Skip to main content

நாட்டுப்புற மக்களின் தற்காப்புக் கலைகள்

 

நாட்டுப்புற மக்களின் தற்காப்புக் கலைகள்

          நாட்டுப்புற மக்களிடையே நிகழ்வில் பல தற்காப்புக் கலைகள் உள்ளன. இவை விழாக்காலங்களில் கோயிலின் முன்பு நிகழ்த்திக் காட்டப்படும். சில நேரங்களில் போட்டிக் கலையாகவும் அமைத்துப் பரிசுகளையும் வழங்குவர். சிலம்பம், சுருள், வாள், கத்தி, மற்போர், வர்மம், களரி பயிற்று போன்ற தற்காப்புக் கலைகள் நாட்டுப்புற மக்களிடையே தமிழகத்ல் நிகழ்வில் உள்ளன.

சிலம்பம்

          சிலம்பம் எனப்படும் சிலம்பாட்டத்தைப் பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் குறிப்பர். பொதுப் பெயராகச் சிலம்பம் என்ற சொல் வழக்கில் உள்ளது. தமிழர்களின் மரபுவழிப் பழமையான கலையாக விளங்குவது சிலம்பக்கலை. இத்தற்காப்புக் கலையினை ஊர்தோறும் நாட்டுப்புற இளைஞர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு வருகின்றனர்.

          இச்சிலம்பாட்டம் குச்சி விளையாட்டு, அலங்கார விளையாட்டு, சாதா பெருக்கம், கைவரிசைக் குச்சி, கோலாட்டம், இரட்டைச் சிலம்பம் என்றவாறு சிலம்பாட்டக் கலை விரிகின்றது.

          மேலும் தீப்பந்தம், ஒற்றைக்கை போத்து, இரட்டைக் கை போத்து, நட்சத்திரப் போத்து, சக்கரப் போத்து, சங்கிலிப் போத்து, சின்ன வட்டம் என்றவாறு சிலம்ப விளையாட்டில் தீப்பந்தங்களைப் பொருந்தி ஆடும் சிலம்பமும் களத்தில் உள்ளது.

          மான் கொம்பு, எருமைக் கொம்பு, யானைத் தந்தம் போன்றவற்றில் கைப்பிடியினை அமைந்திருப்பர். இதனை மகுடி என்பர். மகுடி எனும் கருவியைப் பயன்படுத்தி ஆடும் சிலம்பாட்டம் குறிக்கத்தக்கது. ஒருவர் சிலம்பு எனப்படும் கம்பினை வைத்துக் கொண்டு தாக்கவருபவரை எதிர்ப்பார். மகுடியை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு போரிடும் தற்காப்புக் கலையை மகுடி என்று குறிப்பிடுவர். இத்தகு ஆட்டங்கள் விழா நாட்களில் மக்களின் முன்பு நிகழ்த்திக் காட்டப்படும்.

சுருள் கத்தி

          சுருள் கத்தி எனும் கருவி 60 செ.மீ வரை நீளமும் 2 செ.மீ அகலமும் உடைய மெல்லியத் தகடுகளின் தொகுதியைச் சுருள் கத்தி என்பர். இதனைச் சுருட்டியும் வைத்துக் கொள்ளலாம். கையில் பிடித்துக் கொள்ள கைப்பிடி இருக்கும் கத்தியின் சுருளை நீக்கி மேலும் கீழும் வீசும்போது காற்றில் அச்சம் தரத்தக்க மிகுதியான ஒலியினை எழுப்பும். அதை சுழற்றும் போது எதிரிகள் ஆயுதங்களினாலோ, சிலம்பு, தடி, ஈட்டி, கல் போன்ற வற்றாலோ தாக்க இயலாது. தரையில் சுருள் கத்தி உரசுகிற நிலையில் தீப்பொறி பறக்கும். தற்காப்புக் கருவிகளில் சுருள்கத்தி வீசும்கலை குறிக்கத்தக்கது. இதனைக் கையாள்வதற்குக் கடுமையான பயிற்சி  தேவைப்படும்.

          சுருள்கத்தி வீசும் தற்காப்புக் கலையினை எதிர் எதிராக இருவர் சுருள் குத்திவீசல், சிலம்பினைப் பலர் சுழற்ற நடுவில் ஒருவர் நின்று சுருள் கத்தி வீசுதல் என்று இதன் ஆட்டம் மாவட்டந்தோறும் பலவகையாக அமையும். சிறந்தத் தற்காப்புக் கலையும் விழாக்காலங்களில் மக்களின் முன்பு பயிற்சிக்கலையாக நிகழ்த்திக் காட்டுவர். சிலம்புப் பயிற்சிக் கூடத்தில் இக்கலையும் பயிற்றுவிக்கப்படுகிறது.

வாள் பயிற்சிக்கலை

          பண்டைய போர்முறைகளில் ஒன்றான வாட்போர் இன்றைய தற்காப்புக் கலையில் மறையாது நாட்டுப்புற மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. ஒரு கையில் வாள் மறுகையில் தடுப்புக் கேடயம் என இரண்டு கைகளிலும் கருவிகளை ஏந்திக் கொண்டு போரிடுவர். இதில் ஒருவருக்கு ஒருவர், இருவருக்கு ஒருவர் என்றவாறு வாள்போர்க்கலை அமைகிறது. தென்மாவட்டங்களில் பெருவழக்காக வாள் பயிற்சிக் கலை, தற்காப்புக் கலை, சிலம்புப் பயிற்சி ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப் படுகின்றமை குறிக்கத்தக்கது. இந்தப் போர்க்கலை ஆட்டமும் விழாக்காலங்களில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

கத்தி வீசுதல்

          கத்தி எனப்படும் குறுவாளின் அமைப்புக்கள் பலவகையாகக் களத்தில் உள்ளன. கைப்பிடி நீங்கலாகச் சுமார் 15 செ.மீ முதல் 30 செ.மீ வரையில் இக்கத்திகள் பலவடிவங்களாக உள்ளன. போரிடும் இரண்டு நபர்களும் தங்கள் கைகளில் ஒன்றில் கத்தியைப் பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்க முயல்வர். இருவரும் ஒருவர் மற்றவரின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குப் பல உத்திகளைக் கையாள்வர். இக்கலை தற்காப்புக் கலைகளில் ஒன்றாக விளங்குகிறது. பலகையின் முன்பு மனிதனை நிறுத்தி விட்டு அவரைச் சுற்றியும் கத்திகளை வீசுதல் இக்கலையில் குறிக்கத்தக்கது. இக்கலையும் தற்காப்புக்கலையில் ஒன்றாக விளங்குகிறது.

மற்போர்க்கலை

          மற்போர் குறித்து நமது சங்க இலக்கியங்களில் பல செய்திகள் காணப்படுகின்றன. தமிழர்களின் பழமைமிக்கப் போர் முறைகளில் மற்போர் சிறப்புடையதாகும். உடல் வலுமட்டுமின்றி மனவலிமை, புத்திக்கூர்மை இவற்றுடன் உடல்கட்டு இக்கலைக்குத் தேவைப்படுகிறது. ஒத்த வயதுடையோர், எடை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு இக்கலையைப் பயிற்றுவிப்பர். மற்போர்க் கலையைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளிடையே உள்ள மாணவர்களிடையே விழாக்காலங்களில் போட்டிகளை நடத்துவர்.

களரி பயிற்று

          தற்காப்புக் கலைகளில் தமிழர்களின் பாரமபரியப் பெருமையை நிலைநாட்டும் கலையாகக் களரி பயிற்று எனும் தற்காப்புக் கலை விளங்குகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் களரி பயிற்று ஆசிரியர்கள் உள்ளனர். மிகுந்த கட்டுப்பாடும் பயிற்சி முறைகளையும் உள்ளடக்கிய இக்கலை இன்று கேரள மாநிலத்தில் பெருமளவு பயிற்சியில் உள்ளது.

வர்மம்

          வர்மக்கலை தற்காப்புக்கலை மட்டுமல்ல. மருத்துவக் கலையாகவும் விளங்குவது. இக்கலை இன்று மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கின்ற கலையாக உள்ளது. உடற்கூற்றினை நன்கு அறிந்து செயல்பட வேண்டிய கலை வர்மக்கலையாகும். மாணவர்களிடம் நல்ல நம்பிக்கை இருந்தால் மட்டுமே சில கூறுகளையாவது கற்றுக் கொடுப்பர்.

          எலும்பு, நரம்புகளைத் தாக்குவதும் அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதும் சில உறுப்புகளைச் செயல்படாமல் தடுப்பதும் இக்கலையின் சிறப்புக் கூறுகளாகும். இக்கலையும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்காப்புக்  கலைகளைப் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களிடம் வழக்கத்தில் உள்ளது.

துணை நின்ற நூல்கள்

1.  நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள் – முனைவர் அரு.மருததுரை, அருணா வெளியீடு, திருச்சி, முதற்பதிப்பு, 2003.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...