வீரத்
தாய்
இப்பாடல் வீரனைப் பெற்ற வயிறு புலியிருந்த
குகையென்று வருணிக்கும் பாடல். காவற்பெண்டு என்னும் பெண்பாற் புலவர் பாடியது.
புறநானூறு,
பாடல் எண் – 86
பாடியவர்- காவற்பெண்டு
திணை – வாகை
துறை – ஏறாண்
முல்லை
”சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு
உளனோஎன வினவுதி? என்மகன்
யாண்டுஉள
னாயினும் அறியேன்! ஓரும்
புலி
சேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற
வயிறோ இதுவே
தோன்றுவன்
மாதோ போர்க்களத் தானே!”
என்னுடைய இச்சிறிய வீட்டின் வாசலில் வந்து
தூணைப் பிடித்தபடி நின்று கொண்டு, ‘உன் மகன் எங்கே’ என்று கேட்கிறாயே! என் மகன் எங்கே
போயிருக்கிறான்? எனக்கே தெரியாது. நான் அறியேன்! ஆனால் ஒன்று நிச்சயம், நீ தெரிந்து
கொள்ள வேண்டும். புலி யிருந்த குகை அவனைப் பெற்ற என் வயிறு! எனவே அவன் புகழ் சிறக்கப்
போர்க்களத்துக்குத்தான் போயிருப்பான். புரிந்து கொள்.
Comments
Post a Comment