நீர்
இறைத்தல்
வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு மேடான
பகுதிகள் மற்றும் கிணற்றிலிருந்து நீர் இறைக்க இன்றளவும் குறுநில விவசாயிகள் மரபு வழியான
தொழில் நுட்பங்களைக் கையாண்டு வந்தனர்.
ஏற்றங்கள்
நீர் இறைப்பதற்குப் பல ஏற்ற வகைகள் நாட்டுப்புறங்களில்
பயன்படுத்தினர். கையேற்றம் இரண்டுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு நீர் இறைக்கும் ஏற்றம்,
மாடுகளைப் பயன்படுத்தி நீர் இறைக்கும் கவலை ஏற்றம், இறவாப் பெட்டி ஏற்றம் என்று
பல முறைகள் உள்ளன.
i.
கை ஏற்றம்
வாய்க்காலில் மேடான பகுதியில் உள்ள நிலத்திற்குக்
கை ஏற்றம் எனும் தனி நபர் நீர் இறைக்கும் ஏற்றத்தினைப் பயன்படுத்தி வந்தனர். இரண்டு
கம்பங்களுக்கு இடையில் ஒரு புறம் நீர்ச்சாலினையும் மறுபுறம் பாறைக் கல்லையும் கட்டி
நீரை முகந்ததும் நீர்ச்சால் எளிதாக மேல்நோக்கிச் செல்லும். இவ்வாறு ஆறு அடிகள் இறவாப்
பெட்டி ஏற்றம் என்று பல முறைகள் உள்ளன.
ii.
ஆள் ஏற்றம்
இரண்டு அல்லது மூன்று நபர்கள் பார் எனப்படும்.
கட்டையில் ஏறிக்கொண்டு முன்னும் பின்னும் நடக்க நீர்ச்சால் கீழ்வரும் போது கீழே உள்ளவர்
நீரை நிரப்பி மேலே வாய்க்காலில் விடுவார். இப் பணியில் ஈடுபடும் போது கதைப்பாடல்கள்
மிகுதியும் பாடுவர். பாடலின் அளவு நீர்ப்பாயும் வயலின் அளவிற்கு ஏற்றவாறு அமையும்.
கவலை ஏற்றம்
மனிதர்களுக்குப் பதிலாக மாடுகளைப் பயன்படுத்தி
உருளைகளின் துணை கொண்டு நீரை இறைப்பர். இதனைக் கவலை ஏற்றம் என்று கூறுவர். இதற்குத்
தோலினால் செய்யப்பெற்ற பறிகள் எனப்படும் சால்கள் பயன்படுத்தப்படும்.
ஊற்றுமட்டை
கொடிக்கால் பாத்திகள் கிடங்குகள் எனப்படும்.
இதில் உள்ள நீரை இறைத்து கொடிக்கால் கொடியில் விடுவர். இதற்கு, ‘ஊத்துமட்டை’ எனப்படும்
நீர் இறைக்கும் கருவியைப் பயன்படுத்துவர்.
நீர்ச்சால்
அல்லது இறவாப் பெட்டி
இரண்டு நபர்கள் இரண்டு புறமும் நின்று கொண்டு
இறவாப் பெட்டி எனப்படும் நீர் இறைக்கும் கருவியைப் பயன்படுத்திக் கொண்டு வாய்க்காலிலிருந்து
சற்று மேடான பகுதிகளுக்கு இறைக்கின்ற மரபு இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
உருளை
இன்றளவும் நாட்டுப்புறங்களிலும் மற்ற இடங்களிலும்
பயன்படுத்தப்படும் கிணற்று உருளைகளும் நீர் இறைக்கப் பயன்படுத்தி வரும் நாட்டுப் புற
மரபுவழியான தொழில் நுட்பங்களில் ஒன்றாகும்.
பார்வை நூல்
1.
நாட்டுப்புறப்
பண்பாட்டுக் கூறுகள் – முனைவர் அரு. மருததுரை, இணைப் பேராசிரியர், அருணா வெளியீடு,
திருச்சிராப்பள்ளி, முதல் பதிப்பு – 2003.
Comments
Post a Comment