Skip to main content

கூடிப் பிரியேல்!

 

கூடிப் பிரியேல்!

 

           மனிதன் தன் அறிவின் ஆற்றல், அளவு, திட்பம், வலிமை, செயல் ஆகிய அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்ஙனம் அறிதலால் அவன் ஏற்கப் போகும் பணியும் அதன் மாண்பைப் பெறும்.

          தீயனவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். எவை எவை தீயன என்பது தெரிந்தால் அவற்றை இனம் கண்டு புறந்தள்ள ஏதுவாக இருக்கும்.

          அறிவே மனிதனுக்கு ஆன்ற துணை. அடக்கமே அவனை உயர்த்தும் ஏணி. ஆற்றலைப் பெருக்கி, சான்றோனாக்கி, சென்ற இடமெல்லாம் சிறப்பைச் சேர்ப்பது, ஆக்கம் அளிப்பது எல்லாம் அறிவினால் தான் நமக்கும் கிட்டும். ஆக்கம் இன்புற்று வாழப் பயன்படுகிறது. அறவழி ஆக்கம் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். நிலைத்த இன்பத்தையும் கொடுக்கும். உழைப்பை நல்கி ஊதியம் பெறுதல் உரிமையின் விழுப்பமன்றோ?

        கூடிப் பிரியேல் என்ற ஔவையின் வாக்கிற்கிணங்க, நம்பிக்கை என்பது நட்பின் காரணமாக ஏற்படுகிறது. நம்பினவரே கைவிட்டால் நம்மவர், நம்மோர் என்று இல்லாது போய்விடும். நாலடியாரில் நட்பின் பெருமையை நினைவுறச் செய்யும் பாடல்.

 ”இன்னா செயினும் இனிய ஒழிக, என்று

  தன்னையே தான்நோவின் அல்லது துள்ளிக்

 கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட

 விலங்கிற்கும் விள்ளல் அரிது” (நாலடியார்-6)

நட்பு என்பது நண்ணுதலால் வருவதாகும். நண்ணுதல் என்பது நாடுதலாகும். நாடி நம் மனத்தின் அன்பை  நாட்டிய பிறகு இடையில் பிணக்கு, இடக்கு, தவறு, துன்பம் எவரேனும் ஒருவர் இழைத்து விடுவாரானால் அதனை முன் வைத்துப் பிரிதல் கூடாது. துன்பம் செய்தாரைக் கடிந்து கொள்ளாமல் தன்னையே நொந்து கொள்தலே இனிய செயலாகும்.

          அவர்கள் செய்த துன்பத்தைப் பெரிதாக எண்ணாமல் அதுவும் நன்மைக்கே, இனியதே என்று பிரியாது இருக்க வேண்டும். நட்டாற்றில் விடுதல் போல் அந்த நட்பை முறித்துக் கொள்ளுதல் கூடாது. அத்தவறு இழைத்தவரே தம் பிழையை உணர்ந்து திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக இப்பண்பு அமையும்.

          காட்டில் வாழும் விலங்குகள் தவறு செய்து விட்டாலும் ஒன்றை விட்டு ஒன்று பிரிவதில்லை. தாம் இருக்கும் காட்டிலேயே கூடி வாழ்கின்றன. அவ்வாறு இருக்க நாம் நட்பைக் கைவிட்டுப் புறம் செல்லல் கூடாது. நம்பினோரைக் கைவிடல் ஆகாது. நம்பிக்கை என்பதே நட்பின் காரணமாக ஏற்படுகிறது.

          ஆகவே இன்னா செய்தாரை இனிய செய்தாராய் இன்னலையே இனியதாக மாற்றி எண்ணத்தால் உயர்வுக் கொள்தலே பொறுமையின் அழகாகும்.

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...