைய, முதன்முதலாகக் கருப்பம் அடைந்த மகளிரைப் போல, நீரை முகந்து கொண்டு, வானத்தில் ஏற முடியாமல், அந்த நீர்ச்சுமையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, வளம் மிக்க பல மலைகளை நோக்கி, பெரிய
முழக்கத்தோடு மேகங்கள் எழுகின்ற கார்ப் பருவத்தை, இப்பொழுது
பார்த்த பிறகும், நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், வாராமல் இருப்பாரோ? வருவர்.
பார்வை நூல்
1. சங்க இலக்கியம் சில பார்வைகள் – சுப்பிரமணியன். முனைவர்
சி, பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை -600 108, முதல் பதிப்பு -2013.
Comments
Post a Comment