உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!
செல்வம் இல்லாவிட்டால் இல்லறத்தை இனிது நடத்த முடியாது. ஒவ்வொருவரும் தாமே வருந்தி
உழைத்து பொருள் தேட வேண்டும். அந்தப் பொருளால் தாமும் இன்புற வேண்டும். பிறருக்கும்
உதவ வேண்டும்.
முன்னோர் தேடி வைத்திருக்கும் செல்வத்தைச்
செலவழித்துக் கொண்டிருப்போர், செல்வம் உள்ளவர் என்று சொல்லப் படமாட்டார். அவர் வறுமைக்கு
ஆளாவார். வறியவர்களின் இல்வாழ்வு, பிச்சையெடுத்து வாழ்வதைக் காட்டினும் இழிவான வாழ்வு.
இவ்வாறு முன்னோர்கள் சொல்லியிருப்பதை நமக்குத் தெளிவாகத் தெரியும்படி விளக்கியப் பிறகு
தான் பொருள் தேடப் புறப்பட்டுப் போனார். அவர் வாழ்க! என்றும் எமனைப் போலத் திரிந்து
கொண்டிருக்கின்ற – கொல்லுகின்ற வேற்படையை யுடைய மறவர்கள், வழியிலே ஒளிந்திருந்து வழிச்
செல்வோரைக் கொன்று பொருள் பறிப்பார்கள். முடை நாற்றத்தை விரும்பும் பருந்துகள், அப்பிணங்களை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். இத்தகைய பழமையான துன்பத்தையுடையது அந்த நீரற்ற வழி.
இவ்வழியாகத்தான் அவர் பொருள் தேடப் போயிருக்கின்றார்.
”உள்ளது சிதைப்போர் உளர்எனப்படா அர்,
இல்லோர்
வாழ்க்கை இரவினும் இழிவு, எனச்
சொல்லிய
வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர்;
வாழி, தோழி! என்றும்
கூற்றத்தன்ன
கொலைவேல் மறவர்,
ஆற்றிருந்து
அல்கி, வழங்கநர்ச் செருத்த
படுமுடைப்,
பருந்து பார்த்திருக்கும்
நெடுமூது
இடைய நீரில் ஆறே. (குறுந், 283)
இப்பாடல் பொருள்தேடப்
போயிருக்கும் தன் காதலனைப் பற்றித் தன் தோழியிடம் ஒரு தலைவி கூறுவது போலப் பாடப்பட்டது.
இப்பாடலின் வழி ஒவ்வொருவரும் தமது முயற்சியினாலேயே
பொருளீட்டி வாழவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துவதாகும்.
Comments
Post a Comment