கணவன் மனைவியின் ஒற்றுமை சாதனம் -மகப்பேறு
இல்லறத்தில் வாழ்வோர்க்குப் புத்திரப்பேறு
ஒரு சிறந்த செல்வமாகக் கருதப்பட்டது. கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வளவு கடுமையான சச்சரவு
நேர்ந்தாலும் குழந்தைகளிருந்தால் அச்சச்சரவு தலைதூக்காது. அவ்விருவர்க்கும் குழந்தைகளே
சமாதானத் தூதர்களாய் நிற்கும். அவர்களுடைய பிணக்கு விரைவில் மறையும். இக்கருத்தமைந்த
பாடல் ஒன்று குறுந்தொகையில் காணப்படுகின்றது.
வெளியே சென்றிருக்கும் கணவன்மேல் மனைவி கடுங்கோபத்துடன்
இருக்கின்றாள். கணவனும் இதைத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு தந்திரம்
செய்தான். ”நாம் நேரே அவளிடம் போனால் அவள் நம்முடன் பேசமாட்டாள்” என்று நினைத்தே அவன்
அத் தந்திரத்தைக் கையாண்டான். பேசாமல் வீட்டுக்குள் புகுந்தான். அவன் கட்டிலிலே உறங்கும்
புதல்வனை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான். அதைக் கண்ட மனைவி, தானும் கட்டிலில் ஏறி
தன் கணவனுடைய முதுகுப் புறத்தை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள். இவ்வளவோடு இவர்கள்
பிணக்குத் தீர்ந்துவிட்டது.
”கண்டிசின் பாண! பண்புடைத் தம்ம!
மாலைவிரிந்த
பசுவெண் ணிலவில்
குறுங்கால்
கட்டில் நறும்பூம் சேக்கைப்
பள்ளி
யானையின் உயிரா அசைஇப்
புதல்வன்
தழீஇனன் விறலவன்
புதல்வன்
தாய் அவன்புறம் கவைஇ யினனே!”(குறுந், 359)
கணவன் மனைவிகளுக்குள்
ஒற்றுமை நிலவப் புத்திரப்பேறு ஒரு சாதனம் என்ற கருத்து இப்பாட்டில் அமைந்திருப்பதைக்
காணலாம்.
Comments
Post a Comment