ஆள்பவர் சரியானால் ஆளும்
நாடும்
நலம் பெறும்!
அரசனை தேர் அல்லது வண்டியைச் செலுத்துபவனாகவும்
நாட்டைத் தேர் அல்லது வண்டியாகவும் உவமித்துள்ள சிறப்பு எண்ணி இன்புறத்தக்கது.
புறநானூறு
பாடல் எண் –
185
திணை – பொதுவியல்
துணை
பாடியவர் –
தொண்டைமான் இளந்திரையன்
”கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற்
சாகாடு உகைப்போன் மாணின்
ஊறின்று
ஆகி ஆறினிது படுமே
உய்த்தல்
தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ்
அள்ளற் பட்டு
மிகப்பல்
தீநோய் தலைத்தலைத் தருமே”
உருளையும், அச்சையும் சேர்த்து, உலகத்தில்
செலுத்துகிற நல்ல சகடம், அதை ஓட்டுகிறவன் செம்மையாக இருந்தால், அது ஓடுவது ஒழுங்காக
இருக்கும். தடங்கல் இல்லாமல் சீராகப் பயணமும் தொடரும். அப்படி இல்லாமல், அதைச் செலுத்துபவன்
சரி இல்லாதவனாக, அதை முறையாகச் செலுத்தும் வகை தெரியாதவனாக இருந்தால், அந்த வண்டி அன்றாம்
பகைச் சேற்றிலே அழுந்தும். மிகப்பல தீமைகள் மேலும் மேலும் வந்து சேரும். நாடும், நாட்டு மக்களும் சிறந்து வாழ நாட்டை ஆளும் மன்னன் நேர்மையான ஆட்சி நடத்த வேண்டும்.
Comments
Post a Comment