Skip to main content

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ‘திங்கள்’

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்திங்கள்

 

          வானில் அன்றாடம் காணக்கூடிய நிலவானது பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். நிலவினைத் திங்கள் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் கூறி வந்துள்ளனர். திங்களை வணங்கும் முறை பழங்காலம் முதல் இன்று வரை காணப்படுகின்றது. திங்கள் பால் போன்ற ஒளிக்கதிரை உணர்த்தி நின்றது. இன்பத்தையும் களிப்பினையும் தருவதால் மதி, திங்கள் என்றும் அம்புலி, குபேரன், அருச்சிகன், நிகாரகரன், இமகரன், ஆலோன், களங்கள், தண்சுடர், கலையோன், இராக்கதிர், தானவன், உடுபதி, அமுத கிரணன், இந்து, சோமன், பிறை, சசி, விது, நிலவு என வேறு பெயர்களிலும் நிலவு அழைக்கப்படுகிறது.

          சூரியனின் ஒளியில் சுமார் 7 சதவிகிதத்தை மட்டும் பிரதிபலிப்பதாலும் சராசரியாக 3,84,400 கி.மி தொலைவிலிருப்பதாலும் இவ்வளவு குளிர்ச்சி. ஆனால் சந்திரனின் மேற்பரப்பிலோ பகல்பொழுது வெப்ப நிலை கடுமையாக 100 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும். இரவுப் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 150 டிகிரி செல்சியஸாகக் குறைகிறது. பூமியை முழுமையாகச் சுற்றிவரச் சந்திரன் எடுத்துக் கொள்ளும் காலம் 27.33 நாட்கள். அதே அளவு நேரத்தில் தன் அச்சில் தன்னைத்தானே ஒரு சுற்றுச் சுற்றுகிறது. இதனால் தான் சந்திரனின் ஒரு பாதியை மட்டுமே எல்லா நேரங்களிலும் காண்கிறோம். ஏதேனும் ஒன்று மாறுபட்டிருந்தால் சந்திரனின் மறுபாதியையும் நம்மால் பார்க்க முடியும். 1959 – ஆம் ஆண்டு சந்திரனின் மறுபக்கத்தை படமெடுத்தனர். பூமியிலிருந்து நாம் காணும் அரைக்கோணத்தில் மட்டுமே 10,000 குழிகளைத் தொலைநோக்கி மூலம் காண இயலும். (ஐயம்பெருமாள்-2006:58)

          அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

           மறுஉண்டோ மாதர் முகத்து” (குறள்.1117)

என்ற குறளில் அறுவாய் என நிலவில் காணும் குழிகளைக் குறிப்பிடுகிறது. இதுபோன்றுமறுக்கள்பெண்கள் முகத்தில் இல்லை என்று புகழ்கிறது. மதியை காணும்போது கருநிறத் திட்டுகள் இருப்பதைக் காணலாம்.

          திங்களின் கூறு கலை (Phase) எனப்படுகிறது. இதனைப் பிங்கல நிகண்டு கலைச் சிறு திங்கள் (25) என விளக்குகிறது. அறிவுள்ளவர்களின் நட்டு வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே இருக்கும். அறிவற்றவர் நட்பு தேய்பிறை போல் தேய்ந்து கொண்டே இருக்கும் (குறள் – 782) என்று கூறுவதன் மூலம் திங்களின் செயல்பாட்டை பழந்தமிழர் அறிந்துள்ளனர் எனத் தெரிகிறது. திங்கள் என்பதை வடமொழியில்அஷ்டமிஎன்ற சொல்லால் குறிக்கிறது. எட்டு என்பதன் திரிபே எட்டு என்பதன் திரிபே அட்டமி.

  திங்களின் நிலைகுறித்து வடமொழியில் அதன் வளர்ச்சியினை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

         முதல் பிறை   - பிரதமை

         இரண்டாம் பிறை  - துவிதியை

         மூன்றாம் பிறை    - திரிதியை

         நான்காம் பிறை   - சதுர்த்தி

         ஐந்தாம் பிறை  - பஞ்சமி

         ஆறாம் பிறை  - சஷ்டி

         ஏழாம் பிறை    - சப்தமி

         எட்டாம் பிறை  - அஷ்டமி

         ஒன்பதாம் பிறை   - நவமி

         பத்தாம் பிறை  - தசமி

         பதினொன்றாம் பிறைஏகாதசி

         பன்னிரண்டாம் பிறை  - துவாதசி

        பதிமூன்றாம் பிறை  - திரியோதசி

        பதினான்காம் பிறை  - சதுர்த்தி

        பதினைந்தாம் பிறை  - பௌணர்மி

இவ்வாறு பிறைகளின் பெயர்களை வடமொழியில் குறித்துள்ளனர். எனினும் சிலப்பதிகாரத்தில்அட்டமிஎன்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் வளர்பிறையை அலர் தரு பக்கம் என்றும் தேய்பிறையை வழியது பக்கம் என்றும்எண்ணாட் திங்கள்என்றும் (பரிபாடல் – 11) சுட்டியுள்ளனர். இதன் மூலம் பழந்தமிழர்கள் நிலவின் பிறைகளுக்கு பெயரிடும் முறையை அறிந்து வைத்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அறநூல்களில்திங்கள்

          திங்கள் இருளைப் பகையென்று கருதி, போன வெளிச்சத்தைத் திரும்பவும் தோன்றும்படி நிலவொளியை வெளியிட்டது. (திணைமாலை.94) நிலவு மக்கள் வாழும் இடங்களில் ஒளி பரப்பினால்தான் நன்று. காட்டில் நில ஒளியை பரப்புவதால் பயன் இல்லை. உதவாத நண்பரைப் போன்றது காட்டில் நிலா ஒளிவீசுதல் என விவரிக்கிறது (பழ.210). புலையன், சந்திரன், சூரியன், நாய், எரிந்து விழும் நட்சத்திரம் என இவ்வைந்தும் அறிவுடையோர் எச்சிலுடன் பார்க்கமாட்டார். (ஆசார.6) வால் விண்மீன்கள் தோற்றம் பற்றியும், விண்கற்கள் வீழ்தல் பற்றியும் தமிழர்கள் நன்கு உற்று நோக்கியுள்ளமை அறியமுடிகிறது. இதன்வழி அக்கால மக்களின் வானியல் சிந்தனையை அறிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்

1.  சீ.கோகிலாபதினெண் கீழ்க்கணிக்கு நூல்களில் அறிவியல் சிந்தனைகள், ரோஸ் ப்ப்ளிகேஷன்ஸ், சென்னை -62, முதற் பதிப்பு செப்,2019.

 

 

         

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...