அரவை
தானியங்களை அரைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்தும்
முறைகளில் மரபுவழியான முறைகள் இன்றளவும் நாட்டுப்புறங்களில் பெருவழக்காக உள்ளன. அவற்றில்
திருவை, அம்மி, ஆட்டுக்கல், உரல், கல்வம் ஆகியன குறிக்கத்தக்கன.
திருவை
திருவை எனப்படும் கல் எந்திரம் அரிசி, வரகு,
கம்பு போன்ற உலர்ந்த தானியங்களைப் பொடியாக அரைக்கப் பயன்படுகிறது. கருங்கல், பாறைக்
கல்லில் இந்த இயந்திரம் செய்யப்படுகின்றது. கிழ்ப்பகுதிக் கல்லில் முளைக் குசி வைத்து
மேற்புறத்தில் சுழலும் கல்லை மாட்டி வாய்ப்பகுதியில் தானியங்களைப் போட்டு அரைப்பர்.
உலர்ந்த தானியங்களைத் திருவை எந்திரத்தில் அரைப்பர்.
அம்மி
மிளகாய், கொத்துமல்லி, தேங்காய், போன்ற சமையல்
பொருட்களை வைத்து குழவி எனப்படும் உருளையைக் கொண்டு அரைப்பர். மிளகு சீரகம் போன்றவற்றைப்
பொடிப்பதற்கு இந்தக் கருவி பயன்படுகிறது.
ஆட்டுக்கல்
ஆட்டுக்கல் எனப்படும் அரவை எந்திரம் ஊரவைத்தவற்றை
அரைப்பதற்குப் பயன்படுத்தப்டும் கருவி. மனிதர்களுக்குரிய உணவுப் பொருட்கள் மட்டுமன்றிக்
கால்நடைகளுக்குரிய உணவினையும் ஆட்டுக்கல்லில் ஆட்டித் தயாரிப்பர்.
உரல்
நெல், கம்பு, சோளம், வரகு ஆகியவற்றைக் கல்
உரலில் வைத்து மர உலக்கையில் இரும்புப் பூணிட்டுக் குற்றித் தூய்மை செய்வர். மேலும்
நெல்லைக் குற்றி அரிசியாக்குவர். இன்றளவும் கைக்குத்தல் அரிசி கிராமக் கைத்தொழில் நிலையங்களில்
விற்பனை செய்து வருவதைக் காணலாம். இத்தொழில் நுட்பம் இன்றளவும் தொடர்ந்து நிலைபெற்றுமைக்கு
இது எடுத்துக்காட்டாக அமைகின்றது. குறைந்த அளவு தானியத்தை திருவையிலும் அதிகமான தானியத்தை
உரலிலும் இட்டு மாவு தயாரிப்பர்.
கல்வம்
கல்வம் என்பது நாட்டுப்புற மருத்துவர்கள்
பயன்படுத்தும் சிறு உரல். இதில் பலவகைகள் உள்ளன. மருந்தின் தன்மைக்கும் நோய்களின் நிலைகளுக்கு
ஏற்ப கல்வத்தில் மூலிகைகளை வைத்து அரைப்பது வழக்கில் உள்ளது.
இவ்வாறு நாட்டுப் புற மக்களிடையே அரவைத்
தொழில் நுட்பம் விளங்குகிறது.
பார்வை நூல்
1.
நாட்டுப்புறப்
பண்பாட்டுக் கூறுகள் – முனைவர் அரு. மருததுரை, இணைப் பேராசிரியர், அருணா வெளியீடு,
திருச்சிராப்பள்ளி, முதல் பதிப்பு – 2003.
Comments
Post a Comment