நல்லறம்
ஒன்றே நற்றுணை!
நாடாண்ட புகழும் தேடிக் கொண்ட செல்வமும்
உயிர்க்கு ஊதியமாகாது. செய்யும் நல்லறங்களின் பயனே இம்மைக்கும் மறுமைக்கும் இனிய துணையாகும்.
புறநானூறு –
பா.எண், 357
பாடியவர் –
புலவர் பிரமனார்
திணை – காஞ்சி
துறை – மறக்காஞ்சி,
பெருங்காஞ்சி
”குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்
பொதுமை
சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை
இன்ற ஆண்டிசி னோர்க்கும்
மாண்ட
வன்றே ஆண்டுகள் துணையே
வைத்த
நன்றே வெறுக்கை வித்தும்
அறவினை
யன்றே விழுந்துணை அத்துணைப்
புணைகை வீட்டோர்க்கு அரிதே துணையழத்
தொக்குயிர் வௌவும் காலை
இக்கரை நின்றியவர்த்து உக்கரை கொளலே”
சிறு சிறு குன்றுகளையும், சிறு சிறு குன்றுகள்
சேர்ந்த பெரிய மலைகளையும், தன்னோடு இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த மண்ணகம்,
எல்லோர்க்கும் பொதுவென்று சேர, சோழ, பாண்டிய மூவேந்தரும் தமக்கே உரியதென்று தனி ஆட்சி
செலுத்தி வந்தார்கள். வாழ்ந்தார்கள். வாழ்ந்த அவர்கள் வாழ்நாட்களும் கழிந்தழிய, அவர்கள்
சேர்த்த செல்வமும் அவர்களோடு போகவில்லை. அவர்களுடன் அவர்களுடைய மறுமைக்குத் துணையாக
போவதெல்லாம், அவர்கள் செய்த நல்லறமே, நல்ல செய்கைகளே ஆகும். உற்றார் சுற்றத்தார் கூடி
அழ எமன் உயிர் கவர்ந்து செல்ல வரும்போது, இவ்வுலகத்திலிருந்து, மேலான வீட்டுலகம் செல்ல,
பிறவிக் கடல் கடந்து கரையேறத் தெப்பமாகப் பயன்படுவது நல்லறமாகிய தெப்பமேயாகும். இந்தத்
தெப்பமாகிய துணையை நல்லறத்தை இழந்தவர்களுக்கு வானுலக வாழ்வு கிட்டாது.
Comments
Post a Comment